Just In
- 29 min ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 1 hr ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 3 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 14 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- Finance
நரேந்திர மோடியின் செம அறிவிப்பு.. புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி..!
- Sports
4வது போட்டியில வெற்றிக்கு போராடும் இந்தியா... குறுக்கால மழை வரும்னு சொல்றாங்க!
- News
காட்டுப்பள்ளி துறைமுக திட்டத்திற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: சிபிஎம்
- Movies
எம்.ஜி.ஆர். 104வது பிறந்த நாள்.. தலைவி டீம் வெளியிட்ட ஸ்பெஷல் ஸ்டில்.. டிரெண்டாகும் ஹேஷ்டேக்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த 5 விஷயத்தை உணர்ந்தா உடனே வண்டியை சர்வீஸ் விட்டுவிடுங்க... இல்லனா ரொம்ப ரிஸ்காயிடும்...
என்னதான் சரிவர சர்வீஸ் செய்தாலும் வாகனத்தில் அவ்வப்போது சிறு சிறு கோளாறுகள் ஏற்படத்தான் செய்கின்றன. அவை நமது கண்களுக்கு புலன்படாவிட்டாலும் சில சமிக்ஞையை வழங்கும். அவ்வாறு கிடைக்கக்கூடிய ஐந்து சமிக்ஞை பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

மனிதர்களின் வாழ்க்கையில் 'பயணம்' என்பது மிகவும் முக்கியமான ஓர் விஷயமாக மாறியிருக்கின்றது. எனவேதான் பயணத்தை மேற்கொள்ள உதவும் வாகனங்களின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கு இணையாக வளரத் தொடங்கியிருக்கின்றது. இந்த வாகனத்தை பலர் வாங்குவதோடு சரி, அதன் பின்னர் அதை முறையாக பராமரிப்பதே இல்லை. அதனை சரிவர கவனிக்கவும் மறந்துவிடுகின்றனர்.

இதனால் ஏற்படும் பின் விளைவுகள் ஏராளம். குறிப்பாக ஓர் காரை தொடர்ச்சியாக உரிய நேரத்தில் சர்வீஸ் செய்வதன் மூலம், நல்ல ஃபெர்பார்மன்ஸ் திறனை மட்டுமின்றி நல்ல மைலேஜையும் நம்மால் பெற முடியும். அதுமட்டுமின்றி, அக்காரின் ஆயுட் காலத்தையும் அதிகரிக்கச் செய்ய முடியும்.

எனவேதான் புதிய கார்களை வாங்கும்போது குறிப்பிட்ட நாள் இடைவெளியில் கட்டாயம் அதனை சர்வீஸ் செய்ய வேண்டும் என வேண்டும் என வாகன உற்பத்தி நிறுவனங்கள் அட்டவணைக் கெடு வழங்குகின்றன. ஆனால், வேலை பலு காரணமாக பலர் இதனையே சரிவர செய்ய தவறிவிடுகின்றனர்.

வாகன உற்பத்தியாளர்கள் வழங்கும் சர்வீஸ் கெடு மட்டுமல்ல குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது 10 ஆயிரம் கிமீட்டர்களுக்கு ஒரு முறையாவது காரை சர்வீஸ் செய்ய வேண்டும் என கூறப்படுகின்றது. இதையேதான் வாகனத்துறை வல்லுநர்களும் அறிவுறுத்துகின்றனர்.

அவ்வாறு, அனைத்தையும் சரிவர செய்பவர்கள் எந்த பிரச்னையைச் சந்திக்க மாட்டார்களா என கேட்டால்?, அதற்கான பதில் யாரிடத்திலும் இல்லை. இதுவே நிதர்சனமான உண்மை. எனவேதான் கூடுதல் சில வழிமுறைகளையும் வாகன நிபுணர்கள், கார் உரிமையாளர்களுக்கு அறிவுரையாக வழங்குகின்றனர். அந்தவகையில் கார் எழுப்பும் சிறு அறிகுறிகள் யாவை?, அதை எப்படி கவனிக்க வேண்டும் என்பது பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

எஞ்ஜின் எச்சரிக்கை ஒளி
காரின் எஞ்ஜினைக் கவனிக்க வேண்டும் என எச்சரிக்கையூட்டும் லைட் ( காரில் வழங்கப்பட்டிருக்கும் சிறிய மின் விளக்கு) ஒளிருமேயானால் அதை உடனடியாக கவனிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இதனைக் கவனிக்க தவறினால் எஞ்ஜின் பழுது அல்லது மிகப்பெரிய செலவீணத்தை ஏற்படுத்துமாம். குறிப்பாக, வழக்கத்திற்கு மாறான ஏதேனும் சத்தம் எஞ்ஜின் பகுதியில் இருந்து வெளிப்பட்டாலும் அதனையும் உடனடியாக கவனியுங்கள் என்கிறார்கள் வாகன வல்லுநர்கள்.

பிரேக்கிங் தொடர்பான சிக்கல்கள்
சமரசம் செய்யக்கூடிய விஷயமாக இதை ஒரு பார்க்கக்கூடாது. பாதுகாப்பு விஷயத்தில் முக்கிய இடத்தில் பிரேக் வசதியே இருக்கின்றன. எனவேதான், அண்மையில் சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் எனும் புதிய தொழில்நுட்பங்களை இந்திய அரசு பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. இது வேக வரம்பை உடனடியாக குறைப்பதுடன் அதிக பாதுகாப்பையும் வழங்கக்கூடியது.

ஆனால், பழைய கார்களில் இந்த அம்சம் இடம்பெறுவதில்லை. எனவே, ஒவ்வொரு முறையும் இயக்கத் தொடங்குவதற்கு பிரேக் நல்ல பயன்பாட்டில் இருக்கின்றதா என ஆராயும்படி வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அப்போது அதில் லேசான வித்தியாசத்தை உணர்ந்தால்கூட உடனடியாக மெக்கானிக் அல்லது சர்வீஸ் மையங்களை அணுக வேண்டும் கூறுகின்றனர்.

காருக்கு அடியில் கசிவு
திடீரென காரை நிறுத்தி வைத்திருந்த இடத்தில் ஆயில் போன்ற திரவம் கண்களுக்கு தென்பட்டால் உடனடியாக அது தண்ணீரா அல்லது ஆயிலா என அறிந்துக் கொள்ளுங்கள். ஏனெனில், பயணத்தின்போது நமக்க தெரியமால் பள்ளம், மேடுகளில் சிக்கி வாகனத்தின் அடிப்பக்கம் சேதமுற்றிருக்கலாம். இதனால், எஞ்ஜின் ஆயில் அல்லது கூலண்டு ஆயில் பாதை சேதமடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

எனவேதான், காருக்கு அடியில் திரவம் போன்று ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அதை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. இதைச் செய்ய தவறினால் மிகப்பெரிய செலவீணத்துடன் பல்வேறு சிக்கல்களையும் அது நமக்கு வழங்கும். குறிப்பாக, இம்மாதிரியான நேரத்தில் வாகனத்தை சர்வீஸ் சென்டர் அழைத்துச் செல்லாமல், கார் இருக்கும் இடத்திற்கே மெக்கானிக்கை வரவழைத்து சரி செய்வது கூடுதல் சிறப்பானது ஆகும்.

மின்சக்தி இழப்பு
வீடுகளில் திடீரென மின் விளக்குகள் டிம்மாக எரிவதைப் போன்று பயணத்தின்போது காரின் பவர் குறைந்தால் எஞ்ஜின் மிகப்பெரிய சிக்கலில் சிக்கியிருக்கின்றது என அர்த்தம். ஆம், எஞ்ஜின் கம்பிரஸன் (engine compression) சரிவர இயங்கவில்லை என அர்த்தம். இதுமட்டுமில்லைங்க, திடீர் சக்தி இழப்பிற்கு வேறு சில காரணங்களும் உள்ளன.

எரிபொருள் வடிகட்ட அடைப்பு போன்ற பல்வேறு காரணங்கள் இதற்கு கூறப்படுகின்றன. இந்த இடர்பாட்டை அவ்வளவு எளிதில் எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக சீர் செய்ய வேண்டும். இல்லையெனில் இதுவும் பல்வேறு சிக்கலை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி அதிக செலவீணத்தையும் திடீரென ஏற்படுத்திவிடும்.

விநோத சத்தங்கள்
கல கலவென்றோ அல்லது முற்றிலும் விநோதமான ஏதேனும் ஓர் சத்தம் காருக்குள் அல்லது எஞ்ஜின் பகுதியில் இருந்து வந்தால் உடனடியாக கவனித்துவிட வேண்டும். ஆம், அதிகமான பள்ளம், மேடுகள் நிறைந்த சாலையில் பயணிப்பதன் காரணத்தால் முக்கிய கூறுகள்கூட ஆட்டம் கண்டுவிடுகின்றன. இதனாலயே விநோதமான சத்தம் வாகனத்தில் இருந்து வெளிப்படும்.

அம்மாதிரியான சூழ்நிலையில் உடனடியாக கார் மெக்கானிக்கை அணுகி குறிப்பிட்ட அந்த சத்தத்தைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும். இல்லையெனில் அந்த பாகம் தனியாக கழண்டுவிழுந்து மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தலாம். முதலில் அந்த சத்தம் என்பதைக் கண்டறிந்து உங்களால் சரி செய்ய முடிகின்றதா என ஆராய வேண்டும். அது முடியவில்லை என்றால் நிச்சயம் மெக்கானிக்கை அணுகியே வேண்டும்.

மேற்கூறிய இந்த விஷயங்கள் அனைத்தும் உங்களைத் தானாகவே எச்சரிக்கக் கூடியவையாகும். எனவே, அது தரும் எச்சரிக்கையை ஏனோதானோ என விட்டுவிட வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோளாகும். எங்களுடையது மட்டுமல்ல பலரின் வேண்டுகோளாக இது இருக்கின்றது.