Just In
- 7 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 9 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 10 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 10 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
குடியரசு தின சம்பவம்... பட்ஜெட் நாளில் நாடாளுமன்றம் நோக்கி நடத்தவிருந்த விவசாயிகள் பேரணி ஒத்திவைப்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதெல்லாம் வேற லெவல் சாதனை!! இதுவரை 4 மில்லியன் டாடா கார்கள் சாலைக்கு வந்துள்ளனவாம்!
டாடா தொழிற்சாலையில் இருந்து இந்திய சாலைகளுக்கு இதுவரை மொத்தம் 4 மில்லியன் கார்கள் வெளிவந்துள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

4 மில்லியன் கார்கள் விற்பனை என்ற சாதனையை புரிய டாடா நிறுவனத்திற்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. இந்த இமாலய சாதனையை நினைவுக்கூறும் விதமாக, பயணிகள் கார்களின் விற்பனையில் டாடாவின் இத்தனை வருட பயணம் ஒரே சிறப்பு வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்புமிக்க வீடியோவினை பாலிவுட் நடிகர் அனுபம் கெர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 1945ஆம் ஆண்டில் இருந்து ஆரம்பிக்கிறது. அதில் இருந்து தற்போது இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் டாடா மோட்டார்ஸ் எவ்வாறு தவிர்க்க முடியாத கார் தயாரிப்பு நிறுவனமாக மாறியுள்ளது என்பது சுருக்கமாக இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாகன தயாரிப்பில் பல தசாப்தங்களாக இருந்தாலும், கார் தயாரிப்பில் டாடா நிறுவனம் சற்று புதியதுதான். இதனால் இந்நிறுவனத்திடம் இளம் தயாரிப்புகள் மட்டுமில்லாமல், பாதுகாப்பு அம்சங்கள்மிக்க தயாரிப்புகளும் உள்ளன. தற்சமயம் டாடா பிராண்டில் டியாகோ, டிகோர், நெக்ஸான், அல்ட்ராஸ் மற்றும் ஹெரியர் கார்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

"இந்தியாவின் முதன்மையான ஆட்டோமோட்டிவ் பிராண்ட்டாக விளங்கும் நாங்கள், பயணிகள் வாகன பிரிவில் இத்தகைய மைல்கல்லை அடைந்திருப்பது உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது" என டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன வணிக பிரிவின் முதன்மை அதிகாரி விவேக் ஸ்ரீவஸ்தாவா கூறியுள்ளார்.

"இந்த வீடியோ கடந்த 30 ஆண்டுகளில் நமது பரிணாம வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், இந்த காலகட்டத்தில் இந்தியா ஒரு தேசமாக கண்ட வளர்ச்சிக்கும் ஒரு சான்று" எனவும் அவர் கூறினார். மாருதி சுஸுகி மற்றும் தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸுக்கு பிறகு இந்திய சந்தையில் பயணிகள் வாகன பிரிவில் மூன்றாவது பெரிய கார் பிராண்டாக டாடா விளங்குகிறது.

இந்த மூன்றாவது இடத்திற்கு, இந்திய சந்தைக்கு புதியதான கியா மோட்டார்ஸும் ஒருபக்கம் மல்லுக்கட்டி வருகிறது. டாடாவிற்கு மிக பெரிய வெற்றியினை குறுகிய காலத்தில் நெக்ஸான் பெற்று கொடுத்தது. ஆனால் இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் நெக்ஸானையும் முந்தி கொண்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் வேகமாக பிரபலமாகி வருகிறது.

டாடா நெக்ஸான் கார்கள் இதுவரை 1.5 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்க, டியாகோவின் விற்பனை எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. டாடா ஹெரியருக்கு ஆரம்பத்தில் சில சறுக்கல்கள் இருந்தபோதிலும், தற்போது இந்த டாடா காரும் கணிசமான வாடிக்கையாளர்களை பெற்று வருகிறது.

டாடா கார்களுக்கு கிடைக்கும் இத்தகைய வரவேற்பிற்கு முக்கிய காரணம் உலகளாவிய என்கேப் சோதனையில் அவற்றிற்கு கிடைத்துள்ள மதிப்பீடுகள்தான் என்றால், அது மிகையில்லை. ஏனெனில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடத்தப்படும் இந்த சோதனையில் டாடா நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் கார்கள் 5/5 என்ற முழு மதிப்பெண்களை பெற்றுள்ளன.
ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350? உங்களுக்கான பதில் இந்த வீடியோவில்!
டியாகோ மற்றும் டிகோர் கார்கள் நான்கு நட்சத்திரங்களை பெற்றுள்ளன. டாடா மோட்டார்ஸின் அடுத்த அறிமுக மாடல்களின் வரிசையில் எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி மற்றும் ஹெரியரின் ஏழு-இருக்கை வெர்சனாக கிராவிட்டாஸ் உள்ளிட்டவை உள்ளன.