ஏஎன்சிஏபி க்ராஸ் டெஸ்ட்டில் 4 ஸ்டார்களை பெற்ற ஹூண்டாய் வென்யூ....

ஆஸ்திரேலியன் நியூ கார் அஸஸ்மெண்ட் ப்ரோகிராம் (ஏஎன்சிஏபி) அமைப்பு ஹூண்டாய் வென்யூ மாடலுக்கு பாதுகாப்பு மதிப்பீட்டாக 4 ஸ்டார்களை வழங்கியுள்ளது. ஹூண்டாய் வென்யூ மாடலை முதன்முறையாக க்ராஸ் டெஸ்ட்டில் உட்படுத்தி பாதுகாப்பு மதிப்பெண்களையும் தகவல்களையும் வெளியிட்ட முதல் அமைப்பு ஏஎன்சிஏபி ஆகும்.

ஏஎன்சிஏபி க்ராஸ் டெஸ்ட்டில் 4 ஸ்டார்களை பெற்ற ஹூண்டாய் வென்யூ....

இந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹூண்டாய் வென்யூ கார் பெரியவர்களுக்கு 91 சதவீதம் பாதுகாப்பானது. குழந்தைகளுக்கு 81 சதவீதம் பாதுகாப்பான வாகனமாகும். மேலும் 62 சதவீதம் பாதசாரிகளுக்கு பாதுகாப்பானதாகும். வென்யூ மாடல் 62 சதவீத பாதுகாப்பு உதவி அம்சங்களுடன் உள்ளதாக இந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

ஏஎன்சிஏபி க்ராஸ் டெஸ்ட்டில் 4 ஸ்டார்களை பெற்ற ஹூண்டாய் வென்யூ....

அதாவது இந்த கார் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின், ட்யூல் முன்புற காற்றுப்பைகள், பக்கவாட்டில் மார்பு பகுதிகளை பாதுகாக்க காற்றுப்பைகள், முன்புற மற்றும் பின்புற இருக்கைகளின் மேற்புறத்தில் விபத்தில் இருந்து தலையை பாதுகாக்க காற்றுப்பைகள் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை இந்த கார் கொண்டுள்ளது. இதனால் தான் இந்த அமைப்பு வென்யூ காருக்கு 4 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டை வழங்கியுள்ளது.

ஏஎன்சிஏபி க்ராஸ் டெஸ்ட்டில் 4 ஸ்டார்களை பெற்ற ஹூண்டாய் வென்யூ....

இந்த பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமில்லாமல், அவசரகாலத்தில் ஆட்டோமேட்டிக்காக செயல்படும் ப்ரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட் உடன் லேன் சப்போர்ட் சிஸ்டம், காரை இயக்குவதற்கு முன்பாக காரில் உள்ள குறைப்பாடுகளை சுட்டி காட்டும் வசதி மற்றும் எமர்ஜென்சி லேன் கீப்பிங் போன்ற பாதுகாப்பு தொழிற்நுட்பங்களும் வென்யூ மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் உள்ளன.

ஏஎன்சிஏபி க்ராஸ் டெஸ்ட்டில் 4 ஸ்டார்களை பெற்ற ஹூண்டாய் வென்யூ....

க்ராஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வென்யூ காரை குறித்து ஏஎன்சிஏபி அமைப்பு கூறுகையில், பயணிகள் பயன்பாட்டு வாகனமான ஹூண்டாய் வென்யூ முக்கியமான ஆப்-செட் சோதனைகள் அனைத்திலும் நிலையானதாக உள்ளது. க்ராஸ் டெஸ்ட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள டம்மி காரில் மார்பு மற்றும் கால்களுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களை ஓட்டுனர் உள்பட முன்புறத்தில் அமரும் இருவருக்கும் ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது.

ஏஎன்சிஏபி க்ராஸ் டெஸ்ட்டில் 4 ஸ்டார்களை பெற்ற ஹூண்டாய் வென்யூ....

உடலில் எளிதில் பாதிப்படையும் பாகங்களுக்கு பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளது. இந்த முழு சோதனை அறிக்கையின் மூலம் வென்யூ காரில் முன்புற இருக்கையாளர்களுக்கு மார்பு பகுதி உள்பட முக்கிய பாகங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. பின்புறத்தில் அமருபவர்களுக்கு கழுத்து பகுதியில் போதுமான அளவிலும் மார்பு பகுதியில் சிறிய அளவிலும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

ஏஎன்சிஏபி க்ராஸ் டெஸ்ட்டில் 4 ஸ்டார்களை பெற்ற ஹூண்டாய் வென்யூ....

இந்த க்ராஸ் சோதனையில், ஓட்டுனரின் பக்கவாட்டு பகுதிகள் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது. மார்பு மற்றும் மற்ற முக்கிய உறுப்புகளுக்கு பாதுகாப்பு போதுமானதாக உள்ளது. சாய்வான நிலையில் காரை டெஸ்ட் செய்தபோதும் நல்ல முடிவுகளே வெளிவந்துள்ளன.

ஏஎன்சிஏபி க்ராஸ் டெஸ்ட்டில் 4 ஸ்டார்களை பெற்ற ஹூண்டாய் வென்யூ....

இந்த க்ராஸ் சோதனை ஒருபுறம் இருக்க, வென்யூ மாடலுக்கு சமீபத்தில் இந்தியன் கார் ஆப் தி இயர் 2020 விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த விருது குறித்து மேலும் தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

இந்திய சந்தையில் பயணிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் மற்றொரு முன்னணி நிறுவனமாக ஹுண்டாய் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. ஹூண்டாய் வென்யூ மாடலுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த 4 ஸ்டார் மதிப்பீடு அந்த காரில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை வெளிக்காட்டுகிறது.

Most Read Articles
English summary
Hyundai Aura India Launch Confirmed For 21 January 2020: Details And Expected Price
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X