ஹைபிரிட் கார் தயாரிப்பாளர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்த அருண் ஜெட்லி..!!

Written By:

ஹைஃபிரிட் கார்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட வேண்டும் என்ற கார் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்கபோவதில்லை என மத்திய அமைச்சர் அருன் ஜெட்லி சூசகமாக தெரிவித்துள்ளார்.

கார்களுக்கான ஜி.எஸ்.டி வரியில் அருண் ஜெட்லி திட்டவட்டம்..!!

ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஜூலை 1 முதல் அமலாகிறது. அத்தியாவசப் பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை ஜி.எஸ்.டி-யில் எவ்வளவு மதிப்பை பெறுகின்றன என்பதற்கான விவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

கார்களுக்கான ஜி.எஸ்.டி வரியில் அருண் ஜெட்லி திட்டவட்டம்..!!

இதன்முலம் ஹைபிரிட் கார்களுக்கு 43 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பு என்பது முடிவாகியுள்ளது. இதை மத்திய அரசு பரிசீலித்து, வரி விதிப்பு குறைக்கப்படவேண்டும் என பல்வேறு கார் நிறுவங்கள் வலியுறுத்தி வருகின்றன.

கார்களுக்கான ஜி.எஸ்.டி வரியில் அருண் ஜெட்லி திட்டவட்டம்..!!

ஜி.எஸ்.டி-க்கான கவுன்சிலில் வரி விதிப்பு அதிகமாக இருப்பதாக கூறி மறுபரிசீலனை மேற்கொள்ளப்பட்ட 133 பொருட்களில் 66 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலில் அருண் ஜெட்லியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்களுக்கான ஜி.எஸ்.டி வரியில் அருண் ஜெட்லி திட்டவட்டம்..!!

ஹைபிரிட் கார்களுக்கு ஜி.எஸ்.டி வரி ஏன் குறைக்கவேண்டும் என்பதற்கான ஆவணங்களை ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு கார் நிறுவனங்கள் சமர்பித்துள்ளன.

அந்த ஆவணங்களை சரிபார்த்த ஜி.எஸ்.டி கவுன்சில் மற்றும் அருண் ஜெட்லி, அதில் பிழை உள்ளதாக குறிபிட்டுள்ளது.

கார்களுக்கான ஜி.எஸ்.டி வரியில் அருண் ஜெட்லி திட்டவட்டம்..!!

மேலும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி வரிதிப்பு தற்போது நடைமுறையில் உள்ள வரி அமைப்பை காட்டிலும் குறைவாக உள்ளதாக அருண் ஜெட்லி கூறினார்.

கார்களுக்கான ஜி.எஸ்.டி வரியில் அருண் ஜெட்லி திட்டவட்டம்..!!

தகவல் அறியும் காரணங்கள் மற்றும் விரிவான விவாதங்கள் மூலம் பரிசீலிக்கப்பட்ட வரி விதிப்பை ஜி.எஸ்.டி கவுன்சில் நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கார்களுக்கான ஜி.எஸ்.டி வரியில் அருண் ஜெட்லி திட்டவட்டம்..!!

ஹைபிரிட் கார்களுக்கான ஜி.எஸ்.டி வரி விதிப்பை குறைக்கவேண்டும் என கார் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று பேசிய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி,

"நாடு முழுவதிலும் உள்ள பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி திட்டமிட்டபடி இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், சிலருக்காக அது பரிசீலனை செய்யப்படமாட்டாது" என்று கூறினார்.

கார்களுக்கான ஜி.எஸ்.டி வரியில் அருண் ஜெட்லி திட்டவட்டம்..!!

சாதரன பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு இணையாக ஹைபிரிட் கார்களுக்கு ஜி.எஸ்.டி வரி போடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தற்போது 30.3 சதவீத வரி விதிப்பை பெறும் ஹைபிரிட் கார்கள் ஜி.எஸ்.டிக்கு பிறகு 43 சதவீத வரி மதிப்பில் விற்பனையாகும்.

கார்களுக்கான ஜி.எஸ்.டி வரியில் அருண் ஜெட்லி திட்டவட்டம்..!!

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ஹைபிரிட் கார்களை தயாரிக்க அதிக பொருள் செலவாகும், அதோடு அதனுடைய விற்பனை திறனும் கூடினால் வாடிக்கையாளர்களுக்கு ஹைபிரிட் கார்களை வாங்குவது பெரிய சுமையாக தெரியும்.

கார்களுக்கான ஜி.எஸ்.டி வரியில் அருண் ஜெட்லி திட்டவட்டம்..!!

இதை மனதில் வைத்தே ஹைபிரிட் கார்களுக்கான ஜி.எஸ்.டி வரியை கார் நிறுவனங்கள் குறைக்க ஜி.எஸ்.டி கவுன்சிலிற்கு கோரிக்கை விடுத்தன.

கார்களுக்கான ஜி.எஸ்.டி வரியில் அருண் ஜெட்லி திட்டவட்டம்..!!

அதன் நிலவரம் தெரியும் முன்பே, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ஜி.எஸ்.டி இறுதி செய்யப்பட்டுவிட்டதாக அறிவித்துள்ளது ஹைபிரிட் கார் தயாரிப்பாளர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

கார்களுக்கான ஜி.எஸ்.டி வரியில் அருண் ஜெட்லி திட்டவட்டம்..!!

ஹைபிரிட் கார்களை தயாரிக்கும் கார் நிறுவனங்கள், ஜி.எஸ்.டி வரி விதிப்பில் கார்களுக்கு 18 சதவீதத்திற்குள் வரி விதிப்பு இருக்க வேண்டும் என கோரிக்கையை விடுத்திருந்தன.

English summary
Arun Jaitely, Union of Finance Minister, hints no review on GST for hybrid cars. Click for detials...
Story first published: Monday, June 12, 2017, 16:10 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark