டியாகோவின் சேவை இடைவெளியை 1 வருடமாக்கியது டாடா மோட்டார்ஸ்!! காரை தாராளமாக 15,000கிமீ இயக்கலாம்

டியாகோ ஹேட்ச்பேக் காரின் சேவை இடைவெளியை 6 மாதத்தில் இருந்து 1 வருடம்/ 15,000 கிமீ-ஆக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. டீம்பிஎச்பி செய்திதளம் வெளியிட்டுள்ள கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டியாகோவின் சேவை இடைவெளியை 1 வருடமாக்கியது டாடா மோட்டார்ஸ்!! காரை தாராளமாக 15,000கிமீ இயக்கலாம்

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸின் பிரபலமான ஹேட்ச்பேக் காராக டியாகோ விளங்கி வருகிறது. உலகளாவிய என்சிஏபி பாதுகாப்பு சோதனையில் ஐந்திற்கு நான்கு மதிப்பீடுகளை பெற்ற அசத்தியிருந்த இந்த டாடா காருக்கு ஆரம்ப முதல் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

டியாகோவின் சேவை இடைவெளியை 1 வருடமாக்கியது டாடா மோட்டார்ஸ்!! காரை தாராளமாக 15,000கிமீ இயக்கலாம்

இதற்கு காரணம், அறிமுகத்தில் இருந்தே டியாகோவில் கணிசமான இடைவெளி காலத்தில் அப்டேட்களை டாடா நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த அப்டேட்களில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் ஹெட்-யூனிட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

டியாகோவின் சேவை இடைவெளியை 1 வருடமாக்கியது டாடா மோட்டார்ஸ்!! காரை தாராளமாக 15,000கிமீ இயக்கலாம்

2020 ஜனவரியில் டியாகோ மாடல் மிக முக்கியமான டிசைன் அப்டேட்டை பெற்றது. இவற்றை தொடர்ந்து சமீபத்தில் காரின் கதவு பேட்கள் மற்றும் பூட்டு டிசைனையும் டாடா நிறுவனம் அப்டேட் செய்திருந்தது. டியாகோ கார் தற்போது ரீ-டிசைனிலான ஆர்ம் ரெஸ்ட் மற்றும் புதிய கதவு பூட்டுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டியாகோவின் சேவை இடைவெளியை 1 வருடமாக்கியது டாடா மோட்டார்ஸ்!! காரை தாராளமாக 15,000கிமீ இயக்கலாம்

இதற்கு முன் இந்த இடத்தில் தள்ளு/இழு ஸ்டைலில் பூட்டுகள் இருந்தன. இந்த நிலையில் தான் தற்போது டியாகோ ஹேட்ச்பேக் காருக்கான சேவை அட்டவணையை டாடா நிறுவனம் திருத்தியமைத்துள்ளது. ஆனால் டியாகோ உரிமையாளர்கள் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் கார் சேவையினை பெறுவது சிறந்தது.

டியாகோவின் சேவை இடைவெளியை 1 வருடமாக்கியது டாடா மோட்டார்ஸ்!! காரை தாராளமாக 15,000கிமீ இயக்கலாம்

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு டியாகோவில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டட் மேனுவல் என்ற இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

டியாகோவின் சேவை இடைவெளியை 1 வருடமாக்கியது டாடா மோட்டார்ஸ்!! காரை தாராளமாக 15,000கிமீ இயக்கலாம்

முன்பு வழங்கப்பட்டு வந்த டீசல் என்ஜின் தேர்வை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிறுத்திவிட்டது. அதற்கு பதிலாக டியாகோவில் டர்போ-பெட்ரோல் வெர்சனை கொண்டுவர அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. டாடா டியாகோ ஹேட்ச்பேக் காரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.4.70 லட்சத்தில் இருந்து ரூ.6.70 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles

English summary
Tata Tiago service interval changed from 6 months to 1 year
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X