HYOSUNG மோட்டார் சைக்கிள்கள் மீண்டும் இந்தியாவில் !

ஹயோசங் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் தனது மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது. மிராஜ் 250 என்ற அந்த புதிய மோட்டார்சைக்கிளை KINETIC வாகன குழுமத்துடன் களமிறக்க உள்ளது .

HYOSUNG நிறுவனம் இந்தியாவில் மீண்டும் தனது மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது. மிராஜ் 250 என்ற அந்த புதிய மோட்டார்சைக்கிளை KINETIC வாகன குழுமத்துடன் களமிறக்க உள்ளது . தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்த HYOSUNG மோட்டார்சைக்கிள் இந்த மாதமே வெளிவரலாம் என்று திட்டமிட்டபடி கூறியுள்ளது.

HYOSUNG மோட்டார் சைக்கிள்கள் மீண்டும் இந்தியாவில் !

இந்நிறுவனம் 1978 ஆம் ஆண்டு HYOSUNG GROUP OF COMPANIES இன் ஒரு பிரிவாக செயல்பட தொடங்கியது . இவை ஜாப்பனீஸ் சுசூகி மோட்டார்ஸ் இடம் உரிமம் பெற்று அதே தொழில்நுட்பத்தை சவுத் கொரியாவில் வாகனங்களாக வெளியிட்டது . பின்பு சில வருடத்தில் இவை சொந்தமாக தனக்கென்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கூடத்தை உருவாக்கியது இதன் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. இதன் பின் இவை தனகென்ற தனி உரிமம் பெற்று வாகன விற்பனையில் ஈடுபட்டது.

HYOSUNG மோட்டார் சைக்கிள்கள் மீண்டும் இந்தியாவில் !

இந்த கொரிய நிறுவனமானது இந்திய சந்தைக்கு ஒன்றும் புதிதல்ல . DSK - MOTORWHEELS என்ற குழுவுடன் இவை இணைந்து வாகன விற்பனையில் ஈடுபட்டது தாங்கள் அறியாத ஒன்றாக இருக்கலாம். இதற்கு காரணம் அவ்விரு நிறுவனமும் சந்தித்த பலதரப்பட்ட பொருளாதார நெருக்கடியே. அதன் காரணாமாகவே HYOSUNG நிறுவனம் இந்திய சந்தையை விட்டு விடைபெற்றது வருத்தத்திற்குரிய விஷயம்.

HYOSUNG மோட்டார் சைக்கிள்கள் மீண்டும் இந்தியாவில் !

தற்பொழுது களமிறங்கும் இந்த புதிய வாகனம் பழைய தோல்விகளை மனதில் கொண்டு வெற்றிக்கனியை பறித்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு திமிறி எழும். தோல்வியின் முதல் படியை கடந்த HYOSUNG தனது பழைய AQUILA 250-க்கு மாற்றாகவே இவ்வாகனத்தை களமிறக்க திட்டமிட்டிருக்கிறது. தற்போதைய தொழில்நுட்பத்தை செரிக்கும் வல்லமை கொண்டு கத்துக்குட்டியாய் அல்லாமல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

HYOSUNG மோட்டார் சைக்கிள்கள் மீண்டும் இந்தியாவில் !

இந்த CRUISER தனது முதுகில் காளை திமில் போல் 15 லிட்டர் கொள்ளளவுடன் கூடிய பியூஎல் டேங்க் ஐ கொண்டுள்ளது. சிலிர்க்க வைக்கும் MUDGUARD உடன் , வெயிலில் அழகுற அமைந்திருக்கும் அல்லோய் கம்பிகள் காண்போர் கண்ணை கவர்ந்திழுக்கும்.

HYOSUNG மோட்டார் சைக்கிள்கள் மீண்டும் இந்தியாவில் !

தனியே அமையப்பெற்ற தகவல் அமைப்பு, (SINGLE INSTURMENT CLUSTER ), உருளை வடிவிலான முன் விளக்கு, தூரம் கடக்கும் LED பின் விளக்குகள் இவற்றின் சிகை அலங்காரங்கள். மாட்டு கொம்பு போல் அமையப்பெற்றிக்கும் இதன் HANDLE BAR ஏறி அமர்ந்ததும் நம்மை நாமே அஜித் என நினைத்து கொள்ளும் அளவிற்கு RACER LOOK அளிக்க வல்லது.

HYOSUNG மோட்டார் சைக்கிள்கள் மீண்டும் இந்தியாவில் !

என்ஜினை பொறுத்த வரை 250 CC கொண்ட V TWIN தொழிற்நுட்பத்தால் ஆனது. இவை மேற்கத்திய மாசு உமிழ்வு கட்டுப்பாடான EURO IV கோட்பாட்டின்கீழ் இயங்குபவை. 25 .8 BHP செயல் திறனுடன் 21 .7 NM TORQUE உடன் அதீத செயல் திறனை கொண்டது. மேலே கோடிட்ட வாறு இதன் முன்னோடியான AQUILA 250 விட சிறப்பாக செயல்படும் என்பது உறுதி.

HYOSUNG மோட்டார் சைக்கிள்கள் மீண்டும் இந்தியாவில் !

THE HYOSUNG MIRAGE 250 CRUISER என்று மிரட்ட போகும் இவை 19 (முன்பக்கம்) மற்றும்16 (பின்பக்கம்) இன்ச் வீல் உடன் டெலெஸ்கோபிக் சஸ்பென்ஷன் எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

HYOSUNG மோட்டார் சைக்கிள்கள் மீண்டும் இந்தியாவில் !

பின் பக்க சஸ்பென்ஷன் ஐ பொறுத்த வரை ட்வின் ஷாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது ஆகையால் இவை உங்கள் முதுகிற்கு அதிர்வை சேர்க்காது. பிரேக் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை ABS எனப்படும் ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுவதால் அதிவேகத்தில் ஆபத்து குறைவுதான்.

HYOSUNG மோட்டார் சைக்கிள்கள் மீண்டும் இந்தியாவில் !

டிரைவ்ஸ்பார்க் கருத்து :

இந்த வாகனத்தின் ஆரம்ப விலை மூன்று லட்ச ருபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல் திறன் பாதுகாப்பு அம்சங்கள், வண்டியின் தோற்றம் இவற்றை வைத்து பார்க்கையில் இந்த விலை தகும் என தோன்றும். CRUISER பிரிவில் வரலாறு படைக்க போகும் இந்த வாகனத்தை இந்திய மக்கள் இந்த மாதத்தில் பார்க்கலாம்.

Source:Autocar India

Most Read Articles
மேலும்... #ஹயோசங் #hyosung
English summary
Hyosung Motorcycles is planning to re-enter the Indian market, with the launch of their new Mirage 250 cruiser. The Korean motorcycle manufacturer has now tied-up with Kinetic Group under the Motoroyale brand. According to Autocar India, the launch of the new Hyosung Mirage 250 is expected to be sometime during September 2018.
Story first published: Saturday, September 1, 2018, 15:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X