ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 காரை புக்கிங் செய்யணுமா? - முதல்ல இத படிங்க!

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கும் விபரம் வெளியாகி இருக்கிறது. முழுமையான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 காரை புக்கிங் செய்யணுமா? - முதல்ல இத படிங்க!

ஸ்கோடா ஆக்டேவியா காரின் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடல் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. அண்மையில் கிரேட்டர் நொய்டாவில் நடந்த இந்திய சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 காரை புக்கிங் செய்யணுமா? - முதல்ல இத படிங்க!

இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில், ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலும் பார்வையாளர்களை வசீகரித்தது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 காரை புக்கிங் செய்யணுமா? - முதல்ல இத படிங்க!

இந்த நிலையில், இந்த புதிய மாடலுக்கான முன்பதிவு வரும் மார்ச் 1ந் தேதி நண்பகல் 12 மணி முதல் இந்தியாவில் துவங்கப்பட இருக்கிறது. ஸ்கோடா நிறுவனத்தின் பிரத்யேக இணையதள பக்கம் மூலமாகவே இந்த காரை முன்பதிவு செய்ய முடியும்.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 காரை புக்கிங் செய்யணுமா? - முதல்ல இத படிங்க!

இந்த விசேஷ ஆக்டேவியா காருக்கு ஒரு லட்ச ரூபாய் முன்பணத்துடன் புக்கிங் செய்து கொள்ளலாம். மொத்தமாகவே 200 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருப்பதால், முதலில் முன்பதிவு செய்யும் 200 பேர் மட்டுமே இந்த காரை வாங்குவதற்கான வாய்ப்பு கிட்டும்.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 காரை புக்கிங் செய்யணுமா? - முதல்ல இத படிங்க!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காருக்கு ரூ.35.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் ராலி க்ரீன், ரேஸ் புளூ, கொரிடா ரெட், மேஜிக் பிளாக் மற்றும் கேண்டி ஒயிட் ஆகிய 5 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 காரை புக்கிங் செய்யணுமா? - முதல்ல இத படிங்க!

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 245 பிச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 6.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகத்தை மிகாத வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 காரை புக்கிங் செய்யணுமா? - முதல்ல இத படிங்க!

சாதாரண மாடலில் இருந்து வேறுபடுத்தும் விதத்தில், vRS முத்திரை, இந்த காரில் பட்டர்ஃப்ளை க்ரில் அமைப்பு, ஹனிகோம்ப் ஏர் டேம் அமைப்பு, தனித்துவமான கரும்பூச்சுடன் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், எல்இடி பகல்நேர விளக்குகள், 18 அங்குலத்தில் இரட்டை வண்ண வேகா அலாய் வீல்கள், கருப்பு வண்ண ஸ்பாய்லர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 காரை புக்கிங் செய்யணுமா? - முதல்ல இத படிங்க!

இந்த காரில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், அல்கான்ட்ரா லெதர் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், சிவப்பு வண்ண தையல் வேலைப்பாடுகள், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, லம்பார் சப்போர்ட், ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதிகள் இடம்பெற்றுள்ளன. விசேஷ சஸ்பென்ஷன் அமைப்பும் உள்ளது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 காரை புக்கிங் செய்யணுமா? - முதல்ல இத படிங்க!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 காரில் 9 ஏர்பேக்குகள், அடாப்டிவ் லைட் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார் நிலை குலைந்து போவதை தவிர்க்கும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், அனைத்து சக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் பிரேக் பவரை செலுத்தும் எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் சிஸ்டம், ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 காரின் முன்பதிவு பக்கத்திற்கு செல்ல இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Octavia RS 245 booking details
Story first published: Thursday, February 27, 2020, 17:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X