புனேக்கு அருகே மீண்டும் 2020 டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

கடந்த சில வாரங்களாக தொடர் சோதனைகளை தொடர்ந்து தற்போது மீண்டும் புனேக்கு அருகே முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் டாடா நிறுவனத்தின் அடுத்த அறிமுக மாடலான கிராவிட்டாஸ் எஸ்யூவி கார் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புனேக்கு அருகே மீண்டும் 2020 டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

முழுவதும் மறைக்கப்பட்டு இருந்தாலும், இந்த சோதனை கிராவிட்டஸ் மாடல் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அமைப்பை பெற்றுள்ளதை சில இடங்களில் பார்க்க முடிகிறது. அதேபோல் இவ்வாறு முழுக்க முழுக்க மறைப்பால் மறைக்கப்பட்டு சோதனைகளில் உட்படுத்தப்படுவதால் டாடா நிறுவனம் இந்த எஸ்யூவி காரின் டிசைனில் தீவிரமாக பணியாற்றிருப்பதை அறிய முடிகிறது.

புனேக்கு அருகே மீண்டும் 2020 டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய கிராவிட்டாஸ் மாடல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதனுடன் ஒப்பிடுகையில் சில டிசைன் மாற்றங்களுடன் தான் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் விற்பனையில் ஹெரியர் மாடலின் 7 இருக்கை வெர்சனாக இந்த கார் சந்தைப்படுத்தப்படவுள்ளது.

புனேக்கு அருகே மீண்டும் 2020 டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

இதனால் தோற்றத்தில் அதனை அடிப்படையாக கொண்டிருந்தாலும் அதிலிருந்து வேறுபடுவதற்கு சில தோற்ற மாறுதல்களை நிச்சயம் இந்த எஸ்யூவி காரில் எதிர்பார்க்கலாம். இந்த வகையில் தேன்க்கூடு வடிவிலான க்ரில், எல்இடி டெயில்லேம்ப்கள், சதுர வடிவிலான சக்கர ஆர்ச்கள் மற்றும் மேற்கூரை ரெயில்கள் உள்ளிட்டவற்றை புதிய கிராவிட்டாஸ் கொண்டிருக்கும்.

புனேக்கு அருகே மீண்டும் 2020 டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

இவற்றுடன் மேற்கூரையில் பெரிய அளவில் ஸ்பாய்லர், பெரிய டெயில்கேட் & பின்புற கண்ணாடி மற்றும் அகலமான பின் பம்பர் போன்றவையும் இந்த 2020 மாடலில் எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை தவிர்த்து 7 இருக்கை அமைப்புடன் வருவதால் ஹெரியர் மாடலில் இருந்து இதன் பரிணாம அளவுகள் பெரிய அளவில் வேறுப்பட்டிருக்கும்.

புனேக்கு அருகே மீண்டும் 2020 டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

அதாவது ஹெரியரை காட்டிலும் 63மிமீ நீளமானதாகவும், 80மிமீ உயரமானதாகவும் இந்த எஸ்யூவி கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஹெரியர் உடன் ஒத்த 2741மிமீ அளவில் தான் வீல்பேஸை இந்த 7-இருக்கை வெர்சன் காரும் பெற்றுள்ளது. அதேபோல் உட்புறம் டிசைனும் இரண்டிலும் வேறுபாடு இருக்க வாய்ப்பு குறைவு தான்.

புனேக்கு அருகே மீண்டும் 2020 டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

இதன்படி கருப்பு & பழுப்பு நிற கலவையில் உட்புற கேபினை பெற்று வரவுள்ள புதிய கிராவிட்டாஸில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், இன்-கார் கண்ட்ரோல் மற்றும் க்ரோம் பெசல்ஸ் உடன் பியானோ கருப்பு நிறத்தில் திரை, 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் உள்பட அப்டேட்டான சவுகரிய அம்சங்களை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

புனேக்கு அருகே மீண்டும் 2020 டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

மற்றப்படி இயக்க ஆற்றலிற்கு 5-இருக்கை ஹெரியர் எஸ்யூவியின் ஃபியாட்டின் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜினை கிராவிட்டாஸிற்கு டாடா நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய 168 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறன் அளவுகளிலும் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.

புனேக்கு அருகே மீண்டும் 2020 டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

ட்ரான்ஸ்மிஷன் பணியை கவனிக்க இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. புதிய கிராவிட்டாஸ் எஸ்யூவி மாடலை வரும் பண்டிக்கை காலத்தில் அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Tata Gravitas SUV Spotted Testing
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X