ஃபோக்ஸ்வேகன் போலோ, வெண்டோ & டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார்களின் விலைகள் அதிகரிப்பு... முழு விபரம் இதோ...

ஜெர்மனை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் அதன் தயாரிப்பு மாடல்களின் எக்ஸ்ஷோரூம் விலைகளை இந்திய சந்தையில் அதிகரித்துள்ளது. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வெண்டோ & டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார்களின் விலைகள் அதிகரிப்பு... முழு விபரம் இதோ...

ஃபோக்ஸ்வேகனின் இந்த விலை அதிகரிப்பு நடவடிக்கை மாடல் மற்றும் வேரியண்ட்களை பொறுத்து ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.12,000 வரையில் உள்ளது. பிராண்டின் எண்ட்ரீ-லெவல் மாடலில் இருந்து தொடங்கினால், போலோ ஹேட்ச்பேக் ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை விலை உயர்வை பெற்றுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வெண்டோ & டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார்களின் விலைகள் அதிகரிப்பு... முழு விபரம் இதோ...

இதனால் இந்த விலை உயர்வுக்குப் பிறகு, போலோவின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.5.87 லட்சம் முதல் ரூ.9.67 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ட்ரீ-லெவல் ஹேட்ச்பேக் கார் இரு ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் உள்பட மொத்தம் 5 ட்ரிம் நிலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வெண்டோ & டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார்களின் விலைகள் அதிகரிப்பு... முழு விபரம் இதோ...

அதேபோல் இதற்கு இரு என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அப்படியே ஃபோக்ஸ்வேகனின் மற்றொரு தயாரிப்பான வெண்டோவிற்கு நகர்ந்தால், இது ரூ.7,000-ல் இருந்து ரூ.9,000 வரையில் விலை அதிகரிப்பை ஏற்றுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வெண்டோ & டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார்களின் விலைகள் அதிகரிப்பு... முழு விபரம் இதோ...

இருப்பினும் இதன் டாப் ஹைலைன் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் விலை ரூ.30,000 குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இதன் கம்ஃபார்ட்லைன் (மெட்டாலிக் இல்லாதது) மற்றும் ஹைலைன் மேனுவல் மாடல்களின் விலைகளில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கை வைக்கவில்லை.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வெண்டோ & டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார்களின் விலைகள் அதிகரிப்பு... முழு விபரம் இதோ...

6 ட்ரிம் நிலைகளில் விற்பனை செய்யப்படும் வெண்டோவின் எக்ஸ்ஷோரூம் விலை இந்த விலை அதிகரிப்பிற்கு பின்னால் ரூ.8.93 லட்சம் - ரூ.12.99 லட்சம் என அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் அடையாளமாக கடந்த மார்ச் மாதம் அறிமுகமான டிகுவான் ஆல்ஸ்பேஸின் விலை ரூ.12 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வெண்டோ & டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார்களின் விலைகள் அதிகரிப்பு... முழு விபரம் இதோ...

ஒரே ஒரு வேரியண்ட்டில் சந்தைப்படுத்தப்பட்டு வரும் இந்த எஸ்யூவி கார் இந்த விலை உயர்வினால் ரூ.33.24 லட்சத்தை எக்ஸ்ஷோரூமில் விலையாக பெற்றுள்ளது. மூன்று இருக்கை வரிசைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் உள்பட தயாரிப்புகளின் விலைகளை உயர்த்திவரும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதேநேரம் சமீபத்தில் டி-ராக் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை ஏற்பதை நிறுத்தியுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வெண்டோ & டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார்களின் விலைகள் அதிகரிப்பு... முழு விபரம் இதோ...

விலை அதிகரிப்பிற்கு மத்தியில் வெண்டோ செடானின் டாப் வேரியண்ட்டின் விலை பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இது ஒன்று தான் இந்த செய்தி தொகுப்பிலேயே நல்ல விஷயமாகும். இருப்பினும் இந்த சிறிய விலை உயர்வுகள் ஃபோக்ஸ்வேகன் கார்களின் விற்பனையை பெரிய அளவில் பாதிக்காது என நம்புவோம்.

Most Read Articles

English summary
Volkswagen Polo, Vento & Tiguan AllSpace Price Hike Announced: Here Is The New List
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X