சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு இனி தாராளமாக உதவலாம்!

By Saravana

சாலை விபத்தில் சிக்கி காயமடைந்து உயிருக்கு போராடுபவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உதவுபவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது என்று போலீசாரை மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இதற்கான, புதிய விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்ற முன் வருபவர்கள், போலீஸ் விசாரணைக்கு பயந்து ஒதுங்கி விடுகின்றனர். இதனால், பல ஆயிரம் பேர் உதவியின்றி, உயிரிழக்கும் அவலநிலை காணப்படுகிறது. இதனை தவிர்க்கும் விதத்தில், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற உதவி செய்பவர்களுக்கு, போலீசார் இனி தொந்தரவு தராத வகையில் 5 முக்கிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

 புதிய விதிகள்

புதிய விதிகள்

சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவி செய்ய முன்பவர்களை நடத்த வேண்டியதற்கான Standard operating procedure[SOP] எனப்படும் முறையாக பின்பற்றப்பட வேண்டிய விதிகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த புதிய விதிகள் பற்றிய விபரங்களை தொடர்ந்து காணலாம்.

01. அவமரியாதை

01. அவமரியாதை

சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள் பற்றியோ அல்லது அவர்களை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்ப்பவர்களையும் குற்றவாளிப் போல பார்க்கக்கூடாது. அவர்களை போலீசார் மரியாதையுடன், கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.

02. பாகுபாடு

02. பாகுபாடு

பாலினம், மதம், ஜாதி, நாடு போன்றவற்றை வைத்து உதவி செய்தவரிடம் பாகுபாடு காட்டக்கூடாது.

02. தனிப்பட்ட தகவல்கள்

02. தனிப்பட்ட தகவல்கள்

உதவி செய்பவர்களின் முகவரி, தொடர்பு எண் போன்றவற்றை கேட்டு வற்புறுத்தக்கூடாது. அவர்களாக முன்வந்து அளித்தால் மட்டுமே விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

03. விசாரணை

03. விசாரணை

விபத்து குறித்து சாட்சி சொல்ல முன் வருவோரின் வசதியான நேரத்தில் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும்.

04. சாதாரண உடையில்...

04. சாதாரண உடையில்...

சாட்சி சொல்ல முன் வருபவரின் வீட்டில் சென்று விசாரணை நடத்தலாம். விசாரிக்க செல்லும்போது போலீசார் சீருடையை தவிர்த்து, சாதாரண உடையில் செல்ல வேண்டும்.

05. அலைக்கழிப்பு

05. அலைக்கழிப்பு

சாலை விபத்தை நேரில் பார்த்தவர் போலீஸ் நிலையம் வந்து தகவல்களை அளிக்கும்பட்சத்தில் அவரிடம் ஒரே ஒரு முறை மட்டுமே விசாரணை நடத்த வேண்டும். விசாரணை என்ற பெயரில் அலைகழிக்கக்கூடாது.

06. விசாரணை மொழி

06. விசாரணை மொழி

உதவி செய்ய முன் வருபவருக்கு தெரிந்த மொழியிலேயே விசாரணை நடத்த வேண்டும். விசாரணை அதிகாரிக்கு அந்த மொழி தெரியாவிட்டால், மொழி பெயர்ப்பாளரை வைத்து விசாரிக்க வேண்டும்.

07. அதிகாரி கண்காணிப்பு

07. அதிகாரி கண்காணிப்பு

போலீஸ் நிலையங்களில் இந்த புதிய விதிமுறைகள் முறையாக பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட மண்டலம் அல்லது மாவட்டத்தின் போலீஸ் கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை இணை ஆணையர் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Central Government had notified guidelines for the protection of Good Samaritans who come forward to help road accident victims. This was a result of the Supreme Court directions in October 2014.
Story first published: Friday, January 29, 2016, 13:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X