மிக பெரிய சிக்கலில் ஹூண்டாய்... ஒட்டுமொத்தமாக 4.71 லட்சம் வாகனங்களுக்கு அழைப்பு... எதற்காக தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 4.71 லட்சம் எண்ணிக்கையிலான கார்களை திரும்பி வருமாறு அழைத்திருக்கின்றது. இதற்கான காரணத்தை இப்பதிவில் காணலாம்.

மிக பெரிய சிக்கலில் ஹூண்டாய்... ஒட்டுமொத்தமாக 4.71 லட்சம் வாகனங்களுக்கு அழைப்பு... எதற்காக தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் தனது தயாரிப்புகளை விற்பனைச் செய்து வருகின்றது. அந்தவகையில், இந்நிறுவனம் விற்பனைச் செய்யும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இந்த நாட்டிலேயே மிகப்பெரிய சிக்கலில் ஹூண்டாய் தற்போது சிக்கியிருக்கின்றது.

மிக பெரிய சிக்கலில் ஹூண்டாய்... ஒட்டுமொத்தமாக 4.71 லட்சம் வாகனங்களுக்கு அழைப்பு... எதற்காக தெரியுமா?

இதன்காரணமாக 4.71 லட்சம் யூனிட் வாகனங்களை திரும்பி அழைக்கும் நிலைக்கு அது தள்ளப்பட்டிருக்கின்றது. திரும்பி அழைக்கப்பட்டிருக்கும் அனைத்து கார்களும் எஸ்யூவி ரக கார்களாக இருக்கின்றன. இவற்றில், தயாரிப்பின்போது பொருத்தப்பட்ட பாகம் ஒன்று கோளாறுடையதாகப் பொருத்தப்பட்டிருக்கின்றது.

மிக பெரிய சிக்கலில் ஹூண்டாய்... ஒட்டுமொத்தமாக 4.71 லட்சம் வாகனங்களுக்கு அழைப்பு... எதற்காக தெரியுமா?

இந்த கோளாறுள்ள பாகத்தை ரீபிளேஸ் செய்யவே ஆயிரக் கணக்கிலான வாகனங்களை திரும்பி வர அழைப்பு விடுத்திருக்கின்றது. தொடர்ச்சியாக கோளாறுள்ள பாகனத்தை பயன்படுத்துவதனால் பல்வேறு பின் விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என்பதனாலயே இந்த அழைப்பை ஹூண்டாய் செய்திருக்கின்றது.

மிக பெரிய சிக்கலில் ஹூண்டாய்... ஒட்டுமொத்தமாக 4.71 லட்சம் வாகனங்களுக்கு அழைப்பு... எதற்காக தெரியுமா?

குறிப்பாக, சிக்கல் பெரியதாவதற்கு முன்னரே அனைத்து வாகனங்களிலும் குறிப்பிட்ட கோளாறுள்ள பாகத்தை ரீபிளேஸ் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டிருக்கின்றது. 2016 - 2018, மற்றும் 2020ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட டூசான் கார்களே கோளாறான பாகத்தைப் பெற்ற ஹூண்டாய் தயாரிப்பாகும். இக்காருக்கு மின்சாரத்தை வழங்கக் கூடிய முக்கிய கருவியே கோளாறுள்ள பாகமாக கண்டறியப்பட்டிருக்கின்றது.

மிக பெரிய சிக்கலில் ஹூண்டாய்... ஒட்டுமொத்தமாக 4.71 லட்சம் வாகனங்களுக்கு அழைப்பு... எதற்காக தெரியுமா?

குறைபாடுள்ள இந்த கருவியைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவதனால் தீ விபத்து போன்ற மிகப்பெரிய சிக்கல்களைச் சந்திக்கக் கூடும். எனவேதான் உடனடியாக அனைத்து டூசான் கார்களையும் ரீபிளேஸ் செய்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கின்றது. அதேசமயம், இதுவரை இந்த கோளாறுள்ள பாகத்தினால் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.

மிக பெரிய சிக்கலில் ஹூண்டாய்... ஒட்டுமொத்தமாக 4.71 லட்சம் வாகனங்களுக்கு அழைப்பு... எதற்காக தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனம் டூசான் கார்களை குறைபாடுள்ள கருவியின் காரணமாக அழைப்பது இது முதல் முறையல்ல. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1.80 லட்சம் கார்கள் ஏபிஎஸ் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக திரும்பி அழைத்திருந்தது.

மிக பெரிய சிக்கலில் ஹூண்டாய்... ஒட்டுமொத்தமாக 4.71 லட்சம் வாகனங்களுக்கு அழைப்பு... எதற்காக தெரியுமா?

இந்த நிலையிலேயே 4.71 லட்சம் அளவிலான டூசான் கார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றன. இது டூசான் கார் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்நிறுவனம் 2015 மற்றும் 2016 வெலோஸ்டர், 2011 முதல் 2013 வரை தயாரிக்கப்பட்ட சொனாட்டா ஹைபிரிட் ஆகிய கார்களையும் அதிகளவில் அழைந்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Hyundai Recalls 4.71 Lakh SUVs In US: Here Is Full Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X