உலகின் முதல் ஹைட்ரஜன் விமானம்: ஏர்பஸ் திட்டம்! இதோட சிறப்பு என்னனு தெரிஞ்சா திறந்த வாய மூட மாட்டீங்க

வர்த்தக பயன்பாட்டிற்காக ஏர்பஸ் நிறுவனம் அதி-சிறப்பு வாய்ந்த விமானம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

வர்த்தக பயன்பாட்டிற்காக உருவாக இருக்கும் அதி-சிறப்பு வாய்ந்த விமானம்... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா திறந்த வாய மூட மாட்டீங்க!

உலகின் மிக முக்கியமான விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர்பஸ், உலகின் முதல் ஹைட்ரஜன் விமானத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. வர்த்தகத்துறையை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த விமானம் பயன்பாட்டிற்கு களமிறக்கப்பட இருக்கின்றது.

வர்த்தக பயன்பாட்டிற்காக உருவாக இருக்கும் அதி-சிறப்பு வாய்ந்த விமானம்... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா திறந்த வாய மூட மாட்டீங்க!

வருகின்ற 2035ம் ஆண்டிற்குள் இந்த விமானம் பயன்பாட்டிற்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையே ஃபிரெஞ்சு நாட்டு விமான தயாரிப்பு நிறுவனமும் உறுதி செய்திருக்கின்றது. இதுகுறித்த தகவலை அந்நிறுவனம் கடந்த திங்கள் (22 செப்டம்பர்) அன்று வெளியிட்டது.

வர்த்தக பயன்பாட்டிற்காக உருவாக இருக்கும் அதி-சிறப்பு வாய்ந்த விமானம்... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா திறந்த வாய மூட மாட்டீங்க!

சுற்றுச்சூழல் மாசுபாட்டு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை நோக்கி உலக நாடுகள் நகர தொடங்கியிருக்கின்றன. மேலும், அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும் அந்த வாகனங்களை முற்றிலுமாக கைவிடும் முயற்சியிலும் அவை ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து, இந்த வாகனங்களுக்கு பதிலாக சிஎன்ஜி, மின்சாரம், ப்யூவல் செல் மற்றும் ஹைட்ரஜன் உள்ளிட்ட வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் அவை மேற்கொண்டு வருகின்றன.

வர்த்தக பயன்பாட்டிற்காக உருவாக இருக்கும் அதி-சிறப்பு வாய்ந்த விமானம்... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா திறந்த வாய மூட மாட்டீங்க!

அந்தவகையிலேயே ஹைட்ரஜன் விமானத்தை பயன்பாட்டுக்கு களமிறக்க இருப்பதாக ஏர்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகிலேயே ஹைட்ரஜனால் இயங்கக்கூடிய விமானத்தைக் களமிறக்க கூடிய முதல் நிறுவனம் இதுவாகும். இத்தகைய தகவலை வெளியிடும் நிறுவனங்களிலும் ஏர்பஸ் நிறுவனமே முதல் ஆளாக இருக்கின்றது.

வர்த்தக பயன்பாட்டிற்காக உருவாக இருக்கும் அதி-சிறப்பு வாய்ந்த விமானம்... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா திறந்த வாய மூட மாட்டீங்க!

ஹைட்ரஜன் ஓர் சுத்தமான எரிபொருள் ஆகும். இது நீராவியை மட்டுமே வெளியேற்றும். எனவேதான் இது சுற்றுப்புற சூழலுக்கு நண்பனாக பார்க்கப்படுகின்றது. எனவேதான் ஹைட்ரஜனால் இயங்கக்கூடிய வாகனங்களைத் தயாரிப்பதில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்தவகையில், முதல் ஆளாக ஹைட்ரஜன் விமானத்தை தயாரிக்க இருப்பதாக ஏர்பஸ் அறிவித்துள்ளது.

வர்த்தக பயன்பாட்டிற்காக உருவாக இருக்கும் அதி-சிறப்பு வாய்ந்த விமானம்... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா திறந்த வாய மூட மாட்டீங்க!

சுற்றுச் சூழல் மாசுபடுதலைத் தடுக்க வேண்டும் என்பதற்காக பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல பில்லியன் கணக்கான யூரோக்களைச் செலவு செய்து பசுமை ஹைட்ரஜனைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது அதிக மாசுபடுத்தும் வாகனங்களுக்கு மாற்றாக ஹைட்ரஜன் இருக்கும் என நம்பப்படுகின்றது. அந்தவகையிலேயே ஏர்பஸ் நிறுவனமும் புதிய முயற்சியாக ஹைட்ரஜன் விமானத்தை களமிறக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றது.

வர்த்தக பயன்பாட்டிற்காக உருவாக இருக்கும் அதி-சிறப்பு வாய்ந்த விமானம்... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா திறந்த வாய மூட மாட்டீங்க!

இதுகுறித்து ஏர்பஸ் நிறுவனத்தின் சிஇஓ குயில்லவுமே ஃபவுரி (Guillaume Faury), லி பரிசியன் எனும் செய்திதாளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது, "முதல் ஹைட்ரஜன் விமானத்தைக் களமிறக்குவதே எங்களது லட்சியம். இதனை வருகின்ற 2035ம் ஆண்டிற்குள் நாங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவோம்" என்றார்.

வர்த்தக பயன்பாட்டிற்காக உருவாக இருக்கும் அதி-சிறப்பு வாய்ந்த விமானம்... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா திறந்த வாய மூட மாட்டீங்க!

ஏர்பஸ் நிறுவனம் ஏற்கனவே ஹைட்ரஜனால் இயங்கும் சேட்டலைட் மற்றும் ராக்கெட் ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகின்றது. இதைத்தொடர்ந்தே, வணிக ரீதியான பயன்பாட்டில் ஹைட்ரஜன் விமானத்தைக் களமிறக்கும் திட்டத்தை அது கையிலெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பையும் அது தற்போது வெளியிட்டுள்ளது.

வர்த்தக பயன்பாட்டிற்காக உருவாக இருக்கும் அதி-சிறப்பு வாய்ந்த விமானம்... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா திறந்த வாய மூட மாட்டீங்க!

இந்த விமானத்தை உருவாக்க சிறப்பு தொழில்நுட்ப உதவி ஏதும் தேவையில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், "வடிவமைப்பு மற்றும் பிற உற்பத்தி காரணங்களுக்கு ஐந்தாண்டுகள் மற்றும் கூடுதலாக பிற பொருட்களை பிரத்யேகமாக வடிவமைத்து களமிறக்க இரண்டுகளும் தேவைப்படுகின்றது" என ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, வருகின்ற 2028ம் ஆண்டிற்கு பின்னரே இந்த திட்டத்தை நாங்கள் கையிலெடுப்போம் என குயில்லவுமே ஃபவுரி கூறுகின்றார்.

வர்த்தக பயன்பாட்டிற்காக உருவாக இருக்கும் அதி-சிறப்பு வாய்ந்த விமானம்... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா திறந்த வாய மூட மாட்டீங்க!

இதற்கு முன்னதாக ஹைட்ரஜன் விமானம்குறித்த அனைத்து விதமான ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைகளில் ஏர்பஸ் நிறுவனம் ஈடுபட இருக்கின்றது. அவை அனைத்திலும் சாத்தியக் கூறுகளை உருவாக்கிய பின்னரே முழுமையான ஹைட்ரஜன் வர்த்தக விமானம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட இருக்கின்றது.

வர்த்தக பயன்பாட்டிற்காக உருவாக இருக்கும் அதி-சிறப்பு வாய்ந்த விமானம்... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா திறந்த வாய மூட மாட்டீங்க!

ஏர்பஸ் நிறுவனத்தின் இந்த முயற்சிக்காக (கார்பன் இல்லாத விமானங்களை அபிவிருத்தி செய்வதற்காக) பிரெஞ்சு அரசாங்கம் 1.5 பில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது. விமானத் துறைக்கான ஆதரவு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உச்சபட்ட தொகையை அந்நாட்டு அரசு ஒதுக்கியிருக்கின்றது.

வர்த்தக பயன்பாட்டிற்காக உருவாக இருக்கும் அதி-சிறப்பு வாய்ந்த விமானம்... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா திறந்த வாய மூட மாட்டீங்க!

Image Courtesy: Airbus

கொரோனா வைரசால் பல்வேறு இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்திருக்கின்ற வேலையிலும் பிரெஞ்சு அரசு இதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருப்பது உலக நாடுகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி ஒட்டுமொத்தமாக, ஹைட்ரஜன் கரைசல்களை உருவாக்க பிரான்ஸ் ஏழு பில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் அண்டை நாடான ஜெர்மனி ஒன்பது பில்லியனை இப்போதே ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Airbus Plan To Develop Hydrogen-Powered Commercial Plane By 2035. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X