அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தகவலை வெளியிடும் மாருதி சுஸுகி!

டீசல் வேரியண்ட் வாகனங்களின் உற்பத்தியை வருகின்ற 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்ததில் இருந்து நிறுத்த இருப்பதாக அறிவித்த மாருதி சுஸுகி நிறுவனம். தற்போது மேலுமொரு புதிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தகவலை வெளியிடும் மாருதி சுஸுகி!

மாருதி சுஸுகி நிறுவனம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டீசல் எஞ்ஜின் வாகனங்களின் உற்பத்தியை நிறுத்த இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது. அடுத்த ஆண்டு முதல் வரவிருக்கும் புதிய மாசு உமிழ்வு கட்டுப்பாடே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தகவலை வெளியிடும் மாருதி சுஸுகி!

புதிய மாசு உமிழ்வு கட்டுப்பாட்டின்படி, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக டீசல் எஞ்ஜின்களை மேம்படுத்துவதற்கு மிக அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்ற காரணத்தால் இந்த முடிவினை மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்துள்ளது. மாருதியின் இந்த திடீர் முடிவு, அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தகவலை வெளியிடும் மாருதி சுஸுகி!

இந்நிலையில், மாருதி சுஸுகி நிறுவனம், மேலும் ஒரு புதிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் சூப்பர் கேரி வேனின், டீசல் வேரியண்ட் உற்பத்தியையும் நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தகவலை வெளியிடும் மாருதி சுஸுகி!

மாருதி சுஸுகி நிறுவனம், இந்த சூப்பர் கேரி எனப்படும் சரக்கு ஏற்றிச் செல்லும் கமர்சியல் ரக வேனை கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. தொடர்ந்து, அந்த வருடத்தின் செப்டம்பர் மாதமே விற்பனைக்கும் வெளியிட்டது.

மேலும், இந்த கமர்ஷியல் ரக வாகனத்தை விற்பனைச் செய்ய நாடு முழுவதும் 250 அவுட்லெட்டுகள் நிறுவப்பட்டன. இவற்றின் மூலம் இதுவரை 34,807 யூனிட் சூப்பர் கேரி லோட் வேன்கள் விற்பனைச் செய்யப்பட்டுள்ளன.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தகவலை வெளியிடும் மாருதி சுஸுகி!

அவ்வாறு, இந்த வேன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் இரண்டு நிதியாண்டுகளில் மட்டுமே 20 ஆயிரம் யூனிட்களை விற்றுத் தீர்த்தன. நிதியாண்டு 2016-17 இல் மட்டும் 900 யூனிட்களும், 2017 முதல் 18 வரை 10 ஆயிரத்து 33 யூனிட்களும் விற்பனையாகின. மேலும், கடந்த 2018ம் ஆண்டு முதல் தற்போது வரை 23 ஆயிரத்து 874 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தகவலை வெளியிடும் மாருதி சுஸுகி!

இவ்வாறு, மாருதி சுஸுகி டீசல் வேரியண்ட் சூப்பர் கேரி வேனிற்கான சந்தை அதிகரித்து வரும்நிலையில், இதனை வருகின்ற 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து, விற்பனையில் நிறுத்த இருப்பதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தகவலை வெளியிடும் மாருதி சுஸுகி!

இந்த வேனின் உற்பத்தியை நிறுத்துவதற்கும் புதிய மாசு உமிழ்வு விதியேக் காரணமாக இருக்கின்றது. இந்த வேனின் டீசல் எஞ்ஜினை பிஎஸ்6 தரத்திற்கு உயர்த்தினால். அதன் விலை கணிசமான அளவு உயர்வைப் பெறும். இதனால், தற்போது இருக்கும் விலையைக் காட்டிலும் கூடுதலான விலையில் சூப்பர் கேரி விற்பனைக்கு வரும். மேலும், இவ்வாறு விலையை உயர்வைப் பெற்றால் வேனின் விற்பனை சரிவைக் காணும். இது மிகப் பெரிய அளவிலான இழப்பீட்டை ஏற்படுத்தும்.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தகவலை வெளியிடும் மாருதி சுஸுகி!

இதுபோன்ற காரணங்களால் இந்த சூப்பர் கேரியின் டீசல் வேரியண்டின் உற்பத்தியை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத்தில் இருந்து நிறுத்த இருப்பதாக மாருதி சுஸுகி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதேசமயம், சூப்பர் கேரியினை ஜி12பி 1.2 லிட்டர் 4சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் வேரியண்டில் உற்பத்தி செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த எஞ்ஜின் 73.42 பிஎஸ் பவரையும், 101 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. ஆனால், இந்த வேரியண்ட் சூப்பர் கேரி உள்நாட்டு சந்தைக்காக அல்ல, வெளிநாடுகளின் ஏற்றுமதிக்காக மட்டும்தான்.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தகவலை வெளியிடும் மாருதி சுஸுகி!

தொடர்ந்து, உள்நாட்டு சந்தைக்காக மாருதி சுஸுகி நிறுவனம், இந்த சூப்பர் கேரியை பெட்ரோல்-சிஎன்ஜி வேரியண்டில் தயாரிக்க இருக்கின்றது. இந்த இரண்டு வேரியண்ட்களும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் அதிக லாபத்தை வழங்கும் திறனுடயவை என கூறப்படுகிறது.

மாருதி சுஸுகியின் இந்த புதிய சூப்பர் கேரி, டாடா நிறுவனத்தின் ஏஸ், அசோக் லேலேண்டின் தோஸ்த் மற்றும் மஹிந்திரா சுப்ரோ ஆகிய லோட் வேன்களுடன் போட்டிபோடும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki Super Carry Diesel To Be Discontinued By April 2020. Read In Tamil.
Story first published: Saturday, April 27, 2019, 13:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X