4வது தலைமுறை ஸ்விஃப்ட் காரை உருவாக்கும் சுஸுகி... இந்திய சந்தைக்கு எப்போது வருகிறது தெரியுமா?

4வது தலைமுறை ஸ்விஃப்ட் காரின் அறிமுகம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்க்கலாம்.

4வது தலைமுறை ஸ்விஃப்ட் காரை உருவாக்கும் சுஸுகி... இந்திய சந்தைக்கு எப்போது வருகிறது தெரியுமா?

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்ற அந்தஸ்தை மாருதி சுஸுகி மிக நீண்ட காலமாக தன்வசம் வைத்துள்ளது. அந்நிறுவனத்தின் ஸ்விஃப்ட், அனைத்து வயது பிரிவினருக்கும் பிடித்தமான ஹேட்ச்பேக் காராக உள்ளது. சுமார் 15 ஆண்டுகளாக சந்தையில் இருந்து வரும் ஸ்விஃப்ட், பலமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது.

4வது தலைமுறை ஸ்விஃப்ட் காரை உருவாக்கும் சுஸுகி... இந்திய சந்தைக்கு எப்போது வருகிறது தெரியுமா?

இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இருந்து வரும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின், மூன்றாவது தலைமுறை மாடல் ஆகும். கடந்த 2018ம் ஆண்டு இந்த மாடல் இந்திய சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. தனது செக்மெண்ட்டில், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட கார்களுடன், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் போட்டியிட்டு வருகிறது.

4வது தலைமுறை ஸ்விஃப்ட் காரை உருவாக்கும் சுஸுகி... இந்திய சந்தைக்கு எப்போது வருகிறது தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது ஸ்விஃப்ட் காரை சிறிய அளவிலான காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி சோதனை செய்யப்படும்போது சில முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது.

4வது தலைமுறை ஸ்விஃப்ட் காரை உருவாக்கும் சுஸுகி... இந்திய சந்தைக்கு எப்போது வருகிறது தெரியுமா?

ஸ்விஃப்ட் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சுஸுகி நிறுவனம் அடுத்த தலைமுறை (நான்காவது தலைமுறை) ஸ்விஃப்ட் காரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

4வது தலைமுறை ஸ்விஃப்ட் காரை உருவாக்கும் சுஸுகி... இந்திய சந்தைக்கு எப்போது வருகிறது தெரியுமா?

புதிய தலைமுறை ஸ்விஃப்ட் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் காரை உருவாக்கும் பணிகளை, சுஸுகி நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டதாக பெஸ்ட்கார்வெப் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிளாட்பார்ம் அடிப்படையில், அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் கட்டமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4வது தலைமுறை ஸ்விஃப்ட் காரை உருவாக்கும் சுஸுகி... இந்திய சந்தைக்கு எப்போது வருகிறது தெரியுமா?

அனேகமாக இந்த புதிய பிளாட்பார்மானது, ஹார்டெக்ட் பிளாட்பார்மின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போதைய தலைமுறை ஸ்விஃப்ட் கார், ஹார்டெக்ட் பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார், வரும் 2022ம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

4வது தலைமுறை ஸ்விஃப்ட் காரை உருவாக்கும் சுஸுகி... இந்திய சந்தைக்கு எப்போது வருகிறது தெரியுமா?

ஆனால் இந்திய சந்தையை பொறுத்தவரை நாம் 2023ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023ம் ஆண்டில்தான் இந்திய சந்தை புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை பெறும் என கூறப்படுகிறது. எனினும் தற்போதே புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார், இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

4வது தலைமுறை ஸ்விஃப்ட் காரை உருவாக்கும் சுஸுகி... இந்திய சந்தைக்கு எப்போது வருகிறது தெரியுமா?

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், அனைத்து வயது பிரிவினரையும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கவர்ந்துள்ளது. ஸ்விஃப்ட் காரின் கவர்ச்சியான தோற்றம், குறைவான பராமரிப்பு செலவு மற்றும் சிறப்பான எரிபொருள் சிக்கனம் ஆகியவையே இதற்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன. இந்த சூழலில் வரவுள்ள ஸ்விஃப்ட் விற்பனையில் இன்னும் புதிய உச்சங்களை தொடலாம்.

Most Read Articles

English summary
4th-gen Maruti Suzuki Swift Hatchback India Launch Details. Read in Tamil
Story first published: Tuesday, February 16, 2021, 10:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X