இந்திய டிசைனரால் எலக்ட்ரிக் காராக மாறிய ஹிந்துஸ்தான் அம்பாசடார்... நம்மாளுக கிட்ட இவ்வளவு திறமையா..?

இந்தியாவை சேர்ந்த டிசைனர் விஷால் வெர்மா என்பவர் பழமை வாய்ந்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் அம்பாஸிடார் மாடலை எலக்ட்ரிக் வெர்சனிற்கு மாற்றியமைத்துதார். இந்த எலக்ட்ரிக் அம்பாசடார் காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய டிசைனரால் எலக்ட்ரிக் காராக மாறிய ஹிந்துஸ்தான் அம்பாசடார்... நம்மாளுக கிட்ட இவ்வளவு திறமையா..?

இந்திய சந்தையில் 1990 மற்றும் 2000களில் பிரபலமான கார் மாடலாக ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் அம்பாசடார் விளங்கியது. தனியாள் பயன்பாட்டிற்கு அதிகளவில் பயன்படுத்தப்பட்ட இந்த கார், அதேவேளையில் கமர்ஷியல் பணிகளுக்கும் ஈடுப்படுத்தப்பட்டது.

இந்திய டிசைனரால் எலக்ட்ரிக் காராக மாறிய ஹிந்துஸ்தான் அம்பாசடார்... நம்மாளுக கிட்ட இவ்வளவு திறமையா..?

பெரும்பாலானோர் நினைவுகளில் தற்போதும் வாழ்ந்துவரும் அம்பாசடாரின் கடைசி மாடல் கடந்த 2014ல் வெளிவந்தது. ஆனால் தற்போதும் அம்பாசடார் மாடலை தற்போதைய மாடர்ன் கார்களின் டிசைனிற்கு இணையாக கஸ்டமைஸ்ட் செய்து சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்திய டிசைனரால் எலக்ட்ரிக் காராக மாறிய ஹிந்துஸ்தான் அம்பாசடார்... நம்மாளுக கிட்ட இவ்வளவு திறமையா..?

இந்த வகையில் டிசி டிசைன் என்ற மாடிஃபைடு நிறுவனம் சமீபத்தில் அம்பாசடார் மாடலை புதிய தோற்றத்திற்கு மாற்றி வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த பழமையான காரை முதன்முறையாக எலக்ட்ரிக் வெர்சனுக்கு விஷால் வெர்மா என்ற இந்திய டிசைனர் மாற்றியமைத்துள்ளார்.

இந்திய டிசைனரால் எலக்ட்ரிக் காராக மாறிய ஹிந்துஸ்தான் அம்பாசடார்... நம்மாளுக கிட்ட இவ்வளவு திறமையா..?

எலக்ட்ரிக் வெர்சனுக்கு மாற்றப்பட்டாலும் அம்பாசடார் மாடலின் பழமையான தொடுதல் இருக்க வேண்டும் என்று விஷால் வெர்மா திட்டமிட்டுள்ளார் என்பது காரின் பக்கவாட்டு பகுதிகளை பார்க்கும்போது தெரிய வருகிறது. இருப்பினும் பக்கவாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள சில மாடர்ன் டிசைன் மாற்றங்கள் அம்பாசடார் காரின் வயதை வெகுவாக குறைத்துள்ளன.

இந்திய டிசைனரால் எலக்ட்ரிக் காராக மாறிய ஹிந்துஸ்தான் அம்பாசடார்... நம்மாளுக கிட்ட இவ்வளவு திறமையா..?

காரின் கதவுகளை சற்று உற்று பார்த்தால் டோர் ஹேண்டில்கள் வழங்கப்படாததை அறிய முடியும். காரின் முன்பகுதி, ரீடிசைனில் ஸ்வூப்பிங் பொனெட் உடன் க்ரோம்-ஆல் ஹைலைட் செய்யப்பட்ட மெல்லியதான க்ரில்லை கொண்டுள்ளது.

இந்திய டிசைனரால் எலக்ட்ரிக் காராக மாறிய ஹிந்துஸ்தான் அம்பாசடார்... நம்மாளுக கிட்ட இவ்வளவு திறமையா..?

இவற்றுடன் காரின் வெளிப்புறத்தில் C-வடிவிலான க்ரோம்-ப்ளேட் மெட்டல் A-பில்லரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த க்ரோம்-ப்ளேட் மெட்டலில் தான் முன்புற விண்ட்ஷீல்ட் பொருத்தப்பட்டுள்ளது. உட்புற கேபின், வழக்கமான அம்பாசடார் மாடலில் இருந்து பல மடங்கு வேறுப்பட்டும் அப்டேட் ஆகியும் காணப்படுகிறது.

இந்திய டிசைனரால் எலக்ட்ரிக் காராக மாறிய ஹிந்துஸ்தான் அம்பாசடார்... நம்மாளுக கிட்ட இவ்வளவு திறமையா..?

இந்த எலக்ட்ரிக் காரின் கேபினில் மிக முக்கிய அம்சமாக, வாய்ஸ் கமெண்ட், தொடுத்திரை நாவிகேஷன் பேனல், டெக் சார்ஜிங் சப்போர்ட், சுற்றிலும் விளக்குகள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பேனல் போன்றவற்றிற்காக 5ஜி இணைய வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய டிசைனரால் எலக்ட்ரிக் காராக மாறிய ஹிந்துஸ்தான் அம்பாசடார்... நம்மாளுக கிட்ட இவ்வளவு திறமையா..?

இது மட்டுமின்றி இந்த கார் பயோமெட்ரிக் பாதுகாப்பு லாக்கிங் சிஸ்டத்தையும் தன்னுள் கொண்டுள்ளது. இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் மூன்று மடக்குகளாக ஓட்டுனர் மற்றும் பயணிக்களுக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடியதாக இரு மோட்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய டிசைனரால் எலக்ட்ரிக் காராக மாறிய ஹிந்துஸ்தான் அம்பாசடார்... நம்மாளுக கிட்ட இவ்வளவு திறமையா..?

இதில் எளிய ட்ரைவ் மோட், சிங்கிள் திரையுடன் மிகவும் முக்கியமான தகவல்களை மட்டுமே வழங்கும். அதுவே அட்வான்ஸ் மோட், நாவிகேஷன் பாதைகள், இசை, பக்கவாட்டு கேமிரா காட்சிகள், அளவீடுகள் மற்றும் வாகனத்தை பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதற்காக மூன்று ஸ்லைட்களுடன் உள்ளது.

இந்திய டிசைனரால் எலக்ட்ரிக் காராக மாறிய ஹிந்துஸ்தான் அம்பாசடார்... நம்மாளுக கிட்ட இவ்வளவு திறமையா..?

இருக்கை அமைப்பை பொறுத்தவரையில் இந்த கார் பாராம்பரியமான சோஃபா லேஅவுட் & 4-இருக்கை லேஅவுட் என்ற இரு தேர்வுகளை கொண்டுள்ளது. இதன் இருக்கைகள் க்ளைமேட் கண்ட்ரோல், மஸாஜ், அலார்ட் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் எலக்ட்ரானிக் அட்ஜெஸ்ட்மெண்ட் தேர்வுகளை காரின் உடற் அமைப்புக்கு ஏற்றவாறு பெற்றுள்ளன.

இந்திய டிசைனரால் எலக்ட்ரிக் காராக மாறிய ஹிந்துஸ்தான் அம்பாசடார்... நம்மாளுக கிட்ட இவ்வளவு திறமையா..?

விஷால் வெர்மா வழக்கமான அம்சாடார் மாடலை இவ்வாறான எலக்ட்ரிக் வெர்சனுக்கு மாற்ற அனைத்து சக்கரங்களிலும் தனித்தனியாக எலக்ட்ரிக் ஹப் மோட்டாரை பொருத்தியுள்ளார். இதனால் கார் 4-வீல் ட்ரைவ் சிஸ்டத்துடன் இயங்கும்.

இந்திய டிசைனரால் எலக்ட்ரிக் காராக மாறிய ஹிந்துஸ்தான் அம்பாசடார்... நம்மாளுக கிட்ட இவ்வளவு திறமையா..?

காரின் முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு விரைவான சார்ஜிங் உடன் உதவிக்கு இண்டக்‌ஷன் சார்ஜிங்கும் வழங்கப்பட்டுள்ளன. சார்ஜர் செலுத்தும் இடம், வழக்கமான அம்பாசடார் மாடலில் எரிபொருள் நிரப்பும் பகுதி உள்ள வல புற பின்புற சக்கரத்திற்கு மேற்புறத்தில் தான் கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Iconic Hindustan Motor Ambassador gets an EV rendition by an Indian designer
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X