செம பவர்ஃபுல் எஞ்சின் தேர்வுகள், சூப்பரான வசதிகள்... பிரிமீயம் எஸ்யூவிகளை மிரட்டும் புதிய ஸ்கோடா கோடியாக்!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி உலக அளவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் பல முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் மிக முக்கிய போட்டியாளராக ஸ்கோடா கோடியாக் இருந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி வெளியிடப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

புதிய க்ரில் அமைப்பு, மறுவடிவமைப்பு பெற்ற க்ளஸ்ட்டர்களுடன் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. புதிய வடிவமைப்பில் முன்புற, பின்புற பம்பர்கள், ரியர் ஸ்பாய்லர், புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 17 அங்குலம் முதல் 20 அங்குலம் வரையிலான அளவுகளில் கிடைக்கும். இந்தியாவில் 20 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் 10.25 அங்குல வெர்ச்சுவல் காக்பிட், 9.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், எல்இடி ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், 2 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை முக்கிய ம்சங்களாக இருக்கின்றன.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

இந்த காரில் முன்புற கதவில் இரண்டு கூடுதல் ஸ்பீக்கர்களுடன் 10 ஸ்பீக்கர்கள் மற்றும் சப் ஊஃபர் கொண்ட கேன்டன் மியூசிக் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், டேஷ்போர்டில் எந்தவிதமான பெரிய மாற்றங்களும் இல்லை. புதிய அப்ஹோல்ஸ்ட்ரி, தையல் வேலைப்பாடுகள் உட்புறத்தை மேலும் பிரிமீயமாக மாற்றியுள்ளது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஸ்டைல், ஆம்பிஷன், ஸ்போர்ட்லைன், எல் அண்ட் கே மற்றும் ஆர்எஸ் வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வரும். அனைத்து வேரியண்ட்டுகளிலும் இரண்டு பெட்ரோல், ஒரு டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படும். ஆனால், பவரை வெளிப்படுத்தும் திறனில் வேறுபடும்.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் இடம்பெறும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 148 பிஎச்பி பவரை வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். ஃப்ரண்ட் வீல் டிரைவ் கொண்டதாக வருகிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

இதன் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 148 பிஎச்பி பவரை வழங்கும் ஒரு மாடலிலும், 198 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் மற்றொரு மாடலிலும் வர இருக்கிறது. டீசல் எஞ்சினுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படும். அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் பவர் செலுத்தும் திறனுடன் வர இருக்கிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

மூன்றாவதாக 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலானது 188 பிஎச்பி பவர் அல்லது 243 பிஎச்பி பவரை வழங்கும் மாடல்களில் கிடைக்கும். இதனுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படும். ஆல் வீல் டிரைவ் கொண்டதாக இருக்கும். இதில், 243 பிஎச்பி பவரை வழங்கும் மாடலானது ஆர்எஸ் டாப் வேரியண்ட்டாக இருக்கும். விரைவில் இந்தியாவில் இந்த புதிய 7 சீட்டர் மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
The 2021 Skoda Kodiaq facelift has been unveiled. It comes with a few subtle updates to the exterior. Changes have also been made to the interior of the SUV. It is expected to be launched soon.
Story first published: Wednesday, April 14, 2021, 16:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X