ஆட்டோ எக்ஸ்போ 2020: புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் வேரியண்ட்டின் டீசர் வெளியீடு

2020 விட்டாரா பிரெஸ்ஸா காம்பெக்ட்-எஸ்யூவி மாடலின் புதிய டீசர் வீடியோ ஒன்றை மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ள இந்த டீசரின் மூலம் இந்த மாடலின் பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட்டின் தோற்றம் வெளிவந்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: அறிமுகத்திற்கு முன்னதாக புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் வேரியண்ட்டின் டீசர் வெளியீடு

மாருதி சுசுகி நிறுவனம் சந்தையில் எஸ்யூவி பிரிவில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் இந்த பிஎஸ்6 வெர்சன் காரை ஆட்டோ எக்ஸ்போவில் ஊடகவியலாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட இரண்டாவது நாளான பிப்ரவரி 6ல் காட்சிக்காக வைக்கவுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: அறிமுகத்திற்கு முன்னதாக புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் வேரியண்ட்டின் டீசர் வெளியீடு

இந்த புதிய டீசரின் மூலம் 2020 விட்டாரா பிரெஸ்ஸாவின் தோற்றம் மட்டுமில்லாமல், காரில் வழங்கப்பட்டுள்ள சில அப்டேட்களும் நமக்கு தெரிய வருகின்றன. மேலும் இந்த புதிய பிஎஸ்6 மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டிருப்பதும் வெளியாகியுள்ள இந்த டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: அறிமுகத்திற்கு முன்னதாக புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் வேரியண்ட்டின் டீசர் வெளியீடு

இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் சமீபத்தில் அறிமுகமான மாருதியின் எர்டிகா பிஎஸ்6 மாடலிலும் பொருத்தப்பட்டிருந்தது. அதிகப்பட்சமாக இந்த பெட்ரோல் என்ஜின் 104 பிஎச்பி பவரையும் 138 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்குகிறது. ட்ரான்ஸ்மிஷனிற்காக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் டாப் வேரியண்ட் மட்டும் 4-ஸ்பீடு டார்க் -கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கூடுதல் தேர்வாக பெற்றுள்ளது. பிஎஸ்6 அப்டேட் மட்டுமின்றி 2020 விட்டாரா பிரெஸ்ஸாவில் அதிகளவில் டிசைன் அப்டேட்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போ 2020: அறிமுகத்திற்கு முன்னதாக புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் வேரியண்ட்டின் டீசர் வெளியீடு

அப்டேட்டான ஹெட்லைட், க்ரில் மற்றும் பம்பர்களுடன் ரீ-டிசைனில் முன்புற ஃபேஸியாவை இந்த 2020 மாடல் அப்டேட்களாக பெற்றிருப்பது தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரில் இருந்து தெரிய வருகிறது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: அறிமுகத்திற்கு முன்னதாக புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் வேரியண்ட்டின் டீசர் வெளியீடு

இதேபோல் திருத்தியமைக்கப்பட்ட டிசைனில் அலாய் சக்கரங்கள், எல்இடி டெயில்லைட்கள் மற்றும் சிறிது மாற்றியமைக்கப்பட்ட பம்பர் உள்ளிட்டவை இந்த பிஎஸ்6 மாடலில் மேம்படுத்தப்பட்ட பாகங்களாக உள்ளன.

ஆட்டோ எக்ஸ்போ 2020: அறிமுகத்திற்கு முன்னதாக புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் வேரியண்ட்டின் டீசர் வெளியீடு

உட்புறத்தில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய பெரிய தொடுத்திரையுடன் உள்ள இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற உயர்ரக தோற்றத்தை அளிக்கக்கூடிய ப்ரீமியம் பாகங்களை புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடல் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆட்டோ எக்ஸ்போ 2020: அறிமுகத்திற்கு முன்னதாக புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் வேரியண்ட்டின் டீசர் வெளியீடு

இந்திய சந்தையில் இந்த புதிய விட்டாரா பிரெஸ்ஸா பிஎஸ்6 மாடல், தற்போதைய மாடலின் விலையை விட அதிகமான விலையை பெறவுள்ளது. ரூ.8.5 லட்சம் வரையில் விலை அதிகரிப்பை பெறலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த பிஎஸ்6 மாடல் சந்தையில் ஹூண்டாய் வென்யூ, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மாடல்களுடன் விற்பனை போட்டியை தொடரவுள்ளது.

Most Read Articles
English summary
Auto Expo 2020: New Maruti Vitara Brezza With 1.5-Litre Petrol Engine Teased Ahead Of Launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X