ஜாலியா ஒரு ரவுண்டு போனது குத்தமா..? கட்டிபோட்டு உதைத்த ஊர் மக்கள்.. புத்தம் புதிய காரும் துவம்சம்!

புத்தம் புதிய காரில் இளைஞர் ஒருவர் ஜாலி ரைடு செய்ததற்காக ஊர் மக்கள் பலர் ஒன்று கூடி அவரை அடித்து துவம்சம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர் பயன்படுத்திய புத்தம் காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர். பொதுமக்களின் இந்த நடவடிக்கைக்கு அவர் ஜாலி ரைடு செய்தது மட்டுமே காரணமில்லைங்க, மற்றுமொரு காரணமும் இருக்கு. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஜாலியா ஒரு ரவுண்டு போனது குத்தமா? கட்டிபோட்டு உதைத்த ஊர் மக்கள்.. புத்தம் புதிய ஸ்விஃப்ட் காரும் துவம்சம்!

24 நேரமும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருந்த உலகம், தற்போது எந்தவொரு இயக்கமும் இல்லாம் ஒட்டுமொத்தமாக முடங்கிக் கிடக்கின்றது. இதற்கு கொரோனா என்ற கண்ணுக்கு புலப்படாத ஒற்றை உயிர்க்கொல்லி வைரஸே காரணம். இது மனி குலத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கின்றது. இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தினால் உலகளவில் 47,192-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.

ஜாலியா ஒரு ரவுண்டு போனது குத்தமா? கட்டிபோட்டு உதைத்த ஊர் மக்கள்.. புத்தம் புதிய ஸ்விஃப்ட் காரும் துவம்சம்!

இதுமட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் புதிய நபர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவில் வெறும் நூற்றுக் கணக்கில் மட்டுமே காணப்பட்டு வந்த வைரஸ் தொற்று தற்போது ஆயிரத்தை எட்டியிருக்கின்றது. அதாவது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 437 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஜாலியா ஒரு ரவுண்டு போனது குத்தமா? கட்டிபோட்டு உதைத்த ஊர் மக்கள்.. புத்தம் புதிய ஸ்விஃப்ட் காரும் துவம்சம்!

இதனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,834 ஆக உயர்ந்துள்ளது. இந்த அதீத உயர்வு இந்திய மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே, மக்கள் அனைவரும் இந்த கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், அடித்தட்டு மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையான வருமையில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

ஜாலியா ஒரு ரவுண்டு போனது குத்தமா? கட்டிபோட்டு உதைத்த ஊர் மக்கள்.. புத்தம் புதிய ஸ்விஃப்ட் காரும் துவம்சம்!

இந்த நிலையால் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தேசிய ஊரடங்கு மேலும் அதிகரிக்கச் செய்யப்பட்டுவிடுமோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் தோன்றத் தொடங்கியிருக்கின்றது. ஆனால், அரசு தரப்பில் இந்த தேசிய ஊரடங்கை அதிகரிக்கச் செய்யும் எண்ணம் தற்போது வரை இல்லை என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கொரோனாவின் தீவிரம் அரசின் இந்தநிலையை மாற்றச் செய்வதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன.

ஜாலியா ஒரு ரவுண்டு போனது குத்தமா? கட்டிபோட்டு உதைத்த ஊர் மக்கள்.. புத்தம் புதிய ஸ்விஃப்ட் காரும் துவம்சம்!

இவ்வாறு, சூழல் இக்கட்டான நிலையில் இருக்கின்ற நேரத்தில் கேரளாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் நீண்ட நாட்களாக காத்திருந்து பெற்ற புத்தம் புதிய ஸ்விஃப்ட் காரில் ஜாலி ரைடு சென்றுள்ளார். ஜாலி ரைடு சென்றது மட்டுமில்லாமல் அந்த மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் ஒன்றான மலூர் பகுதிக்கும் அவர் சென்று திரும்பியதாக கூறப்படுகின்றது.

ஜாலியா ஒரு ரவுண்டு போனது குத்தமா? கட்டிபோட்டு உதைத்த ஊர் மக்கள்.. புத்தம் புதிய ஸ்விஃப்ட் காரும் துவம்சம்!

இதனாலயே இந்த இளைஞரை மலூர் சாலையில் தடுத்து நிறுத்திய பொதுமக்கள் சரமாரியாக அடித்து துவைத்து எடுத்துள்ளனர். மேலும், அவர் ஜாலி ரைடு செல்ல பயன்படுத்திய புத்தம் புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காரையும் அடித்து நொறுக்கினர்.

ஜாலியா ஒரு ரவுண்டு போனது குத்தமா? கட்டிபோட்டு உதைத்த ஊர் மக்கள்.. புத்தம் புதிய ஸ்விஃப்ட் காரும் துவம்சம்!

முன்னதாக, ஊர் மக்களிடம் சிக்குவதற்கு முன்பாக இந்த இளைஞரை கன்னூர் சாலையில் வைத்து போலீஸார் சிலர் மறிக்க முயன்றனர். ஆனால் அங்கிருந்து தப்பித்து வந்த பின்னரே பொதுமக்களிடம் சிக்கி அந்த இளைஞர் தர்ம அடியை வாங்கியுள்ளார்.

ஜாலியா ஒரு ரவுண்டு போனது குத்தமா? கட்டிபோட்டு உதைத்த ஊர் மக்கள்.. புத்தம் புதிய ஸ்விஃப்ட் காரும் துவம்சம்!

ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித் திரிந்த அந்த இளைஞர் காசர்கோட் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி பாகுதியில் வசித்து வரும் ரியாஸ் என்பது காவல்துறையினரின் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இவர் மீது போலீஸார் 144 தடை உத்தரவை மீறியது, அதிக வேகமாக காரை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

ஜாலியா ஒரு ரவுண்டு போனது குத்தமா? கட்டிபோட்டு உதைத்த ஊர் மக்கள்.. புத்தம் புதிய ஸ்விஃப்ட் காரும் துவம்சம்!

தற்போது நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு சட்டம் நிலுவையில் இருக்கின்றது. இது முடிவடைவதற்கு இன்னும் 12 நாட்கள் உள்ளன. இருப்பினும், பொதுமக்கள் சிலர் தற்போதும் வழக்கம்போல் தங்களின் நடை பயிற்சி மற்றும் ஊர் சுற்றுதலைச் செய்த வண்ணமே இருக்கின்றனர்.

ஜாலியா ஒரு ரவுண்டு போனது குத்தமா? கட்டிபோட்டு உதைத்த ஊர் மக்கள்.. புத்தம் புதிய ஸ்விஃப்ட் காரும் துவம்சம்!

கொரோனாவின் தீவிரத்தை உணராமல் ஒரு சிலர் மேற்கொள்ளும் இத்தகைய செயலால் அது மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், கொரோனாவின் பிடியில் தங்களை மட்டுமின்றி தன்னைச் சுற்றியிருக்கும் சமூகத்தையும் பாதுகாப்பது நாம் ஒவ்வொருவரின் கடமையாக மாறியிருக்கின்றது. ஆகையால், அத்தியாவசிய தேவையைத் தவிர்த்து வேறெதற்காகவும் வெளியே செல்ல வேண்டாம் என அரசும், பொது நல ஆர்வளர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Source: Indiatimes

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Angry Public Thrashes Brand New Maruti Swift. Read In Tamil.
Story first published: Thursday, April 2, 2020, 11:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X