மழைவெள்ள பாதிப்பால் பழுதடைந்த கார்களுக்கு ஹூண்டாய் நீட்டும் உதவிக்கரம்..!!

Written By:

மும்பையில் ஏற்பட்ட கடும் மழை வெள்ள பாதிப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையையும், அவர்களின் உடமைகளையும் புரட்டி போட்டு இருக்கிறது.

பாதிக்கப்பட்ட கார்களுக்கு ஹூண்டாய் நீட்டும் உதவிக்கரம்..!!

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது கார்கள் தான். மழை வெள்ளத்தால் மூழ்கியும், அடித்து செல்லப்படும் கார்களின் புகைப்படங்களை நாம் தினமும் கடந்து வருகிறோம்.

பாதிக்கப்பட்ட கார்களுக்கு ஹூண்டாய் நீட்டும் உதவிக்கரம்..!!

மும்பை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களுக்கான சிறப்பு சர்வீஸ்கள் வழங்கப்படும் என்ற தாராள அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது ஹூண்டாய் இந்தியா.

Recommended Video
2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
பாதிக்கப்பட்ட கார்களுக்கு ஹூண்டாய் நீட்டும் உதவிக்கரம்..!!

சிறப்பு சர்வீஸ் ஆப்ரேஷன் குழு மற்றும் 30 அவசர சர்வீஸ் வாகனங்களை ஆகியவற்றை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்களுக்காக ஹூண்டாய் தொடங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட கார்களுக்கு ஹூண்டாய் நீட்டும் உதவிக்கரம்..!!

பழுதான கார்களை சரிசெய்ய கட்டணமில்லா சேவை எண்களை (18001024645/ 0124-4343937) ஹூண்டாய் இந்தியா பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட கார்களுக்கு ஹூண்டாய் நீட்டும் உதவிக்கரம்..!!

இதுகுறித்து பேசிய ஹூண்டா மோட்டார் இந்தியாவில் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஒய்.கே. க்கூ

"எப்போதும் வாடிக்கையாளர்களின் நலனையே ஹூண்டாய் விரும்புகிறது. சர்வீஸ் உடன் கூடிய இந்த சேவை மும்பை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது"

பாதிக்கப்பட்ட கார்களுக்கு ஹூண்டாய் நீட்டும் உதவிக்கரம்..!!

"வாடிக்கையாளர்கள் நலன் மற்றும் தேவையை கருதியே தொடர்ந்து ஹூண்டாயின் செயல்பாடுகள் இருக்கும்" என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட கார்களுக்கு ஹூண்டாய் நீட்டும் உதவிக்கரம்..!!

பழுதான கார்களை சரிசெய்யும் பணிகளுக்காக மொத்தம் 350 தொழில்நுட்பவியலாளர்களை ஹூண்டாய் இந்தியா பணியில் அமர்த்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட கார்களுக்கு ஹூண்டாய் நீட்டும் உதவிக்கரம்..!!

காப்பீட்டு தேவை, துருபிடித்த பகுதிகளை நீக்கும் சர்வீஸ் போன்றவற்றுக்கு சராசரி கட்டணத்தில் இருந்து 50 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எஞ்சினுக்கான ஆயில் மாற்றும் பணிகள் இந்த சர்வீஸின் கீழ் இலவசமாகவே வழங்குகிறது ஹூண்டாய் இந்தியா.

பாதிக்கப்பட்ட கார்களுக்கு ஹூண்டாய் நீட்டும் உதவிக்கரம்..!!

பழுது பார்க்கப்பட்ட கார்கள் தொடர்ந்து நல்ல முறையில் இயங்குகின்றவா என்பதை கண்டறிய 2 மாதங்களுக்கு பிறகு சிறப்பு முகாம் ஒன்றை நடத்தவும், ஹூண்டாய் இந்தியா திட்டமிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கார்களுக்கு ஹூண்டாய் நீட்டும் உதவிக்கரம்..!!

இதுமட்டுமின்றி கார்கள் பாதுகாப்பை குறித்த தகவல்களை சமூக வலைதள பதிவுகள், எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு தருகிறது.

பாதிக்கப்பட்ட கார்களுக்கு ஹூண்டாய் நீட்டும் உதவிக்கரம்..!!

பழுதான கார்களுக்கு உதிர்பாகங்கள் கிடைக்க ஹூண்டாயின் உதிர்பாக டீலரான மோபிஸ் மும்பையில் பல்வேறு பகுதிகளில் துரித நேரத்தில் சப்ளை செய்து வருகிறது.

பாதிக்கப்பட்ட கார்களுக்கு ஹூண்டாய் நீட்டும் உதவிக்கரம்..!!

மும்பை மட்டுமில்லாமல், கார்கள் பாதிக்கப்பட்ட எந்த பகுதிகளுக்கும் உதிர்பாகங்கள் உரிய நேரத்தில் கிடைக்கும்படியான நடவடிக்கைகளை மோபிஸ் மேற்கொண்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட கார்களுக்கு ஹூண்டாய் நீட்டும் உதவிக்கரம்..!!

மழை வெள்ள பாதிப்புகளால் பழுதான கார்களுக்கு ஹூண்டாய் வழங்கும் சிறப்பு சர்வீஸ்கள்:

  • வெள்ள பாதிப்பில் இருந்து கார்களை வெளியே இழுத்து கொண்டு வர ரோடுசைடு அசிஸ்ட்டென்ஸ்.
  • காரின் நிலையை கண்டறிந்த உடன், இருக்கும் இடத்தில் இருந்தே காப்பீட்டு உதவி
பாதிக்கப்பட்ட கார்களுக்கு ஹூண்டாய் நீட்டும் உதவிக்கரம்..!!
  • அனைத்து வெள்ளம் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கும் எதிர் துருப்பு சிகிச்சைக்கு 50 சதவீத தள்ளுபடி
  • 50% வாடிக்கையாளர் பொறுப்பு காப்பீட்டு ஆதரவு
  • மொத்த இழப்பு நிகழ்வுகளுக்கு கவனமீர்க்கும் பரிவர்த்தனை திட்டங்கள்.
பாதிக்கப்பட்ட கார்களுக்கு ஹூண்டாய் நீட்டும் உதவிக்கரம்..!!

மும்பை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்களுக்கான சர்வீஸ் அறிவித்திருப்பது ஹூண்டாய் நிறுவனத்திற்கு அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பாராட்டுதலை பெற்று தந்துள்ளது.

பாதிக்கப்பட்ட கார்களுக்கு ஹூண்டாய் நீட்டும் உதவிக்கரம்..!!

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் அறிவித்துள்ள இந்த சர்வீஸ் வழிமுறைகளை அதற்காக கொடுக்கப்பட்டுள்ள தொலைப்பேசி எண் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Read in Tamil: Hyundai Extends Service Support To Mumbai Flood Affected Cars. Click for Details...
Story first published: Saturday, September 2, 2017, 13:27 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos