ரூ.4 ஆயிரம் வரையில் தள்ளுபடி... புதிய சலுகை திட்டத்தை அறிவித்தது ஹீரோ எலக்ட்ரிக்...

லூதியானாவை சேர்ந்த எலக்ட்ரிக் இருசக்கர தயாரிப்பு நிறுவனமான ஹீரோ எலக்ட்ரிக் அதன் வாடிக்கையாளர்களுக்காக புதிய பரிந்துரை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'பைக் நண்பராக இருங்கள்' என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டத்தை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.4 ஆயிரம் வரையில் தள்ளுபடி... புதிய சலுகை திட்டத்தை அறிவித்தது ஹீரோ எலக்ட்ரிக்...

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்தின் மூலம் ரூ.4 ஆயிரம் வரையிலான சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அதன்படி இந்நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் தயாரிப்புகளுக்கு ரூ.2,000 வரையிலான தள்ளுப்படி உறுதி செய்யப்படுகிறது.

ரூ.4 ஆயிரம் வரையில் தள்ளுபடி... புதிய சலுகை திட்டத்தை அறிவித்தது ஹீரோ எலக்ட்ரிக்...

மீதமுள்ள 2,000 ஆயிரம் ரூபாய், வாடிக்கையாளர் வாங்கும் பொருளானது வெளி வாடிக்கையாளரால் பரிந்துரைக்கப்பட்டு வாங்கப்பட்டால் குறைக்கப்படும். கூடுதலாக இந்த திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு 50வது வாடிக்கையாளரும் ‘கிளைட் இ-ஸ்கூட்' ஸ்கூட்டியை சொந்தமாக பெறுவதற்கான வாய்ப்பும் உண்டு.

ரூ.4 ஆயிரம் வரையில் தள்ளுபடி... புதிய சலுகை திட்டத்தை அறிவித்தது ஹீரோ எலக்ட்ரிக்...

புது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமில்லாமல் இந்த பரிந்துரை திட்டத்தின் மூலம் தற்சமயம் ஹீரோ இ-பைக்குகளை உபயோகிப்பவர்களும் ஹீரோ அப்டிமா லித்தியம்-இரும்பு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெல்வதற்கான வாய்ப்பையும் இந்த திட்டம் வழி செய்கிறது. உயர்தர வாடிக்கையாளர்கள் ரூ.1,000 மதிப்பிலான தள்ளுபடி கூப்பன் உடன் ப்ராண்ட்டின் ‘நன்றி' குறிப்பை பெறுவார்கள்.

ரூ.4 ஆயிரம் வரையில் தள்ளுபடி... புதிய சலுகை திட்டத்தை அறிவித்தது ஹீரோ எலக்ட்ரிக்...

இதுகுறித்து ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஒ சோகிந்தர் கில் கூறுகையில், ப்ராண்ட் அம்பாஸாடர்களாக ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு 3 லட்சத்திற்கும் அதிகமான இ-பைக் உரிமையாளர்கள் உள்ளனர். இவர்கள் எங்களது தயாரிப்புகளை தொடர்ந்து தங்களது நண்பர்களுக்கும் சொந்தக்காரர்களுக்கும் பரிந்துரைத்து வருகின்றனர் என கூறினார்.

ரூ.4 ஆயிரம் வரையில் தள்ளுபடி... புதிய சலுகை திட்டத்தை அறிவித்தது ஹீரோ எலக்ட்ரிக்...

ஊரடங்கு உத்தரவில் தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளதால் பெரும்பான்மையான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது இயல்பான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இந்த வகையில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் ரூ.5,000 வரையிலான தள்ளுபடிகளுடன் இணைய விற்பனை தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.4 ஆயிரம் வரையில் தள்ளுபடி... புதிய சலுகை திட்டத்தை அறிவித்தது ஹீரோ எலக்ட்ரிக்...

இணையத்தளம் மூலமாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்குவோர் டோர்ஸ்டெப் டெலிவிரி, டோர்ஸ்டெப் சர்வீஸ் மற்றும் ‘3 நாட்களுக்கு எந்த கேள்வியும் கேட்கப்படாது' உள்ளிட்ட வசதிகளையும் பெற முடியும். புதிய ‘பைக் நண்பராக இருங்கள்' திட்டத்தின் காலம் ஜூன் 25ல் இருந்து ஜூலை 15 வரையில் ஆகும்.

ரூ.4 ஆயிரம் வரையில் தள்ளுபடி... புதிய சலுகை திட்டத்தை அறிவித்தது ஹீரோ எலக்ட்ரிக்...

ஹீரோ எலக்ட்ரிக், இந்தியாவின் மிக பெரிய முழு-எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தில் இருந்து சந்தைப்படுத்தப்பட்டு வருகின்ற ஃப்ளாஷ், ஆப்டிமா, நெக்ஸ் மற்றும் போட்டான் ஸ்கூட்டர்கள் ஒவ்வொன்றும் தனித்தனியான தோற்ற அமைப்பையும், எலக்ட்ரிக் மோட்டாரையும் (லித்தியம்-இரும்பு மற்றும் ஈய அமிலம்) கொண்டுள்ளன.

ரூ.4 ஆயிரம் வரையில் தள்ளுபடி... புதிய சலுகை திட்டத்தை அறிவித்தது ஹீரோ எலக்ட்ரிக்...

பஞ்சாப் லூதியானாவில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் 10,000 யூனிட் தயாரிப்புகளை வருடத்திற்கு தயாரிக்க முடியும். சர்வீஸ் பணிகளுக்கு இந்தியா முழுவதும் 600 சர்வீஸ் மையங்களை இந்த ப்ராண்ட் நிறுவியுள்ளது.

2000களில் நிறுவப்பட்ட ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் முதன்முதலாக 2007ல் தனது முதல் இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. லித்தியம்-இரும்பு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை 2016ல் இருந்து இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

Most Read Articles

English summary
Hero Electric announces a unique 'Be a Bike Buddy' referral scheme
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X