டாடா டிகோர் மற்றும் டியாகோ கார்களின் விலைகள் திருத்தியமைப்பு... புதிய விலை vs பழைய விலை

இந்திய சந்தையில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் விற்பனை கார்களின் விலைகளை திருத்தியமைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா டிகோர் மற்றும் டியாகோ கார்களின் விலைகள் திருத்தியமைப்பு... புதிய விலை vs பழைய விலை

டாடா நிறுவனத்தின் இந்த திருத்தியமைக்கும் செயல்பாட்டினால் டிகோர் மற்றும் டியாகோ மாடல்கள் புதிய விலைகளை அவற்றின் வேரியண்ட்களுக்கு பெற்றுள்ளன. டாடா டியாகோ பிஎஸ்6 மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் அறிமுகமாகி இருந்தது.

டாடா டிகோர் மற்றும் டியாகோ கார்களின் விலைகள் திருத்தியமைப்பு... புதிய விலை vs பழைய விலை

அந்த சமயத்தில் டாடா நிறுவனம் அதன் மொத்த தயாரிப்புகளின் விற்பனையையும் கணிசமாக உயர்த்தி இருந்தது. டியாகோ மாடலில் பிஎஸ்6 அப்டேட் அதன் பெட்ரோல் என்ஜினில் மட்டும் தான் கொண்டுவரப்பட்டது. டீசல் வேரியண்ட்டின் தயாரிப்பு ஜனவரி மாதத்தில் இருந்து நிறுத்தப்பட்டுவிட்டன.

டாடா டிகோர் மற்றும் டியாகோ கார்களின் விலைகள் திருத்தியமைப்பு... புதிய விலை vs பழைய விலை

டாடா நிறுவனத்தின் சிறந்த விற்பனை மாடலாக விளங்கும் டியாகோ கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 5,337 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இது 2019 ஜூலை மாதத்தை காட்டிலும் 13.82 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு நிறுவனத்திற்கு லாபத்தை பெற்று தரும் மாடலாக விளங்கினாலும் டியாகோவின் எக்ஸ்ஷோரூம் விலைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.

டாடா டிகோர் மற்றும் டியாகோ கார்களின் விலைகள் திருத்தியமைப்பு... புதிய விலை vs பழைய விலை

இதுகுறித்து வெளியாகியுள்ள அட்டவணையின்படி பார்த்தோனேயானால், டியாகோவின் எக்ஸ்இ வேரியண்ட் ரூ.9 ஆயிரம் விலை உயர்வுடன் ரூ.4.69 லட்சத்தை எக்ஸ்ஷோரூம் விலையாக பெற்றுள்ளது. எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டான இது மட்டும் தான் குறைவான விலை உயர்வை ஏற்றுள்ளது.

Tiago New Price Old Price Difference
XE ₹4,69,000 ₹4,60,000 ₹9,000
XT ₹5,33,000 ₹5,20,000 ₹13,000
XZ ₹5,83,000 ₹5,70,000 ₹13,000
XZ+ ₹6,12,000 ₹5,99,000 ₹13,000
XZ+ DT ₹6,23,000 ₹6,10,000 ₹13,000
XZA ₹6,33,000 ₹6,20,000 ₹13,000
XZA+ ₹6,62,000 ₹6,49,000 ₹13,000
XZA+ DT ₹6,73,000 ₹6,60,000 ₹13,000
Tigor New Price Old Price Difference
XE ₹5,39,000 ₹5,75,000 ₹-36,000
XM ₹5,99,000 ₹6,10,000 ₹-11,000
XZ ₹6,40,000 ₹6,50,000 ₹-10,000
XZ+ ₹6,99,000 ₹6,99,000 0
XMA ₹6,49,000 ₹6,60,000 ₹-11,000
XZA+ ₹7,49,000 ₹7,49,000 0
டாடா டிகோர் மற்றும் டியாகோ கார்களின் விலைகள் திருத்தியமைப்பு... புதிய விலை vs பழைய விலை

மற்ற வேரியண்ட்கள் அனைத்தும் ரூ.13 ஆயிரம் வரையில் விலை உயர்வை பெற்றுள்ளன. டியாகோவின் டாப் வேரியண்ட்டான எக்ஸ்இசட்ஏ+ டிடி முன்பு ரூ.6.60 லட்சத்தில் விற்பனையாகி வந்தது. ஆனால் இனி இந்த டாப் வேரியண்ட்டின் விலை ரூ.6.73 லட்சமாகும். இத்தகைய விலை அதிகரிப்பினால் டியாகோவின் டீசல் வேரியண்ட் வெளிவருமா என்பது தெரியவில்லை.

டாடா டிகோர் மற்றும் டியாகோ கார்களின் விலைகள் திருத்தியமைப்பு... புதிய விலை vs பழைய விலை

அப்படியே டாடாவின் காம்பெக்ட் செடான் ரக காரான டிகோரை பார்த்தால், அதன் வேரியண்ட்கள் எதுவும் விலை அதிகரிப்பை பெறவில்லை. மாறாக இரு வேரியண்ட்களை தவிர்த்து மற்ற அனைத்து வேரியண்ட்களும் விலை குறைப்பை தான் ஏற்றுள்ளன. அதிலும் ஹைலைட்டாக எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் எக்ஸ்இ-ன் விலை ரூ.36,000 குறைக்கப்பட்டுள்ளது.

டாடா டிகோர் மற்றும் டியாகோ கார்களின் விலைகள் திருத்தியமைப்பு... புதிய விலை vs பழைய விலை

இதன் காரணமாக டிகோர் மாடலின் ஆரம்ப விலை ரூ.5.39 லட்சமாக குறைந்துள்ளது. டாப் வேரியண்ட்டான எக்ஸ்இசட்ஏ+-ன் விலையில் எந்த மாற்றமுமில்லை. ரூ.7.49 லட்சமாக தான் உள்ளது. டாடா விற்பனை செய்துவரும் கார்களிலேயே மிகவும் சிறிய ரக காராக விளங்கும் டிகோர் கடந்த ஜூலை மாதத்தில் 727 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

Most Read Articles

English summary
Tata motors has revised prices of Tigor and Tiago
Story first published: Tuesday, August 11, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X