இப்படி ஒரு காரை வாங்கியிருக்கிறாரா பாடகர் ஷங்கர் மஹாதேவன்! விலையை விட காருல இருக்கும் அம்சங்கள் வேற லெவல்!

பிரபல பாடகர் ஷங்கர் மஹாதேவன் கியா (Kia) நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்காரின் விலை மற்றும் சொகுசு வசதிகள் குறித்த சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

இப்படி ஒரு காரை வாங்கியிருக்கிறாரா பாடகர் ஷங்கர் மஹாதேவன்! விலையை விட காருல இருக்கும் அம்சங்கள் வேற லெவல்!

கியா (Kia) நிறுவனத்தின் மிக அதிக சொகுசு வசதிகள் நிறைந்த கார் மாடலாக கார்னிவல் எம்பிவி (Carnival MPV) ரக கார் இருக்கின்றது. உலகின் முன்னணி சொகுசு வாகன உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்ட காராக கியா கார்னிவல் எம்பிவி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இப்படி ஒரு காரை வாங்கியிருக்கிறாரா பாடகர் ஷங்கர் மஹாதேவன்! விலையை விட காருல இருக்கும் அம்சங்கள் வேற லெவல்!

எனவேதான், தொழிலதிபர்கள் தொடங்கி திரைப் பிரபலங்கள் வரை பலர் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இத்தகைய ஓர் காரையே பிரபல பாடகர் ஷங்கர் மஹாதேவன் வங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

இப்படி ஒரு காரை வாங்கியிருக்கிறாரா பாடகர் ஷங்கர் மஹாதேவன்! விலையை விட காருல இருக்கும் அம்சங்கள் வேற லெவல்!

கியா கார்னிவல் எம்பிவி சொகுசு காருக்கு குறிப்பாக மலையாள திரைப் பிரபலங்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. முன்னணி மலையாள நடிகரான மோகன்லால் தொடங்கி பலர் அக்காரை பயன்படுத்தி வருகின்றார். சமீபத்தில் தெலங்கானா மாநில அரசு, தனது மாநில ஆட்சியர்களின் பயன்பாட்டிற்காக 32 யூனிட் கார்னிவல் எம்பிவி சொகுசு காரை வாங்கியது.

இப்படி ஒரு காரை வாங்கியிருக்கிறாரா பாடகர் ஷங்கர் மஹாதேவன்! விலையை விட காருல இருக்கும் அம்சங்கள் வேற லெவல்!

இந்தளவிற்கு தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசு துறைகளைக் கவர்ந்த சொகுசு வாகனமாக கியா கார்னிவல் எம்பிவி தற்போது மாறியிருக்கின்றது. இத்தகைய புகழ் மிக்க காரையே பாடகர் ஷங்கர் மஹாதேவன் தற்போது வாங்கியுள்ளார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இப்படி ஒரு காரை வாங்கியிருக்கிறாரா பாடகர் ஷங்கர் மஹாதேவன்! விலையை விட காருல இருக்கும் அம்சங்கள் வேற லெவல்!

கியா கார்னிவல் இந்தியாவில் ரூ. 24.95 லட்சம் தொடங்கி ரூ. 33.95 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த அதிகபட்ச விலைக்கு ஏற்ப பல்வேறு தரமான சொகுசு சொகுசு வசதிகளை இக்கார் பெற்றிருக்கின்றது. வேரியண்டிற்கு ஏற்ப பிரீமியம் அம்சங்களை நிறுவனம் வாரி வழங்கியிருக்கின்றது.

இப்படி ஒரு காரை வாங்கியிருக்கிறாரா பாடகர் ஷங்கர் மஹாதேவன்! விலையை விட காருல இருக்கும் அம்சங்கள் வேற லெவல்!

பிரீமியம், பிரெஸ்டிஜ் மற்றும் லிமோசைன் என மூன்று விதமான ட்ரிம்களில் கியா கார்னிவல் எம்பிவி விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில், பாடகர் ஷங்கர் மஹாதேவன், 7 இருக்கைகள் வசதிகள் கொண்ட பிரீமியம் ட்ரிம்மை வாங்கியிருக்கின்றார். இந்த ட்ரிம்மில் பிற ட்ரிம்களைக் காட்டிலும் சிறப்பு அம்சங்கள் குறைவுதான். ஆனால், தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இப்படி ஒரு காரை வாங்கியிருக்கிறாரா பாடகர் ஷங்கர் மஹாதேவன்! விலையை விட காருல இருக்கும் அம்சங்கள் வேற லெவல்!

அந்தவகையில், 18 இன்சிலான ட்யூவல் டோன் அலாய் வீல்கள், எல்இடி டிஆர்கள் உடன் கூடிய தானியங்கி புரஜெக்டர் ஹெட்லேம்ப், மூன்று விதமான க்ளைமேட் கன்ட்ரோல், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக்கல்லி ஆபரேட்டிங் ஸ்லைடிங் கதவுகள், டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் ஸ்டியரிங் வீல் அட்ஜெஸ்ட்மெண்ட் வசதி, பவர் விண்டோ உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

இப்படி ஒரு காரை வாங்கியிருக்கிறாரா பாடகர் ஷங்கர் மஹாதேவன்! விலையை விட காருல இருக்கும் அம்சங்கள் வேற லெவல்!

இவற்றுடன், ஆர்ம் ரெஸ்ட் ஸ்டோரேஜ் வசதி உடன், சன்கிளாஸ் தாங்கிகள், ஓட்டுநர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, புஷ் பட்டன்/ஸ்டார்ட், எலெ்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் கண்ணாடிகள், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ டிபாஃக்கர், ரியர் பார்க்கிங் கேமிரா என இன்னும் பல எக்கசக்க அம்சங்கள் பிரீமியம் வேரியண்டில் இடம் பெற்றிருக்கின்றன.

இப்படி ஒரு காரை வாங்கியிருக்கிறாரா பாடகர் ஷங்கர் மஹாதேவன்! விலையை விட காருல இருக்கும் அம்சங்கள் வேற லெவல்!

இதில் இடம் பெறாத அம்சங்கள் மிகவும் குறைவே. லெதர் இருக்கை போன்ற ஒரு சில அம்சங்கள் மட்டுமே இல்லாத நிலை பிரீமியம் ட்ரிம்மில் காட்சியளிக்கின்றது. இத்தகைய ஓர் தரமான சூப்பர் லக்சுரி காரையே பிரபல பாடகர் தற்போது வாங்கியிருக்கின்றார். அவர் கார் வாங்கியது குறித்த வீடியோவை ப்ளஸ் டிரைவ் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது.

இப்படி ஒரு காரை வாங்கியிருக்கிறாரா பாடகர் ஷங்கர் மஹாதேவன்! விலையை விட காருல இருக்கும் அம்சங்கள் வேற லெவல்!

புதிய கியா கார்னிவல் எம்பிவி சொகுசு காரை தனது குடும்பத்தினருடன் வந்து டெலிவரி எடுப்பதுபோன்ற காட்சிகளை யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது. கியா கார்னிவல் எம்பிவி கார் தான் மிகவும் பிடத்து வாங்கியதாக அவ்வீடியோவில் பாடகர் கூறுவதை நம்மால் கேட்க முடிகின்றது. ஆகையால், இனி அவரின் பெரும்பாலான பயணங்கள் சொகுசு வசதிகள் நிறைந்த கார்னிவல் எம்பிவியில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கியா கார்னிவல் இந்தியாவில் இன்னோவா க்ரிஸ்டா, டொயோட்டா வெல்ஃபையர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் ஆகிய கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டொயோட்டா வெல்ஃபையர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் ஆகிய இரு கார் மாடல்களைக் காட்டிலும் மிகவும் குறைவான விலையில் கார்னிவல் எம்பிவி விற்பனையில் இருக்கின்றது.

இப்படி ஒரு காரை வாங்கியிருக்கிறாரா பாடகர் ஷங்கர் மஹாதேவன்! விலையை விட காருல இருக்கும் அம்சங்கள் வேற லெவல்!

கியா கார்னிவல் எம்பிவி காரில் 2.2 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 200 பிஎஸ் மற்றும் 440 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டார் 8 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் இயங்குகிறது.

இப்படி ஒரு காரை வாங்கியிருக்கிறாரா பாடகர் ஷங்கர் மஹாதேவன்! விலையை விட காருல இருக்கும் அம்சங்கள் வேற லெவல்!

இந்த காரை போலவே இன்னும் ஓர் புதிய ரக எம்பிவி மாடலை இந்தியாவில் களமிறக்கும் பணியில் கியா நிறுவனம் தற்போது களமிறங்கியிருக்கின்றது. மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா மற்றும் மராஸ்ஸோ ஆகிய கார்களுக்கு போட்டியாக அது விரைவில் விற்பனைக்குக் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Famous singer shankar mahadevan buys kia carnival mpv
Story first published: Friday, September 17, 2021, 10:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X