எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் மாடல்களில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி மாடல்களில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் மாடல்களில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் எம்ஜி ஹெக்டர் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த எஸ்யூவி பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைத்து வருகிறது. இரண்டிலும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும், பெட்ரோல் மாடலில் கூடுதலாக டிசிடி கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்படுகிறது.

எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் மாடல்களில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து, ஹெக்டர் எஸ்யூவி மாடல்களில் கூடுதல் மதிப்பையும், தேர்வையும் வழங்கும் பணிகளில் எம்ஜி ஈடுபட்டுள்ளது. அதன்படி, இன்று கூடுதல் தேர்வாக ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி பெட்ரோல் மாடலில் 8 ஸ்டெப் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் மாடல்களில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

எம்ஜி ஹெக்டர் 5 சீட்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் 6 மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. புதிய ஹெக்டர் பெட்ரோல் சிவிடி ஸ்மார்ட் வேரியண்ட்டிற்கு ரூ.16.52 லட்சமும் ரூ.18.10 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் மாடலின் பெட்ரோல் சிவிடி ஸ்மார்ட் வேரியண்ட் ரூ.17.22 லட்சமும், ஷார்ப் வேரியண்ட் ரூ.18.90 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விலையிலும் வந்துள்ளது.

எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் மாடல்களில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவிகளின் பெட்ரோல் மாடல்கள் ஏற்கனவே மேனுவல் மற்றும் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும் நிலையில், தற்போது சிவிடி கியர்பாக்ஸ் தேர்விலும் வந்துள்ளது. ஆனால், டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் மாடல்களில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் பெட்ரோல் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுக்கான புக்கிங் மற்றும் டெலிவிரிப் பணிகள் அடுத்த வாரம் துவங்கப்படும் என தெரிகிறது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைவிட சிவிடி கியர்பாக்ஸ் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தையும், செயல்திறனையும் வெளிப்படுத்தும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் மாடல்களில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த மாதம் புத்தாண்டு பிறந்த உடனே, கூடுதல் சிறப்பம்சங்களுடன் 2021 மாடலாக எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. அதனுடன் சேர்த்து ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியானது 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வுகளில் வந்தது. இந்த நிலையில், இரண்டு மாடல்களிலும் இப்போது கூடுதல் தேர்வாக சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகிறது.

எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் மாடல்களில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவிகளில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 143 எச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் தற்போது மேனுவல், டிசிடி மற்றும் சிவிடி என மூன்றுவிதமான கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். சிவிடி மாடலில் ஈக்கோ, டிரைவ் மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவிங் மோடுகளும் உள்ளன.

எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் மாடல்களில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட ஷார்ப் டாப் வேரியண்ட்டில் 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஐ-ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம், வென்டிலேட்டட் இருக்கைகள் (ஹெக்டரில் மட்டும்), டியூவல் பான் அமைப்புடன் சன்ரூஃப், 6 விதமான நிலைகளில் மாறக்கூடிய ஓட்டுனர் இருக்கை, ஆட்டோமேட்டிக் ஏசி, புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகிய தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

Most Read Articles
English summary
MG Motor has launched the CVT automatic gearbox option in Hector and Hector Plus (6 seater) SUV models in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X