செப்.8ல் அறிமுகமாகும் புதிய ரோல்ஸ்ராய்ஸ் டான் கார்!

By Saravana

வரும் 8ந் தேதி புதிய ரோல்ஸ்ராய்ஸ் டான் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் பார்வையாளர்களுக்கு தரிசனம் தர இருக்கிறது.

மேலும், விற்பனையில் இருந்து வரும் ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் காரின் கன்வெர்ட்டிபிள் எனப்படும் திறந்தநிலை மாடலாக வர இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், வழக்கத்தைவிட மிகவும் ஸ்பெஷலான மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோல்ஸ்ராய்ஸ் கார்

இந்த புதிய ரோல்ஸ்ராய்ஸ் கார் மாடலில் 621 எச்பி பவரை அளிக்க வல்ல இரட்டை டர்போசார்ஜர் கொண்ட 6.6 லிட்டர் வி12 எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லக்கூடியதாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

1949ம் ஆண்டில் டான் என்ற பிராண்டு பெயரில் ரோல்ஸ்ராய்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. மொத்தமே 28 டான் கார்கள் மட்டுமே அப்போது தயாரிக்கப்பட்டது. இந்தநிலையில், மிக நீண்ட காலம் கழித்து, அதே பெயரில், புதிய கார் மாடலை அந்த நிறுவனம் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Rolls-Royce Motors will pull the cover of their new luxury vehicle on 8th of September, 2015. It will be globally unveiled simultaneously all over the world prior to it being showcased at 2015 Frankfurt Motor Show.
Story first published: Saturday, September 5, 2015, 12:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X