கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி! அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி சுஸுகி எர்டிகா, எக்ஸ்எல்6!

2022 மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 கார்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி! அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி சுஸுகி எர்டிகா, எக்ஸ்எல்6!

கடந்த சில மாதங்களாக மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. புதிய தலைமுறை செலிரியோ, செலிரியோ சிஎன்ஜி, 2022 பலேனோ, 2022 வேகன் ஆர், டிசையர் சிஎன்ஜி என மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து தொடர்ந்து ஏராளமான கார்கள் விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன.

கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி! அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி சுஸுகி எர்டிகா, எக்ஸ்எல்6!

2022ம் ஆண்டு தொடங்கி 3 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளதால், நடப்பாண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டின் மத்தியில் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி! அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி சுஸுகி எர்டிகா, எக்ஸ்எல்6!

அதற்கு முன்பாக மேம்படுத்தப்பட்ட 2022 எர்டிகா மற்றும் 2022 எக்ஸ்எல்6 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த 2 கார்களும் வரும் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. 2022 மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஆகிய 2 கார்களும் ஏற்கனவே இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி! அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி சுஸுகி எர்டிகா, எக்ஸ்எல்6!

அவ்வாறு சோதனை செய்யப்படும்போது சமீப காலங்களில் அவை பலமுறை கேமராவின் கண்களில் சிக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 2022 மாருதி சுஸுகி எர்டிகா காரில், புதிய 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி! அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி சுஸுகி எர்டிகா, எக்ஸ்எல்6!

மாருதி சுஸுகி எர்டிகா காரில் தற்போதைய நிலையில் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்பட்டு வருகிறது. மிக நீண்ட காலமாக இருந்து வரும் இந்த கியர் பாக்சுக்கு பதிலாக, புதிய 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி! அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி சுஸுகி எர்டிகா, எக்ஸ்எல்6!

ஸ்பை படங்களை வைத்து பார்க்கையில், 2022 மாருதி சுஸுகி எர்டிகா காரானது, புதிய க்ரில் அமைப்பை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் காரின் உட்புறத்திலும் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பெரிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் 2022 எர்டிகாவில் வழங்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி! அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி சுஸுகி எர்டிகா, எக்ஸ்எல்6!

இந்த பெரிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் 2022 மாருதி சுஸுகி பலேனோ காரில் வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதேபோல் 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரிலும் பல்வேறு மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் மேம்படுத்தப்பட்ட க்ரில் மற்றும் பம்பர்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி! அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி சுஸுகி எர்டிகா, எக்ஸ்எல்6!

மேலும் புதிய வசதிகள் மற்றும் உபகரணங்கள் மூலம், எக்ஸ்எல்6 காரின் 2022 மாடலின் கேபினை மாருதி சுஸுகி நிறுவனம் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரில், எர்டிகாவை போன்றே, 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் (K15B) மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டு வருகிறது.

கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி! அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி சுஸுகி எர்டிகா, எக்ஸ்எல்6!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதே இன்ஜின் புதிய மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா கேரன்ஸ் மூலம் போட்டி அதிகரித்துள்ள நிலையில், எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 கார்களின் புதிய மாடல்களின் வருகை, மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி! அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி சுஸுகி எர்டிகா, எக்ஸ்எல்6!

எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ள கியா கேரன்ஸ் கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சவாலான விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கியா கேரன்ஸ் காருக்கு இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இது இந்திய சந்தையில் கியா நிறுவனம் களமிறக்கியுள்ள 4வது கார் ஆகும்.

கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி! அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி சுஸுகி எர்டிகா, எக்ஸ்எல்6!

செல்டோஸ், கார்னிவல் மற்றும் சொனெட் ஆகிய கார்களை தொடர்ந்து கேரன்ஸ் காரை கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய கார்களுடன் மட்டுமல்லாது, மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலை குறைவான வேரியண்ட்களுடனும் கியா கேரன்ஸ் போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி! அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி சுஸுகி எர்டிகா, எக்ஸ்எல்6!

இதற்கிடையே புதிய எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 கார்கள் மட்டுமல்லாது, தனது நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் கார்களின் சிஎன்ஜி மாடல்களை அதிகளவில் அறிமுகம் செய்வதிலும் மாருதி சுஸுகி நிறுவனம் தீவிரமாக உள்ளது. இதன்படி புதிய மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

Most Read Articles
English summary
2022 maruti suzuki ertiga xl6 mpv s india launch details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X