Just In
- 16 min ago
ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!
- 56 min ago
இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!
- 2 hrs ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 3 hrs ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
Don't Miss!
- Finance
ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு.. இனி மக்கள் நிம்மதியாக இருக்கலாம்..!!
- Movies
ஜெயிலர் படத்தில் இவங்க தான் ஹீரோயினா? இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கலையே.. முதல்முறையாக ரஜினியுடன்!
- News
தமிழக பொறியியல் கலந்தாய்வு.. கல்லூரிகளில் 7 நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் இடங்கள் காலி
- Sports
சிஎஸ்கே வீரர் அதிரடி.. 9 மாதத்திற்கு பிறகு டி20 விளையாடிய வில்லியம்சன்.. வெஸ்ட் இண்டீஸ்க்கு சோகம்
- Technology
நோ, நோ, தோற்ற இடத்திலேயே ஜெயிப்போம்., இது நல்ல பாடம்: ISRO வின் அடுத்த பிளான்!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
ஹீரோ ஸ்பிளெண்டருக்கே டஃப் கொடுக்கும் போலயே!! டிவிஎஸ் மோட்டாரின் புதிய ரேடியான் பைக்!
பிரிவிலேயே முதல்முறையாக பல-வண்ண ரிவர்ஸ் எல்சிடி க்ளஸ்ட்டர் உடன் புதிய ரேடியான் பைக்கை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் குறித்த விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் விலை குறைவான, அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கையே அதிகம் என்பது நம் எல்லாருக்கும் நன்றாகவே தெரியும். குறிப்பாக, ஹீரோ மோட்டார்கார்ப் ஸ்பிளெண்டர் பைக்குகளை ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக சுமார் 2.5 லட்ச யூனிட்கள் விற்பனை செய்கிறது.

அந்த அளவிற்கு ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளையும் நம் இந்தியர்களையும் பிரிக்க முடியாததாகிவிட்டது. இருப்பினும் ஸ்பிளெண்டருக்கு போட்டியளிக்கும் விதத்திலான மோட்டார்சைக்கிள்கள் மற்ற பிராண்ட்களில் இருந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு டிவிஎஸ் ரேடியான். இன்னும் சொல்லப்போனால், அறிமுகத்தின்போது ரேடியான் பல வசதிகளை பிரிவிலேயே முதல் மாடலாக கொண்டிருந்தது.

முன்பக்க டிஸ்க் பிரேக், பிரீமியம் தரத்திலான ஸ்டைல், எல்இடி டிஆர்எல்-கள், ஸ்டைலிஷான வேகமானி, சிறந்த க்ரவுண்ட் க்ளியரென்ஸ் & வீல்பேஸ், யுஎஸ்பி சார்ஜிங் துளை & சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர் என இதில் சொல்லிக்கொண்டே போகலாம். இருந்தாலும் அதன்பின் டிவிஎஸ் ரேடியான் மோட்டார்சைக்கிளை ஹீரோ நிறுவனம் தனது புதிய ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக் மூலமாக முந்தியது.

இதற்காக, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ப்ளூடூத் இணைப்பு, மொபைல் போன் குறுஞ்செய்தி & அழைப்பு எச்சரிக்கை, பேட்டரி நிலை இண்டிகேட்டர் மற்றும் நிஜ-நேர மைலேஜ் இண்டிகேட்டர் என பல புதிய வசதிகளை ஸ்பிளெண்டரில் புதிய எக்ஸ்டெக் வேரியண்ட்டின் மூலமாக ஹீரோ மோட்டோகார்ப் சேர்த்திருந்தது. இந்த ஹீரோ-டிவிஎஸ் போட்டியின் தொடர்ச்சியாக தற்போது ரேடியானில் பல-வண்ண ரிவர்ஸ் எல்சிடி க்ளஸ்ட்டர் சேர்க்கப்பட்டுள்ளது.

பிரிவிலேயே எந்தவொரு மாடலும் கொண்டில்லாத வகையில் முதல்முறையாக டிவிஎஸ் ரேடியான் பைக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த க்ளஸ்ட்டர் ஆனது அப்போதைய, அந்த நேர மைலேஜை காட்டும் (RTMi) வசதியை கொண்டுள்ளது. இதன் மூலமாக வெவ்வேறான பயண சூழலுக்கு ஏற்ப ஓட்டுனர் பைக்கின் மைலேஜை பயன்படுத்தி கொள்ள முடியும்.

RTMi மட்டுமின்றி, ரேடியானில் புதியதாக வழங்கப்பட்டுள்ள ரிவர்ஸ் எல்சிடி க்ளஸ்ட்டரில் டிஜிட்டல் க்ளஸ்ட்டர் போன்றதான கடிகாரம், சேவை இண்டிகேட்டர், குறை பேட்டரி சார்ஜ் இண்டிகேட்டர், அதிவேகம் & சராசரி வேகம் இண்டிகேட்டர் உள்பட மொத்தம் 17 பயனுள்ள விபரங்களை பெறலாம். இருப்பினும் ரேடியானில் ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் தொழிற்நுட்பத்தையும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வழங்கும் என எதிர்பார்த்தோம்.

ஆனால் வழங்கப்படவில்லை. டிவிஎஸ் பிராண்டின் ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் இணைப்பு வசதி ஜூபிட்டர் கிராண்டே, எண்டார்க் போன்ற டிவிஎஸ் ஸ்கூட்டர்களிலும், அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மற்றும் ஆர்ஆர்310 போன்ற டிவிஎஸ் மோட்டார்சைக்கிள்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் தொழிற்நுட்பத்தின் வாயிலாக மொபைல் போனின் அழைப்பு & குறுஞ்செய்தி எச்சரிக்கைகள், பயண விபரங்கள், கடைசியாக பார்க் செய்யப்பட்ட இடம், சேவை எச்சரிக்கைகள் மற்றும் முன்பதிவு & நாவிகேஷன் உதவிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

இருப்பினும் புதிய ரேடியானில் டிவிஎஸ் நிறுவனம் வேறு சில முக்கியமான தொழிற்நுட்ப வசதிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக, டிவிஎஸ் இண்டெல்லி கோ தொழிற்நுட்பம் போக்குவரத்து சிக்னல்கள் உள்பட மற்ற நிறுத்தங்களில் நிற்கும்போது என்ஜினை ஆஃப் செய்து சிறப்பான பயண உணர்விற்கும், மைலேஜை அதிகரிப்பிற்கும் வழிவகுக்கும். அத்துடன் தொலைத்தூர பயணங்களுக்கு உதவியாக நீண்ட இருக்கை அமைப்பு வழங்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, யுஎஸ்பி சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ரேடியான் பைக்கின் தோற்றத்தை பொறுத்தவரையில், க்ரோம்-ஆல் சூழப்பட்ட ஹெட்லேம்ப், பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் மற்றும் தடிமனான பெட்ரோல் டேங்க் பேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதர தொழிற்நுட்ப அம்சங்களாக, ஈக்கோத்ரஸ்ட் ஃப்யுல் இன்ஜெக்ஷன் (ET-Fi) தொழிற்நுட்பத்தை ரேடியான் மோட்டார்சைக்கிள் பெறுகிறது.

இந்த தொழிற்நுட்பமானது பைக்கின் மைலேஜை 15% அதிகரிப்பது மட்டுமில்லாமல், என்ஜினின் செயல்படுதிறனை மேம்படுத்தக்கூடியதாக உள்ளது. புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.59,925இல் இருந்து அதிகப்பட்சமாக ரூ.71,966 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கை பேஸ் எடிசன்; ரிவர்ஸ் எல்சிடி க்ளஸ்ட்டர் உடன் ட்யூவல்-டோன் எடிசன் ட்ரம் பிரேக்; ரிவர்ஸ் எல்சிடி க்ளஸ்ட்டர் & டிவிஎஸ் இண்டெல்லி கோ உடன் ட்யூவல்-டோன் எடிசன் ட்ரம் பிரேக் மற்றும் பல-வண்ண (சிவப்பு-கருப்பு & நீலம்-கருப்பு) தேர்வுகளை கொண்ட க்ளஸ்ட்டர் உடன் ட்யூவல்-டோன் எடிசன் டிஸ்க் பிரேக் என 4 விதமான வேரியண்ட்களில் வாங்கலாம்.
-
உங்க காரின் கண்ணாடி திடீர்ன்னு உடைஞ்சு போச்சா அப்ப இந்த 5 விஷயங்கள் தான் காரணமா இருக்கும்...
-
ஹோண்டா சிபி350ஆர்எஸ் செம்ம போட்டியா இருக்கும்... ராயல் என்பீல்டு ஹண்டர் 350 சந்தையில் தாக்குப்பிடிக்குமா?
-
விமானிகளாக தாய்-மகள்... ஒன்றாக விமானத்தை இயக்கி சாதனை!! அமெரிக்காவில் நடந்த ருசிகர சம்பவம்!