மழைக்காலத்தில் மலைச் சாலைகளில் கார் ஓட்டுவதற்கான டிப்ஸ்!

By Saravana Rajan

கோடை காலத்தில் கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைச் சாலைகளில் ஓட்டும்போது கை கால்கள் ததிகினத்தோம் போடும். சாதாரண சாலைகளில் ஓட்டுவதற்கும், ஏற்றமாக வளைந்து நெளிந்து செல்லும் மலைச் சாலைகளில் ஓட்டுவதற்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன.

அதுவும், மழை நேரத்தில் இதுபோன்று மலைப் பாகங்கான சாலையில் செல்லும்போது வழுக்குத் தன்மை உள்ள சாலைகள் இருக்கும் என்பதால் அதிக கவனம் தேவை. இப்போது செகண்ட் சீசன், ஹாஃப் சீசன் போன்ற சமயங்களில் செல்லும்போது மழை குறுக்கிட வாய்ப்புண்டு. அவ்வாறு, போக வேண்டிய கட்டாயம், அல்லது மழை காலத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு சென்று அதன் அழகை கண்டு ரசிக்க பிரியப்படுபவர்கள் சில விஷயங்களை மனதில் வைத்து கார் ஓட்ட வேண்டும். அதற்கான விஷயங்களை தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

01. பரிசோதனை

01. பரிசோதனை

மழை நேரத்தில் மலை பாங்கான இடங்களுக்கு செல்லப் போகிறோம் என்றவுடன், சில பராமரிப்பு மற்றும் பரிசோதனைகளை செய்வது அவசியம். அதுகுறித்து அடுத்த ஸ்லைடுகளில் தகவல்களை காணலாம். அதைத்தொடர்ந்து, கார் ஓட்டுவது குறித்த டிப்ஸ்களை தொடர்ந்து காணலாம்.

 02. டயர் பட்டன்

02. டயர் பட்டன்

மலைச் சாலைகளில் செல்லும்போது டயர்களில் போதிய தரைப் பிடிமானத்தை தருவதற்கு ஏதுவாக பட்டன் இருப்பது அவசியம். அதாவது, 1.6மிமீ.,க்கும் குறைவான ட்ரெட் இருந்தால், அந்த டயரை மாற்ற வேண்டியது அவசியம்.

 03. வைப்பர்

03. வைப்பர்

பொதுவாகவே மழைக் காலங்களில் வைப்பர் சிஸ்டத்தை பரிசோதிப்பதுடன், புதிய வைப்பர் பிளேடுகளை பொருத்துவது நலம் தரும். குறிப்பாக, அதிக மழை பெய்யும்போது வைப்பர் பிளேடுகள் ஒழுங்காக வேலை செய்தால்தான் சாலையை ஓரளவு தெளிவாக பார்த்து ஓட்ட முடியும். இல்லையெனில், விபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துவிடும்.

04. ஹெட்லைட்ஸ்

04. ஹெட்லைட்ஸ்

ஹெட்லைட் மற்றும் இன்டிகேட்டர் விள்ககுகளை பரிசோதித்து விடுங்கள். வீணான பல்புகளை மாற்றிவிடுங்கள். மழை பெய்து கொண்டிருக்கும்போது ஹெட்லைட்டை லோ பீமில் போட்டுக் கொண்டு செல்வதுடன், இன்டிகேட்டர் விளக்குகளையும் ஒளிர விட்டு செல்வது அவசியம். இது எதிரில் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை தரும் விதமாக அமையும்.

 05. அவசரப்படாதீங்க...

05. அவசரப்படாதீங்க...

ஈரமான மலைச்சாலைகளில் காரை மெதுவாக செலுத்துவது மிக அவசியம். பிரேக்குகளை மென்மையாக கையாள்வதும் அவசியம். அதிவேகமாக செல்லும்போது காரை கட்டுப்படுத்துவதும் கடினம். மேலும், முன்னால் செல்லும் வாகனங்களுடன் அதிக இடைவெளி இருக்க வேண்டும் என்பதோடு, பின்னால் வரும் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சமிக்ஞை கொடுத்து செல்லுங்கள்.

 06. சரியான கியர்

06. சரியான கியர்

சமமான சாலைகளைவிட மலைச்சாலைகளில் ஓட்டும்போது கியரை சரியாக முறையில் மாற்ற வேண்டும். லேசான ஏற்றமாக இருந்தால்கூட டாப் கியரில் செலுத்த வேண்டாம். இரண்டு அல்லது மூன்றாம் கியரில் இயக்குங்கள். தவறுதலாக நியூட்ரல் கியருக்கு மட்டும் கொண்டு வந்துவிடாதீர்கள். மைலேஜை பற்றிய கவலையை விடுத்து, பாதுகாப்பை மட்டுமே மனதில் வைக்க வேண்டும்.

07. கொண்டை ஊசி வளைவு

07. கொண்டை ஊசி வளைவு

கொண்டை ஊசி வளைவுகளில் பெட்ரோல் கார்களை இரண்டாவது கியரில் வைத்து ஏற்றுங்கள். வேகத்தையும் வெகுவாக குறைத்து செலுத்தவும். ஏனெனில், குறைவான வேகத்தில் அதிக க்ரிப்புடன் வாகனத்தை கவனமாக திருப்ப முடியும். ஒலி எழுப்புவதுடன், எதிரில் வரும் வாகனங்களை சரியாக கவனித்து காரை செலுத்தவும். ஏனெனில், அதிவேக கியர்களில் கார் வேகமாக கீழே இறங்கும்போது டார்க் குறைவாக இருக்கும். எனவே, சரியான தடத்தில் அந்த காரை திருப்ப முடியாமல் உங்கள் பக்கம் வந்து போகலாம். எனவே, நீங்கள் கவனமாக செல்லவும்.

08. ஹாரன் அடியுங்கள்..

08. ஹாரன் அடியுங்கள்..

வளைவுகளில் கண்டிப்பாக ஹாரன் அடித்து திரும்புவது அவசியம். வளைவுகள் மட்டுமின்றி, போதிய இடைவெளி இல்லாத பகுதியில் எதிரில் வரும் வாகனம் முன்கூட்டியே பாதுகாப்பான மற்றும் போதிய இடைவெளி உள்ள இடத்தில் நிறுத்திவிடுவதற்கு வசதியாக இருக்கும். அதேபோன்று, எதிரில் வரும் வாகனங்கள் ஹாரன் அடித்தால் அதற்கு மதிப்பளித்து போதிய இடைவெளி விட்டு செல்லவும்.

09. வழிவிடுங்கள்

09. வழிவிடுங்கள்

மலை சாலைகளில் மேலே ஏறும் வாகனங்கள் அதிக சிரமத்தை எடுத்து மேலேறும். எனவே, மேலே ஏறும் வாகனத்திற்கு கீழே இறங்கும் வாகனங்கள் வழி விட்டுக் கொடுப்பது அவசியம். இதனை எழுதப்படாத விதி. எதிரில் வரும் வாகனங்களுக்கு வழி கொடுப்பதுடன், முன்கூட்டியே பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி செல்வது உங்களுக்கும் பாதுகாப்பானதாகவே இருக்கும். தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் கவனமாக கடக்கவும்.

10. கவனக்குறைவு

10. கவனக்குறைவு

மலைச் சாலைகளில் செல்லும்போது உடன் வருபவர்கள் பேச்சுக் கொடுக்காமல் இருப்பது அவசியம். அதேபோன்று, மியூசிக் சிஸ்டம் சப்தத்தையும் குறைவாக வைத்திருப்பது அவசியம். முடிந்தவரை பேச்சுக் கொடுக்காமல் செல்வது அவசியம். குறிப்பாக, மழை பெய்து கொண்டிருக்கும்போது மலைச் சாலையை சரியாக கணித்து ஓட்டுவது சவாலான விஷயம். எனவே, மிக மிக கவனமாகவும், மெதுவாகவும் காரை செலுத்துவது அவசியம்.

11. ஓவர்டேக்

11. ஓவர்டேக்

பொதுவாகவே மலைச்சாலைகளில் பிற வாகனங்களைவிட வேகமாக முன்னேறுவதை தவிர்ப்பது அவசியம். கனரக வாகனங்கள் செல்லும்போது, ஓவர்டேக் செய்வதற்கு அல்லது ஹாரன் அடித்து எரிச்சல் படுத்தாமல் பின்னால் செல்வது நல்லது. போதிய இடைவெளி மற்றும் வளைவுகள் இல்லாத பகுதியாக இருந்தால் மட்டுமே ஓவர்டேக் செய்வது பற்றி யோசிக்கவும். ஏனெனில், மழை நேரங்களில் சடன் பிரேக் பிடிப்பது ஆபத்தை விளைவிக்கும்.

12. காரை நிறுத்தும்போது...

12. காரை நிறுத்தும்போது...

குறுகலான மலைச் சாலைகளில் காரை நிறுத்தாதீர். பின்னால் மற்றும் எதிரில் வரும் வாகனங்கள் கடந்து செல்ல கடினமாக இருக்கும். பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு ஹசார்டு விளக்குகளை ஒளிர விடுங்கள். மண் பிடிமானம் உள்ள அல்லது தார் சாலையில் காரை நிறுத்தவும். ஜல்லி கற்கள் பொதிந்த சாலையில் நிறுத்தினால் கார் சறுக்கிச் செல்வதற்கு வாய்ப்புண்டு. மேலும், மழை நேரங்களில் மரங்களுக்கு கீழேயும் நிறுத்துவதையும் தவிர்க்கவும்.

13. ஹேண்ட் பிரேக் யுக்தி

13. ஹேண்ட் பிரேக் யுக்தி

சில சமயங்களில் ஏற்றமான சாலையில் அணிவகுத்து நிற்க நேர்ந்தால், ஹேண்ட்பிரேக்கை பயன்படுத்தி காரை முன்னோக்கி நகர்த்தவும். சிலர் பிரேக்கிலிருந்து ஆக்சிலேட்டருக்கு காலை மாற்றும்போது கார் பின்னோக்கி நகர வாய்ப்புள்ளது. எனவே, ஹேண்ட் பிரேக்கை போட்டுக் கொண்டு க்ளட்ச்சை சரியான அளவில் விட்டு, ஆக்சிலேட்டரை சிறிது கொடுத்து ஹேண்ட் பிரேக்கை ரீலீஸ் செய்தால் கார் பின்னோக்கி செல்லாது. எப்படியிருந்தாலும், மலைச் சாலைகளில் புதிதாக கார் ஓட்டுபவர்கள் மழை நேரங்களை தவிர்ப்பது நலம் பயக்கும்.

14. இரவு பயணம்

14. இரவு பயணம்

மலைச் சாலையில் அதுவும் குறிப்பாக, மழை நேரத்தில் கார் ஓட்டுவதை தவிர்த்தல் நலம்.

15. இன்ஸ்யூரன்ஸ்

15. இன்ஸ்யூரன்ஸ்

மழை நேரங்களில் ஆபத்து அதிகம் இருப்பதால், உங்கள் காருக்கு தவறாமல் இன்ஸ்யூரன்ஸ் போட்டு வைப்பது அவசியம். இமயமலை போன்ற திடீர் கஷ்ட, நஷ்டங்களை இன்ஸ்யூரன்ஸ் மூலமாக சற்று ஆற்றிக் கொள்ள முடியும் என்பதை மனதில் வையுங்கள்.

Most Read Articles
English summary
We take you through some important steps that will help build your safety net in these parts.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X