வாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையாகி சாதனை..

வேகன்ஆர் எஸ்-சிஎன்ஜி கார்களின் விற்பனையில் 3 லட்சத்தை கடந்துள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையாகி சாதனை...

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் பிரிவில் விற்பனை செய்துவரும் பிரபலமான மாடல்களில் ஒன்று தான் வேகன்ஆர். இதன் எஸ்-சிஎன்ஜி வெர்சனின் தயாரிப்பில் 3 லட்சத்தை இந்நிறுவனம் கடந்திருப்பதன் மூலம் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் சிஎன்ஜி வாகனமாக வேகன்ஆர் உருவெடுத்துள்ளது.

வாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையாகி சாதனை...

முதல்முறையாக அறிமுகமானதில் இருந்து இதுவரை 24 லட்சத்திற்கும் அதிகமான வேகன்ஆர் கார்களை மாருதி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில் சுமார் 3 லட்சம் அதன் சிஎன்ஜி வேரியண்ட்டின் மூலமாக கிடைத்தவை ஆகும். இந்த எண்ணிக்கையே இந்த ஹேட்ச்பேக் காருக்கு அதிகளவில் விற்பனையாகும் சிஎன்ஜி வாகனம் என்ற பட்டத்தை பெற்று தந்துள்ளது.

வாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையாகி சாதனை...

வாடிக்கையாளர்கள் மத்தியில் வேகன்ஆருக்கு கிடைக்கும் இத்தகைய வரவேற்பிற்கு அதன் கம்பீரமான தோற்றம், கூடுதல் உயரத்தில் இருக்கை அமைப்பு, அதிக இட வசதி மற்றும் அதிக பயன்பாடுதான் காரணம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. மாருதி நிறுவனம் தற்சமயம் அதன் ஆல்டோ, வேகன்ஆர், ஈக்கோ மற்றும் எர்டிகா கார்களில் சிஎன்ஜி வேரியண்ட்களை வழங்கி வருகிறது.

வாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையாகி சாதனை...

வேகன்ஆரின் இந்த புதிய மைல்கல் குறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தாவா கூறுகையில், ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக இந்தியாவின் முதல் 10 கார்களில் தொடர்ந்து இடம்பெற்றுள்ள மாருதி சுசுகி வேகன்ஆர் அதன் பிரிவில் மறுக்கமுடியாத சந்தைத் தலைவராக தொடர்கிறது.

வாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையாகி சாதனை...

1999ஆம் ஆண்டில் அறிமுகமானதிலிருந்து, வேகன்ஆர் 24 லட்சத்திற்கும் அதிகமான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு இது முதல் கார். மாருதி சுசுகியின் சின்னமான வேகன்ஆர், 2000ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் முதல் 5 கார்களில் தொடர்ந்து இடம்பெறுகிறது.

வாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையாகி சாதனை...

வேகன்ஆர் எஸ்-சிஎன்ஜியின் 3 லட்ச மாதிரிகள் விற்பனை என்ற மைல்கல் எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களால் எங்களுக்கு அளிக்கப்பட்ட அபரிமிதமான நம்பிக்கையின் மற்றொரு சான்றாகும். மாருதி சுஸுகி தனது வாடிக்கையாளர்களுக்கு நிலையான இயக்கம் விருப்பங்களை வழங்க தொடர்ந்து முயன்று வருகிறது.

வாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையாகி சாதனை...

வேகன்ஆர் எஸ்-சிஎன்ஜியை இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் சிஎன்ஜி எரிபொருள் காராக மாற்றிய எங்கள் நம்பகமான வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்கள் அளித்த இடைவிடாத ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்துகிறோம் என கூறினார்.

வாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையாகி சாதனை...

மாருதி வேகன்ஆரில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 5500 ஆர்பிஎம்-ல் 58 பிஎச்பி பவரையும், 3500 ஆர்பிஎம்-ல் 78 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையாகி சாதனை...

மாருதி சுஸுகி எஸ்-சிஎன்ஜி கார்களில் கூடுதலாக இண்டெலிஜண்ட் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்துடன் ஒன்றை ஒன்று சார்ந்த இரட்டை இசியூ பொருத்தப்படுகிறது. இது அனைத்து விதமான சாலைகளிலும் அதிக எரிபொருள் திறன் உடன் காரின் சிறப்பான மற்றும் நிலையான செயல்திறனை உறுதி செய்கிறது. வேகன்ஆர், ஐந்தாம் தலைமுறை ஹார்டெக்ட் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

வாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையாகி சாதனை...

தொழிற்சாலையிலேயே பொருத்தப்படும் சிஎன்ஜி தொகுப்புகளுடன் கிடைக்கும் இத்தகைய சிஎன்ஜி கார்களின் மூலமாக மற்ற பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை காட்டிலும் அதிக எரிபொருள் திறனை பெற முடியும். இதன் காரணமாக எரிபொருள் செலவு குறையும். இந்த ஒரு காரணமே வேகன்ஆர் எஸ்-சிஎன்ஜி கார்களை இந்த அளவிற்கு பிரபலமாக்கியுள்ளது.

Most Read Articles

English summary
Maruti Suzuki Wagon R clocks sales of 3 Lakh CNG vehicles
Story first published: Sunday, September 27, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X