புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் பிரத்யேகமான டெஸ்ட் டிரைவ் அனுபவத்தை இங்கே படிக்கலாம்.

By Saravana Rajan

டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக்குகளை விரும்பும் இளைஞர்கள் மத்தியில் முக்கிய தேர்வாக விளங்குகிறது. தசாப்தத்திற்கும் மேலாக டிவிஎஸ் நிறுவனத்தின் முத்தாய்ப்பான பிராண்டாக அப்பாச்சி மாறி இருக்கிறது.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அப்பாச்சி பிராண்டில் ஆர்டிஆர் 160 பைக்தான் முதலாவதாக வெளியிடப்பட்ட மாடல். லேப் டைமர், 0- 60 கிமீ வேகத்தை எட்டும் நேரத்தை கணக்கிடுவதற்கான வசதி, பெட்டல் டிஸ்க் பிரேக் என செக்மென்ட்டில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் என்ற பெருமையையுடன் வலம் வருகிறது.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பிற ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக்குகள் போல அல்லாமல், இந்த பைக் Racing Throttle Response[RTR] என்ற பந்தய கள செயல்திறனை வெளிப்படுத்தும் பைக் மாடல் என்ற அடைமொழியை பெயரில் தாங்கி வருகிறது. அதன்படியே, அப்பாச்சி ஆர்டிஆர் பைக்குகள் 6 முறை தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றிருக்கிறது.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆர்ஆர்310 என்ற சக்திவாய்ந்த மாடலை அறிமுகம் செய்தது. அதனைத்தொடர்ந்து, தற்போது முற்றிலும் புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கை நேற்று ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆலை வளாகத்தில் அமைந்துள்ள ரேஸ் டிராக்கில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். அந்த அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

டிசைன்

டிசைன்

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் மாடலானது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஆர்டிஆர் 200 4வி மாடலின் டிசைன் அம்சங்களை அப்படியே ஒத்திருக்கிறது. பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாததால், சிறிய குழப்பம் ஏற்படுகிறது.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

6 முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஆர்டிஆர்165 பைக்கின் புரோட்டோடைப்பில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எஞ்சின் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்ம் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான் இந்த புதிய பைக்கில் இருக்கும் எஞ்சினும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், டபுள்- க்ராடில் சின்க்ரோ ஸ்டிஃப் ஃப்ரேம் என்ற வலிமை வாய்ந்த அடிச்சட்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது வளைவுகளில் பைக் அதிவேகத்தில் திரும்பும்போது சிறப்பான நிலைத்தன்மையை வழங்கும்.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் மிரட்டலான தோற்றத்துடன் கூடிய ஹெட்லைட் ஹவுசிங் பொருத்தப்பட்டு இருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள் இருமருங்கிலும் பொாருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கில் ஆட்டோ ஹெட்லைட் நிரந்தர அம்சமாக இடம்பெற்று இருக்கிறது.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இருக்கையில் அமர்ந்ததும், நம் கண்களை வசீகரிப்பது இதன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்தான். பந்தய களங்களில் ஒரு சுற்றை எவ்வளவு நேரத்தில் கடக்கிறோம், கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற முடிகிறது. கார்புரேட்டர் வேரியண்ட்டில் மஞ்சள் நிற பேக்லிட் திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மாடலில் வெள்ளை வண்ண திரை உள்ளது.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் முரட்டுத்தனமான தோற்றத்தை தரும் வகையிலான பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது பைக்கின் தோற்றத்தை முரட்டுத்தனமாக காட்டுவதுடன், சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு பைக்கின் வசீகரத்திற்கு வலு சேர்ப்பதுடன், வளைவுகளில் திரும்பும்போது கால் தொடைகளுக்கு நல்ல சப்போர்ட்டை தருகிறது. இந்த பைக் பந்தய களங்களுக்கும் பொருத்தமானது என்பதை குறிப்பால் உணர்த்தும் விதத்தில், பெட்ரோல் டேங்கில் செக்கர்டு ஃப்ளாக் என்ற பந்தய களங்களில் பயன்படுத்தப்படும் கொடியை பிரதிபலிக்கும் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டு இருக்கிறது.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

தரையிலிருந்து இருக்கையானது 800மிமீ உயரத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த இருக்கை மிகவும் அகலமாகவும், சிறப்பான பஞ்சு பொதியுடன் சொகுசாக இருக்கிறது. மேலும், பெட்ரோல் டேங்குடன் எந்த பிசிறும் இல்லாமல் நேர்த்தியாக இணையும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பின் இருக்கையில் அமர்பவரும் சவுகரியமான உணர்வை பெறுவர். பிளவுபட்ட அமைப்புடைய இரண்டு கிராப் ரெயில் எனப்படும் கைப்பிடிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. நீண்ட தூர பயணங்களுக்கும் இந்த இருக்கை அமைப்பு சிறப்பானதாக இருக்கும்.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புறத்தில் மிக நேர்த்தியான எல்இடி விளக்குகள் கொண்ட டெயில் லைட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருப்பதுடன், அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் இருக்கும் அதே டபுள் பேரல் புகைப்போக்கி குழாய் அமைப்பும் கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கிறது.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த புகைப்போக்கி அமைப்பு சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதற்கு ஏற்ப வடிவமைப்பு நுட்பத்தை பெற்றிருக்கிறது. அத்துடன், அப்பாச்சி பிராண்டின் மதிப்பை உயர்த்தும் விதத்தில் சிறப்பான சைலென்சர் சப்தத்தையும் வெளிப்படுத்துகிறது.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஒட்டுமொத்தத்தில் இந்த பைக்கின் டிசைன் மிகச் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, சிவப்பு வண்ணம் இந்த பைக்கிற்கு பிரத்யேகமானதாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறது. இதுதவிர, மெட்டாலிக் புளூ மற்றும் நைட் பிளாக் ஆகிய பிற வண்ணங்களிலும் கிடைக்கிறது.

 செயல்திறன், கையாளுமை

செயல்திறன், கையாளுமை

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் கார்புரேட்டர் எஞ்சின் மற்றும் எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இரண்டு மாடல்களிலுமே 159.7சிசி ஆயில்கூல்டு 4 வால்வு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கார்ப்புரேட்டர் மாடல் அதிகபட்சமாக 16.3 பிஎச்பி பவரையும், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மாடல் அதிகபட்சமாகா 16.6 பிஎச்பி பவரையும் வழங்க வல்லது. இரண்டு மாடல்களுமே அதிகபட்சமாக 14.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த இரண்டு மாடல்களையுமே ஓட்டி பார்த்ததில் செயல்திறனில் குறிப்பிடத்தக்க அளவு வித்தியாசம் இல்லை. இதில், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. கியர் மாற்றம் மிகவும் மென்மையாகவும், சிறப்பான செயல்திறனையும் வழங்குகிறது.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த மோட்டார்சைக்கிளின் இரு மாடல்களுமே 0 - 60 கிமீ வேகத்தை வெறும் 5 வினாடிகளுக்குள் எட்டிவிடுவது சிறப்பான விஷயம். இந்த பைக்கின் கார்புரேட்டர் மாடல் மணிக்கு 114 கிமீ வேகம் வரையிலும், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மாடல் 116 கிமீ வேகம் வரையிலும் செல்லும் திறன் பெற்றிருக்கின்றன.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சஸ்பென்ஷன் அமைப்புகளை ஜப்பானை சேர்ந்த ஷோவா நிறுவனத்தின் நிபுணர்கள் ட்யூனிங் செய்து கொடுத்துள்ளனர்.

இந்த சஸ்பென்ஷன் அமைப்பு அதிவேகத்தில் வளைவுகளில் திரும்பும்போது அதிக நிலைத்தன்மையையும், நம்பிக்கையுடன் ஓட்டவும் துணைபுரிகிறது.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக்கின் கார்புரேட்டர் மாடலில் முன்புறத்தில் 90/90-17 டயரும், பின்பக்கத்தில் 110ய80-17 அளவுடைய டயரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மாடலில் முன்புறத்தில் 90/90-17 அளவுடைய டயரும், பின்புறத்தில் 130/70-17 எம்/சி 62பி ட்யூப்லெஸ் டயரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த டயர்கள் மிகச் சிறப்பான தரைபிடிமானத்தை தருகின்றன.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த பைக்கின் கார்புரேட்டர் மாடலில் முன்புறத்தில் பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் இருக்கின்றன. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மாடலில், முன்புறத்தில் 200மிமி பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 130மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கின் பிரேக் சிஸ்டம் மிகச் சிறப்பாக இருக்கிறது. அதிக நம்பிக்கையுடன் ஓட்டுவதற்கு துணை நிற்கிறது.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் 85கிமீ வேகம் வரை மிகவும் மென்மையான பயணத்தை வழங்குகிறது. அதற்கு மேல் பிடித்து ஓட்டும்போது ஃபுட்பெக்குகள் வழியாக அதிக அதிர்வுகளை உணர முடிகிறது. அதேநேரத்தில், இந்த பைக்கில் அதிர்வுகளை குறைப்பதற்கு டிவிஎஸ் நிறுவனம் மிகச் சிறப்பான பணிகளை செய்துள்ளதையும் மறுக்க இயலாது.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த பைக்கில் 12 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதில், 2.5 லிட்டர் ரிசர்வ் வசதி இருக்கிறது. குறைந்த தூரமே ஓட்டியதால், மைலேஜை துல்லியமாக கணக்கிட முடியவில்லை. எனினும், சராசரியாக லிட்டருக்கு 40 முதல் 45 கிமீ மைலேஜ் வரை தரும் என்று நம்பலாம்.

 புரோமித் கோஷ் கருத்து

புரோமித் கோஷ் கருத்து

புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் ரூ.81,490 முதல் ரூ.89,990 வரையிலான விலையில் வந்துள்ளது. இந்த செக்மென்ட்டில் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த, அதிக சிறப்புகள் வாய்ந்த பைக் மாடலாகவே குறிப்பிட முடியும்.

 புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சிறப்பான செயல்திறன் கொண்ட ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள், நிச்சயமாக இந்த பைக்கை தேர்வுக்கு எடுத்துக் கொள்ளலாம். இது சாதாரண ஸ்போர்ட்ஸ் பைக் என்பதைவிட, பந்தய களத்திற்கும் ஏற்ற ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவே கூற முடியும்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor #review
English summary
DriveSpark was invited to test ride the bike at TVS' Hosur plant and here are our thoughts on theApache RTR 160 4V.
Story first published: Saturday, March 17, 2018, 15:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X