உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

சவுதி இளவரசர்களில் ஒருவரான அல்வாலீத் பில் தலால் என்பவர் தன்னை பற்றி தவறான தகவல் வெளியிட்டதாக சமீபத்தில் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை மீது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதற்கு நஷ்ட ஈடாக 9.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணத்தை அந்நிறுவனம் அவருக்கு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

அப்படி என்ன அவ்வளவு முக்கியமான செய்தியை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தவறாக வெளியிட்டது என்ற யோசிக்கிறீர்களா? அவரது சொத்து மதிப்பை தவறாக கூறிவிட்டார்களாம். அவரது சொத்து மதிப்பு 22.6 பில்லியன் அமெரிக்கா டாலர் எனவும் அவர் உலகின் 34வது பெரிய பணக்காரர் எனவும் அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

ஆனால் உண்மையில் அவரின் சொத்து மதிப்பு 30.6 பில்லியன் டாலராகும். அவர் உலகின் 20வது பெரிய பணக்காரராவார். இந்த தகவலை குறைத்து சொன்னதால் அவருக்கு வெளி உலகில் உள்ள மரியாதை குறைந்துவிட்டதாக கூறி இந்த வழக்கை அவர் தொடர்ந்துள்ளார்.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

இவ்வளவு கோடி ரூபாய் பணத்திற்கு சொந்தகாரரான இவர் சவுதி அரேபியாவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் இவர் அரபு ஊடகம், சர்வதேச பெரும் தனியார் நிறுவனங்கள், டுவிட்டர், சீன இ-காமர்ஸ் சந்தையான ஜெடி டாட் காம் என்ற நிறுவனங்களின் பங்குகளையும் வைத்திருக்கிறார்.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

இவர் சவுதி இளவரசர் தலாலின் மற்றும் மோனா அல் சோல்த் என்பவரின் மகனாவார். இவர் தனது படிப்பை அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் படித்தார். அப்பொழுதே அவர் சவுதி நாகரீக உடையில் இருந்து மேற்கத்திய நாட்டு நாகரீகத்திற்கு மாறிவிட்டார்.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

இவர் கடந்த 1991ம் ஆண்டு தனது 36வது வயதில் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டாலரை சிட்டிகார்ப் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தார். 2005ம் ஆண்டு அவர் அதை 10 பில்லியன் டாலராக திரும்ப பெற்றார். இதில் இவர் பெரும் லாபம் அடைந்தார்.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

அவர் அமீரா என்ற பெண்ணை திருமணம் செய்து இருவரும் எட்டு ஆண்டுகள் ஒன்றாக இணைந்து வாழ்ந்தனர். கடந்த 2015ம் ஆண்டு இவர் அளித்த ஒரு பேட்டியில் இவர்கள் தற்போது பிரிந்துவிட்டனர் என தெரிகிறது.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

இவரிடம் சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தங்க, வைர நகைகள் இருக்கிறதாம். அவற்றில் பலவற்றை இவரோ, இவரது மனைவியோ பயன்படுத்தியதே இல்லை என கடந்த 2009ம் ஆண்டு இவர் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

இவர் பெண் சுதந்திரத்தின் தீவிர ஆதரவாளராக உள்ளார். இவர் அளித்த ஒரு பேட்டியில் "நான் தகுதியை பற்றி மட்டுமே அனைத்து இடங்களிலும் பார்க்கிறேன். அதில் பாலின வேறுபாட்டை நான் பார்ப்பதில்லை. நான் எப்பொழுதும் பெண்களுக்கு ஆதரவாகவே உள்ளேன். எங்கள் நாட்டில் பெண்களுக்கான போதிய அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை" என்றார்.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

மேலும் இவர் உலகில் புகழ் பெற்ற ஓட்டலில் 25 சதவீத பங்கை வைத்திருக்கிறார். மேலும் லண்டனில் ஒரு மிகப்பெரிய ஓட்டலை தனக்கு சொந்தமாக வைத்திருக்கிறார்.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

உலகின் உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபா என்பது உங்களுக்கு எல்லாம் தெரிந்த விஷயம்தான். ஆனால் அதை விட உயரமான கட்டிடத்தை இவர் கட்டமைத்து வருகிறார். கிங்டம் டவர் என்ற பெயரில் கட்டமைக்கப்படும் இந்த கட்டிடம் 3,280 அடி உயரம் கொண்டதாக இருக்குமாம். இது புர்ஜ் கலிஃபாவை விட 568 அடி அதிக உயரம் கொண்டதாகும்.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

இவ்வளவு பெரிய பணக்காரரிடம் உள்ள ஆட்டோமொபைல் உலகம் பற்றி தெரியுமா? நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு பெரிய கலெக்ஷன்களை தன் வசம் வைத்திருக்கிறார்.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

இவரிடம் நியூ கிங்டம் என்ற 5கேஆர் ரக சிறிய கப்பல் ஒன்று உள்ளது. சுமார் 282 அடி நீளம் கொண்ட இந்த கப்பலில் டிஸ்கோ, சினிமா, ஹெலிபேட், நீச்சல் குளம், ஓய்வு அறை உள்ளிட்ட பல வசதிகள் இருக்கிறது. இதை அவர் தனது சொந்த பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

தற்போது இதை விட பெரிய கப்பலை வடிவமைத்து வருகிறார். அதன் மொத்த நீளம் 557 அடி என சொல்லப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலராகும்.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

மேலும் அவரிடம் பல்வேறு உயர் ரக கார்களின் கலெக்ஷன்களும் உள்ளன. அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தோம் கார் இருக்கிறது. அதன் மதிப்பு சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலராகும். மேலும் இவரிடம் மெர்ஸிடிஸ் பென்ஸ் எஸ்எல் 600 என்ற வைரம் பதிக்கப்பட்ட கார் இருக்கிறது. இதன் மதிப்பு 48 மில்லியன் அமெரிக்க டாலராகும்.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

மேலும் இவரிடம் ஏர்பஸ் 380 என்ற விமானம் இருந்ததாக கூறப்படுகிறது. இது மூன்று அடுக்கு தளங்களை கொண்டதாகும். அதில் 10 பேர் அமரக்கூடிய மீட்டிங் ஹால், ஹோலோகிராபிக் புரோஜக்டர் உடன் கூடிய ஃபோர்டு ரூம், இவரது ரோல்ஸ் ராய்ஸ் காரை நிறுத்தக்கூடிய வகையிலான கராஜ் என பல்வேறு வசதிகள் இதில் இருக்கிறது. இதன் மதிப்பு 500 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

சமீபத்தில் இவர் இந்த விமானத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இவர் புதிதாக துவங்கிய ஒரு தொழிலில் தனது முதலீட்டை செய்ய இதை விற்றுள்ளார். எவ்வளவு விற்பனை செய்தார் என்ற விபரம் இதில் இல்லை.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

மேலும் இவரிடம் போயீங் 747 என் விமானம் சொந்தமாக உள்ளது. இதில் இரண்டு பெட்ரூம்கள், 14 சீட்கள் கொண்ட டைனிங் டேபிள் உள்ளது. இதில் 11 விமான பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதன் மதிப்பு 220 மில்லியன் அமெரிக்க டாலராகும். மேலும் இவர் லிபியா நாட்டின் தலைவர் மும்மர் க்வாட்ஃப்பி யிடம் 120 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் புதிய விமானம் ஆர்டர் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

இவர் தற்போது 420 ரூம்கள் கொண்ட சவுதியில் உள்ள பெரும் அரண்மனையில் வாழ்கிறார். அதில் இன்டோர் மற்றும் அவுட்டோர் நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட் உள்ளிட்ட பல வசதிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

மேலும் இவரிடம் நகரக்கு வெளிப்பகுதியில் சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் ஒரு பண்ணை வீடு இருப்பதாகவும், அதில் அவர் சிறிய மிருக காட்சி சாலையையே வைத்திருப்பதாகவும், அவருக்கு அங்கு சென்று வேட்டையாடுவது மிகவும் பிடித்தமான விஷயம் எனவும் தெரிகிறது.

உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

இவர் இது மட்டும் அல்லாது ஏழைகளுக்கு உதவுவதிலும் தாராள மனம் படைத்தவராம். பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகிறார். கடந்த 2004ம் ஆண்டு வந்த சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹார்வேர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலை.,கள் மூலம் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார்.

Most Read Articles

Tamil
English summary
Billionare get high end cars flights ships. Read in Tamil
Story first published: Saturday, October 13, 2018, 13:54 [IST]
 
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more