சத்தமே இல்லாமல் நெக்ஸான் இவி பிரைம் காரை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ்... இதோட ஸ்டார்ட்டிங் விலை எவ்வளவு?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அது விற்பனைக்கு வழங்கி வந்த நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் காரை நெக்ஸான் இவி பிரைம் (Tata Nexon EV Prime) அறிமுகத்தின் வாயிலாக ரீ-பிளேஸ் செய்திருக்கின்றது. இவ்வாகனம் குறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

சத்தமே இல்லாமல் நெக்ஸான் இவி பிரைம் காரை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ்... இதோட ஸ்டார்ட்டிங் விலை எவ்வளவு தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அண்மையில் அதிகம் ரேஞ்ஜ் தரக் கூடிய நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது, ஓர் முழு சார்ஜில் 430-க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜை தரும். நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கில் இந்த அதிக ரேஞ்ஜ் தரும் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் களமிறக்கியது.

சத்தமே இல்லாமல் நெக்ஸான் இவி பிரைம் காரை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ்... இதோட ஸ்டார்ட்டிங் விலை எவ்வளவு தெரியுமா?

வழக்கமான நெக்ஸான் இவி-க்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே இப்புதிய வெர்ஷனுக்கும் இந்தியர்கள் மத்தியில் கணிசமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழக்கமான நெக்ஸான் இவி (Tata Nexon EV) -யை ரீ-பிளேஸ் செய்யும் வகையில், 'நெக்ஸான் இவி பிரைம்' (Tata Nexon EV Prime) -ஐ விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சத்தமே இல்லாமல் நெக்ஸான் இவி பிரைம் காரை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ்... இதோட ஸ்டார்ட்டிங் விலை எவ்வளவு தெரியுமா?

நிறுவனம் சத்தமே இல்லாமல் இந்த வாகனத்தை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. சில நாட்களுக்கு முன்னர் நெக்ஸான் இவி மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் ஆகிய இரு வெர்ஷன்களின் விலையையும் நிறுவனம் உயர்த்தியிருந்தது. ரூ. 20 ஆயிரம் தொடங்கி ரூ. 60 ஆயிரம் வரையில் இவற்றின் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது.

சத்தமே இல்லாமல் நெக்ஸான் இவி பிரைம் காரை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ்... இதோட ஸ்டார்ட்டிங் விலை எவ்வளவு தெரியுமா?

சமீப காலமாக வாகன கட்டுமான பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதைக் காரணம் காட்டி இந்த விலையுயர்வு நிகழ்த்தப்பட்டது. இதுமட்டுமில்ல புதிய அப்கிரேடும் இந்த விலையுயர்வு காரணம் என்பது நிறுவனத்தின் இந்த சைலண்ட் லான்ச் நமக்கு தெரியப்படுத்தியிருக்கின்றது.

சத்தமே இல்லாமல் நெக்ஸான் இவி பிரைம் காரை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ்... இதோட ஸ்டார்ட்டிங் விலை எவ்வளவு தெரியுமா?

நெக்ஸான் இவி பிரைம் ரூ. 14.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும். நெக்ஸான் இவி-யில் பயன்படுத்தப்பட்டிருந்த அதே மின்சார மோட்டார் மற்றும் பேட்டரி பேக்கே புதிய நெக்ஸான் இவி பிரைமில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கூடுதல் பிரீமியம் அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

சத்தமே இல்லாமல் நெக்ஸான் இவி பிரைம் காரை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ்... இதோட ஸ்டார்ட்டிங் விலை எவ்வளவு தெரியுமா?

மல்டி மோட் ரீஜென் ஃபங்க்சன், ஆட்டோமேட்டிக் பிரேக் லேம்ப் ஆக்டிவேசன் தொழில்நுட்பம், க்ரூஸ் கன்ட்ரோல், ஐ-டிபிஎம்எஸ் மற்றும் ஸ்மார்ட் இணைப்பு அம்சம் ஆகியவையே கூடுதல் அம்சங்களாக புதிய நெக்ஸான் இவி பிரைமில் வழங்கியிருக்கின்றது, டாடா. இந்த சிறப்பு வசதியை தற்போது நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தி வருபவர்களாலும் பெற்றுக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

சத்தமே இல்லாமல் நெக்ஸான் இவி பிரைம் காரை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ்... இதோட ஸ்டார்ட்டிங் விலை எவ்வளவு தெரியுமா?

பைசா செலவில்லாமல் இலவசமாக ஓடிஏ அப்டேட் வாயிலாக இதனை நெக்ஸான் இவி வாடிக்கையாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், வரும் 25 ஜூலையில் இருந்தே அவர்களால் பெற்றுக் கொள்ள முடியும். புதிய அப்டேட் காரின் ரேஞ்ஜை உயர்த்தி வழங்குவும் செய்யும் என கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

சத்தமே இல்லாமல் நெக்ஸான் இவி பிரைம் காரை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ்... இதோட ஸ்டார்ட்டிங் விலை எவ்வளவு தெரியுமா?

டாடா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் காருக்கு மக்கள் மத்தியில் மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் 2022 ஜூன் மாதத்தில் சுமார் இரண்டாயிரம் யூனிட்டுகள் வரை நெக்ஸான் இவி விற்பனையாகியுள்ளன. நெக்ஸான் இவி - எக்ஸ்எம், எக்ஸ்இசட் பிளஸ், எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ், டார்க் எக்ஸ்இசட் பிளஸ் மற்றும் டார்க் எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் ஆகிய ஐந்து விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

சத்தமே இல்லாமல் நெக்ஸான் இவி பிரைம் காரை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ்... இதோட ஸ்டார்ட்டிங் விலை எவ்வளவு தெரியுமா?

அதேவேலையில், நெக்ஸான் இவி மேக்ஸ் - எக்ஸ்இசட் பிளஸ் (3.3 கிலோவாட் பேட்டரி பேக்), எக்ஸ்இசட் பிளஸ் (7.2 கிலோவாட் பேட்டரி பேக்), எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் (3.3 கிலோவாட் பேட்டரி பேக்) மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் (7.2 கிலோவாட் பேட்டரி பேக்) ஆகிய நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles
English summary
Tata motors launched nexon ev prime in india at inr 14 99 lakhs
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X