மாருதி ஈக்கோ காரில் பிஎஸ்-6 எஞ்சின் உண்டா, இல்லையா?

மாருதி ஈக்கோ காரில் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்படுவது குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி ஈக்கோ காரில் பிஎஸ்-6 எஞ்சின் உண்டா, இல்லையா?

மிக குறைவான பட்ஜெட்டில் கிடைக்கும் 7 சீட்டர் கார் மாடல் மாருதி ஈக்கோ. அதிக இடவசதியுடன் மாருதியின் சிறந்த சர்வீஸ் நெட்வொர்க் மூலமாக ஈக்கோ கார் விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை தக்க வைத்து வருகிறது. இருப்பினும், நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்ற பாதுகாப்பு கொண்ட கார் மாடலாக பார்க்கப்படவில்லை.

மாருதி ஈக்கோ காரில் பிஎஸ்-6 எஞ்சின் உண்டா, இல்லையா?

இந்த நிலையில், நாளை அமலுக்கு வர இருக்கும் புதிய க்ராஷ் டெஸ்ட் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஒப்பாக, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய மாருதி ஈக்கோ கார் சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கண்டத்திலிருந்து தப்பியது.

மாருதி ஈக்கோ காரில் பிஎஸ்-6 எஞ்சின் உண்டா, இல்லையா?

இதையடுத்து, அடுத்த கண்டத்தை தாண்ட வேண்டிய கட்டாயம் மாருதி ஈக்கோ காருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மாருதி ஈக்கோ காரில் 1.2 லிட்டர் ஜி சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சினை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

மாருதி ஈக்கோ காரில் பிஎஸ்-6 எஞ்சின் உண்டா, இல்லையா?

ஏனெனில், மாருதி ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ உள்ளிட்ட பல கார்களில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சினின் அமைப்பு மற்றும் டிரான்மிஷன் ஆகியவை ஈக்கோ காருக்கு பொருந்தாத அமைப்புடையது. அதாவது, ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாருதி ஈக்கோ காரில் பிஎஸ்-6 எஞ்சின் உண்டா, இல்லையா?

ஆனால், மாருதி ஈக்கோ கார் ரியர் வீல் டிரைவ் சிஸ்டத்தில் இயங்குகிகறது. எனவே, ஈக்கோ காரில் தற்போது பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்- 6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மாருதி ஈக்கோ காரில் பிஎஸ்-6 எஞ்சின் உண்டா, இல்லையா?

மாருதி ஈக்கோ காரில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோரல் எஞ்சின் 73 எச்பி பவரையும், 101 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. மாருதி ஈக்கோ காரின் சிஎன்ஜி மாடலானது 63 எச்பி பவரையும்,, 85 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

மாருதி ஈக்கோ காரில் பிஎஸ்-6 எஞ்சின் உண்டா, இல்லையா?

மாருதி ஈக்கோ காரின் எஞ்சின் பிஎஸ்-6 தரத்திற்கு ஏதுவாக மாற்றப்படுவதால், விலையும் அதிகரிக்கப்படும். தற்போது மாருதி ஈக்கோ கார் ரூ.3.52 லட்சம் முதல் ரூ.4.86 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. 7 சீட்டர் மாடலில் ஏசி வசதி கிடையாது என்பது மனதில் வைக்க வேண்டிய விஷயம்.

Most Read Articles
English summary
Maruti suzuki is planning to launch Eeco with BS-6 compliant petrol engine in India.
Story first published: Monday, September 30, 2019, 10:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X