கியா செல்டோஸின் சிறப்பம்சங்களுடன் வெளியாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி!

ஐஎக்ஸ்25 என்ற பெயரில் சீனாவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய க்ரெட்டா கார் இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக இந்திய சாலைகளில் இந்த கார் சோதனை ஓட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

கியா செல்டோஸின் சிறப்பம்சங்களுடன் வெளியாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி!

இந்நிலையில் தமிழ்நாட்டில் நடந்த சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் இருந்து பார்க்கையில், புதிய க்ரெட்டா காரில் தற்போதைய காரை விட முன்புற டிசைன் உள்பட பல அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.

கியா செல்டோஸின் சிறப்பம்சங்களுடன் வெளியாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி!

முன்புற க்ரில், பகல் நேரத்தில் ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகளுடன் கூடிய பிளவுப்பட்ட ஹெட்லைட்ஸ் மற்றும் செங்குத்தாக பிளவுப்பட்ட பின்புற விளக்குகள் போன்றவை இந்த புதிய காரின் டிசைன் மாற்றங்களாக உள்ளன.

கியா செல்டோஸின் சிறப்பம்சங்களுடன் வெளியாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி!

புதிய க்ரெட்டா காரின் நீளம் 4,300 மிமீ, அகலம் 1790 மிமீ, உயரம் 1635 மிமீ ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வீல்பேஸ் 2,610 மிமீ ஆக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது விற்பனையாகி வரும் மாடலை விட இந்த மாடலில் நீளம் மற்றும் அகலம் 10 மிமீ அதிகரிக்கப்பட்டும், உயரம் 8 மிமீ மற்றும் வீல்பேஸ் 20 மிமீ அதிகரிக்கப்பட்டும் உள்ளது.

கியா செல்டோஸின் சிறப்பம்சங்களுடன் வெளியாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி!

இந்தியாவில் அறிமுகப்படுத்தபடவுள்ள இந்த ஹூண்டாய் ஐஎக்ஸ்25 என்கிற புதிய க்ரெட்டா மாடல், உட்புறத்திலும் தடிமனான பாகங்களால் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன் உட்புறத்தில் செங்குத்தாக அமைக்கப்பட்ட தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், இதனுடன் ஏசி-கான துவாரங்கள், முழுவதும் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட தகவல்களை பெறக்கூடிய திரை, புதிய ஸ்டேரிங் சக்கரம் மற்றும் 360 டிகிரி கேமிரா சிஸ்டம் போன்ற சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கியா செல்டோஸின் சிறப்பம்சங்களுடன் வெளியாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி!

கியா செல்டோஸை போல இந்த காரும் ஸ்மார்ட், ஸ்போர்ட், எக்கோ மற்றும் கம்போர்ட் என நான்கு ட்ரைவிங் முறைகளில் வர இருக்கிறது. மேலும் இந்த புதிய க்ரெட்டாவில் பனி, மண் மற்றும் மணல் போன்ற நிலப்பரப்புகளுக்கு ஏற்ற வகையில் காரை செலுத்தி செல்லும் வசதியும் வழங்கப்பட்டுள்ளன.

கியா செல்டோஸின் சிறப்பம்சங்களுடன் வெளியாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி!

பாதுகாப்பு அம்சங்களாக ஆறு காற்றுப் பைகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்பை புகைப்படங்களில் புலப்படும் 4 டிஸ்க் ப்ரேக்குகள் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் நீண்ட தூர பயணத்தின் போது டிரைவர் ஓய்வு எடுக்க வேண்டிய நேரத்தை நினைவூட்டும் வசதி, செல்ல வேண்டிய பாதையை காட்டும் வழிகாட்டு வசதி, முன்புறத்தில் எந்தவொரு பொருளையும் மோதாமல் தடுக்க எச்சரிக்கை விடுக்கும் ப்ரேக்கிங் அமைப்பு மற்றும் காரை இயக்க துவங்கும்போது காரில் இருக்கும் குறைகளை பற்றி விடுக்கப்படும் எச்சரிக்கை அமைப்பு போன்றவையும் பாதுகாப்பு அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

Most Read:நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...

கியா செல்டோஸின் சிறப்பம்சங்களுடன் வெளியாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி!

கியா செல்டோஸ் மாடலில் உள்ள பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் புதிய க்ரெட்டாவின் காரிலும் வழங்கப்பட்டுள்ளன. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 115 பிஎச்பி பவரையும் 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. மற்றொரு என்ஜின் தேர்வான 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 140 பிஎச்பி மற்றும் 242 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

கியா செல்டோஸின் சிறப்பம்சங்களுடன் வெளியாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி!

இதன் டீசல் வேரியண்ட் என்ஜின் 1.5 லிட்டரில் 115 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இந்த என்ஜின் தேர்வுகளுடன் 6 வேக நிலைகளுக்கான மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றுன் சிவிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் ஏழு வேக நிலைகளை வழங்கக்கூடிய டிசிடி ஆட்டோமேட்டிக் போன்ற ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. இந்த புதிய க்ரெட்டாவின் விலை ரூ.10- 16 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என தெரிகிறது.

Most Read:2 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பெற்ற நடிகை ஸ்ரீதேவி மகள்! விலையை விடுங்க... இந்த கனெக்ஸன்தான் ஹைலைட்

கியா செல்டோஸின் சிறப்பம்சங்களுடன் வெளியாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி!

கியா செல்டோஸ் மாடலின் பல அம்சங்களை அப்படியே கொண்டுள்ள இக்கார் 2020 ஆட்டோ எக்ஸோவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது இதனுடன் மேலும் சில புதிய மாடல்களையும் அறிமுகப்படுத்த ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
New 2020 Hyundai Creta SUV spied on test with Kia Seltos in Tamil Nadu
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X