ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு சரியான மாற்றாக வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் உற்பத்தி விரைவில் துவங்க இருக்கும் நிலையில், இதன் ரகத்தில் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்களின் ஆவல் அதிகரித்துள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு சரியான மாற்றாக வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

அடுத்த மாதம் அறிமுகமாகும் இரண்டு புதிய கார் மாடல்கள் இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டி இருக்கிறது. ஒன்று எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மற்றொன்று, ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி. இந்த இரண்டு மாடல்களுமே டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் புதிய அத்யாயத்தை எழுத இருக்கின்றன.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு சரியான மாற்றாக வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

இந்த சூழலில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் உற்பத்தி வரும் 28ந் தேதி துவங்க இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதன்மூலமாக, எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு சரியான மாற்றாக வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

குஜராத் மாநிலம், ஹலோல் பகுதியில் உள்ள செயிக் குழுமத்தின் ஆலையில்தான் புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட உடன் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும் என்று தெரிகிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு சரியான மாற்றாக வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

சீனாவில் விற்பனை செய்யப்படும் பவோஜுன் 530 எஸ்யூவியின் அடிப்படையில் எம்ஜி பிராண்டில் உருவாக்கப்பட்டு இருக்கும் மாடல்தான் ஹெக்டர். இந்தியாவிற்காக பல பிரத்யேக மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முகப்பு க்ரில், எம்ஜி லோகோ போன்றவற்றுடன் எம்ஜி பிராண்டு மாடலாக மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு சரியான மாற்றாக வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

இந்த காரில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நேரடி இணைய வசதியை பெற இருக்கிறது. இதனால், பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை நேரடியாக பெற முடியும். இதுதான் இந்தியாவின் முதல் நேரடி இணைய வசதி கொண்ட கார் மாடலாகவும் இருக்கும் என்று தெரிகிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு சரியான மாற்றாக வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

இந்த புதிய எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். அதேபோன்று, டீசல் மாடலில் 2.0 லிட்டர் மாடலில் 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் எஞ்சின் இடம்பெற்றுள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு சரியான மாற்றாக வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

பெட்ரோல், டீசல் எஞ்சின் மாடல்களில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கிடைக்கும். இந்த இரண்டு எஞ்சின்களுமே பிஎஸ்- 6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு சரியான மாற்றாக வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

மேலும், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய இரண்டு ஆணழகன் மாடல்களுக்கும் சிறந்த மாற்றுத் தேர்வாக எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் பாரம்பரியமும் எல்லோரின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

Most Read Articles
English summary
Chinese-owned British carmaker MG Motor is all set to launch its first -ever vehicle in India in the form of the Hector SUV. Now a new report by Autocar India has revealed that production of the MG Hector is set to start on April 28 at the SAIC production facility in Halol, Gujarat.MG Hector Could Be The Best Choice In The Segment.
Story first published: Wednesday, April 24, 2019, 18:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X