Just In
- 1 hr ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொரோனா பிரச்னைக்கு மத்தியிலும் அசத்தல்... 2020ம் ஆண்டில் இவ்வளவு கார்களை லம்போர்கினி விற்பனை செய்துள்ளதா?
2020ம் ஆண்டில் லம்போர்கினி நிறுவனம் எவ்வளவு கார்களை விற்பனை செய்துள்ளது? என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2020ம் ஆண்டில் விஸ்வரூபமெடுத்த கொரோனா வைரஸ் பிரச்னை, அதன் விளைவாக உண்டான வேலையிழப்பு உள்ளிட்ட மற்ற பிரச்னைகள் காரணமாக சொகுசு கார் சந்தை மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் என நீங்கள் நினைத்தால், உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். ஏனெனில் கடந்த 2020ம் ஆண்டில் லம்போர்கினி நிறுவனம் 7,430 கார்களை விற்பனை செய்துள்ளது.

2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2020ம் ஆண்டில் லம்போர்கினி நிறுவன கார்களின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால் வீழ்ச்சி சதவீதம் 10க்கும் குறைவாகவே உள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு ஆண்டில் 10 சதவீதத்திற்கும் குறைவான வீழ்ச்சி என்பது ஓரளவிற்கு நல்ல விஷயம்தான்.

2020ம் ஆண்டின் முதல் பாதியில் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக லம்போர்கினி கார்களின் உற்பத்தி சுமார் 70 நாட்கள் பாதிக்கப்பட்டது. ஆனால் 2020ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் லம்போர்கினி நிறுவனம் சரிவில் இருந்து உடனடியாக மீண்டு வந்தது. லம்போர்கினி நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்காவில் 2,224 கார்களை விற்பனை செய்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக ஜெர்மனியில் 607 கார்களையும், சீனா மற்றும் ஹாங்காங்கில் 604 கார்களையும் விற்பனை செய்துள்ளது. மேலும் ஜப்பான் மற்றும் இங்கிலாந்து நாடுகளில் முறையே 600 மற்றும் 517 கார்களை லம்போர்கினி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 2020ம் ஆண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட லம்போர்கினி கார் என்ற பெருமையை உருஸ் பெற்றுள்ளது.

இது எஸ்யூவி ரக கார் ஆகும். 10,000 யூனிட்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை லம்போர்கினி உருஸ் கடந்த 2020ம் ஆண்டுதான் கடந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கடந்த 2020ம் ஆண்டில் லம்போர்கினி நிறுவனம் மொத்தம் 4,391 உருஸ் எஸ்யூவி கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து அசத்தியுள்ளது.

இந்தியாவிலும் லம்போர்கினி உருஸ் மிகவும் பிரபலமான எஸ்யூவி காராக திகழ்ந்து வருகிறது. இந்திய சாலைகளில் எளிதாக ஓட்டுவதற்கு ஏற்ற லம்போர்கினி மாடலாக உருஸ் எஸ்யூவி உள்ளது. எனவே திரைத்துறையினர் மற்றும் தொழிலதிபர்கள் உள்பட பிரபலமான மனிதர்கள் பலர் லம்போர்கினி உருஸ் எஸ்யூவியை சொந்தமாக வைத்துள்ளனர்.

2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பிரச்னைக்கு மத்தியிலும் லம்போர்கினி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 6 புதிய கார்களை விற்பனைக்கு கொண்டு வந்தது. பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் லம்போர்கினி நிறுவனம் 2020ம் ஆண்டை ஓரளவிற்கு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், 2021ம் ஆண்டு அந்நிறுவனத்திற்கு சிறப்பானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ஒரு ஆண்டுக்கு லம்போர்கினி நிறுவனத்தால் எவ்வளவு கார்களை உற்பத்தி செய்ய முடியுமோ அதில் பாதி அளவிற்கு தற்போதே முன்பதிவுகள் குவிந்து விட்டன. இந்த தகவலை லம்போர்கினி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. எனவே 2021ம் ஆண்டில் லம்போர்கினி நிறுவனம் இன்னும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை உறுதி செய்யும் என எதிர்பார்க்கலாம்.