இரு கார்களை டேப்பால் ஒட்டிய இளைஞர்கள்... எதற்கு தெரிஞ்சா கண்டிப்பா திட்டுவீங்க... வீடியோ!

டேப்பால் இரு கார்களை ஒட்டி இளைஞர்கள் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இரு கார்களை டேப்பால் ஒட்டிய இளைஞர்கள்... எதற்கு தெரிஞ்சா கண்டிப்பா திட்டுவீங்க... வீடியோ!

கிழிந்த காகிதம், பெட்டி மற்றும் அலங்காரப் பொருட்கள் இதுபோன்ற சிலவற்றை ஒட்டவே (இணைக்க) டேப்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இங்கு இளைஞர்கள் சிலர் இரு மாருதி சுசுகி வேகன் ஆர் காரை டேப் கொண்டு ஒட்டி இருக்கின்றனர். கார்களை ஒட்டியது மட்டுமின்றி அவற்றை இயக்கி வீடியோவும் எடுத்திருக்கின்றனர்.

இரு கார்களை டேப்பால் ஒட்டிய இளைஞர்கள்... எதற்கு தெரிஞ்சா கண்டிப்பா திட்டுவீங்க... வீடியோ!

எதற்காக இந்த இளைஞர்கள் இவ்வாறு செய்திருக்கின்றனர்?, என்பதுகுறித்த தகவலை இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

இளைஞர்களின் இந்த விநோதமான செயல்குறித்த வீடியோவை கிரேஸி எக்ஸ்ஒய்இசட் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. இதன் மூலமே இந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

இரு கார்களை டேப்பால் ஒட்டிய இளைஞர்கள்... எதற்கு தெரிஞ்சா கண்டிப்பா திட்டுவீங்க... வீடியோ!

அண்மைக் காலங்களாக இளைஞர்கள் மத்தியில் வீடியோ சார்ந்த மோகம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அதிலும், லைக்குகளுக்காக அவர்கள் செய்யும் அட்டூழியம் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் அமைகின்றது.

இரு கார்களை டேப்பால் ஒட்டிய இளைஞர்கள்... எதற்கு தெரிஞ்சா கண்டிப்பா திட்டுவீங்க... வீடியோ!

அந்தவகையிலேயே பலரின் வசைப்பாடலுக்கு தற்போதைய கார் டேப் சம்பவம் ஆளாகியிருக்கின்றது. ஆனால், இந்த இளைஞர்கள் யுட்யூப்பில் அதிக பார்வையாளர்களைச் சேர்த்து அதன் மூலம் வருவாய் ஈட்டும் விதமாகவே இந்த செயலை மேற்கொண்டிருக்கின்றனர். இதற்காகவே இரு மாருதி வேகன்ஆர் கார்களை டேப் போட்டு ஒட்டி, இயக்கியிருக்கின்றனர்.

இரு கார்களை டேப்பால் ஒட்டிய இளைஞர்கள்... எதற்கு தெரிஞ்சா கண்டிப்பா திட்டுவீங்க... வீடியோ!

மேலும், அந்த வீடியோவை யுட்யூப் சேனலிலும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இரு வேகன்ஆர் கார்களும் பழைய தலைமுறை மாடலாகும். இதில், ஓர் ஏற்கனவே சேதமுற்ற நிலையில் காணப்படுகின்றது. அதேசமயம், மற்றொரு கார் நல்லநிலையில் காட்சியளிக்கின்றது. ஆனால், இரு காருமே ஆரோக்கியமான எஞ்ஜினைக் கொண்டதாகவே இருந்திருக்கின்றன. இதைதான் வீடியோவும் நமக்கு உணர்த்துகின்றது.

இரு கார்களை டேப்பால் ஒட்டிய இளைஞர்கள்... எதற்கு தெரிஞ்சா கண்டிப்பா திட்டுவீங்க... வீடியோ!

இந்த நிலையிலேயே விநோத பரிட்சைக்காக இரு கார்களும் டேப் மூலம் ஒட்டப்பட்டு இயக்கப்பட்டிருக்கின்றன. இதில், டேப்பிற்காக மாட்டுமே அந்த இளைஞர்கள் ரூ. 1,500 வரை செலவு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இரு கார்களையும் இணைக்க ஏராளமான டேப்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை முழுமையாக ஒட்டிய பின்னரே அக்கார்கள் விநோத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இரு கார்களை டேப்பால் ஒட்டிய இளைஞர்கள்... எதற்கு தெரிஞ்சா கண்டிப்பா திட்டுவீங்க... வீடியோ!

அதாவது, முதலில் ஓர் காரை மட்டுமே இயக்கி பரிசோதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்தே இரு கார்களும் வெவ்வேறு ஓட்டுநர்கள் மூலம் இயக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கார் முழுவதும் டேப் போட்டு ஒட்டப்பட்டதால், ஜன்னல் வழியாக அவர்கள் ஏறி காரை இயக்கினர். இவ்வாறு முரண்பட்ட திசைகளில் மாறி மாறி இரு கார்களும் இயக்கப்பட்டாலும், அதிக அடர்த்தி காரணமாக டேப் உறுதியாக இருந்தது.

இரு கார்களை டேப்பால் ஒட்டிய இளைஞர்கள்... எதற்கு தெரிஞ்சா கண்டிப்பா திட்டுவீங்க... வீடியோ!

இவ்வாறு, கடைசி வரை அந்த டேப் கார்களை இணைத்தவாறு இருந்தது. ஆனால், ஓர் கார் பள்ளத்தில் சிக்கியதன் காரணத்தால் கடுமையான முயற்சி செய்யப்பட்டும் அது வெளியேறவில்லை. ஆகையால், அந்த இளைஞர்களே டேப்பினை கிழித்தெறிந்து தங்களின் சோதனையை முடித்துக் கொண்டனர்.

இரு கார்களை டேப்பால் ஒட்டிய இளைஞர்கள்... எதற்கு தெரிஞ்சா கண்டிப்பா திட்டுவீங்க... வீடியோ!

இந்த விநோத பலபரீட்சை விநோதமானதாக தெரிந்தாலும் முற்றிலும் ஆபத்தானதாகும். ஆம், இந்த வீடியோவை ஒரு சில நெட்டிசன்கள் முட்டாள்கள் என்றே தங்களது கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். அதற்கேற்ப மிகவும் ஆபத்தான செயல்களையே அந்த இளைஞர்கள் இந்த வீடியோவில் செய்திருக்கின்றனர். இணைக்கப்பட்ட இரு கார்களுக்கு மத்தியில், முன்புறமாக ஓர் இளைஞர் அமர்ந்து பயணிப்பதையும் நம்மால் காண முடிகின்றது.

இரு கார்களை டேப்பால் ஒட்டிய இளைஞர்கள்... எதற்கு தெரிஞ்சா கண்டிப்பா திட்டுவீங்க... வீடியோ!

இந்த நேரத்தில் ஓர் சிறிய தவறு நேர்ந்திருந்தால்கூட அவர் மிகப்பெரிய இன்னலுக்கு ஆளாகியிருப்பார். ஆனால், உற்சாக மிகுதியில் அவர் ஹாயாக காரின் மேற்கூரையில் அமர்ந்து வலம் வந்தவாறு இருக்கின்றார். இந்த வீடியோ அதிக வைரலாகி போலீஸாரின் கண்களில் பட்டால் நிச்சயம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயலாம்.

இதுபோன்று முரண்பட்ட செயலில் ஈடுபட்டு போலீஸாரின் பிடியில் சிக்கிய இளைஞர்கள் பலர், தற்போதும் தங்களது தவற்றிற்கு வருந்தியவாறு இருக்கின்றனர். தற்போதைய வீடியோ காலி மைதானத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் அது கண்ணிமைக்கும் நேரத்தில் பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயலாகும். எனவேதான் இதுமாதிரியான செயல்களை போலீஸார்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
2 Maruti Suzuki WagonRs Are Taped Together Video. Read In Tamil.
Story first published: Friday, August 14, 2020, 7:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X