Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த மாதம் வரை மட்டுமே... மாபெரும் தள்ளுபடி விலையில் நிஸான்-டட்சன் கார்கள்... இவ்ளோ பெரிய தொகை தள்ளுபடியா!!
நிஸான் மற்றும் டட்சன் ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டாக இணைந்து மாபெரும் தள்ளுபடி பற்றிய தகவலை அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தங்களின் தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் வகையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் நடப்பு பிப்ரவரி மாதத்திலும் சலுகைகளை அறிவித்த வண்ணம் இருக்கின்றன. கடந்த ஆண்டு மிகப்பெரிய விற்பனை வீழ்ச்சியை வாகன உற்பத்தி நிறுவனங்கள் சந்தித்தன. இந்த நிலை ஆண்டின் இறுதியில், தீபாவளி போன்ற பண்டிகைக் காலம் தொடங்கிய பின்னர் சற்றே மாற ஆரம்பித்தது.

சொல்லப் போனால் பண்டிகைக் காலம் ஆரம்பித்த பின்னரே இந்தியாவில் புதிய வாகனங்களின் விற்பனை சூடிபிடிக்க ஆரம்பித்தன. இதற்கு அப்போது அறிவிக்கப்பட்ட ஆஃப்ர்கள் மற்றும் சலுகைகளும் ஓர் முக்கிய காரணமாகும். ஆகவே, சலுகைகளை தொடர்ச்சியாக ஆண்டின் முதல் மாதம் ஜனவரியிலும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்தன.

புத்தாண்டு, குடியரசு தினம் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை நாட்களைக் காரணம் காட்டி நிறுவனங்கள் சிறந்த சலுகைகளை அறிவித்தன. இதனால், 2021 ஜனவரியிலும் கணிசமான விற்பனை வளர்ச்சியை வாகன நிறுவனங்கள் பெற்றன. இந்த நிலையை பண்டிகை நாட்களே இல்லாத ஓர் மாதமான நடப்பு பிப்ரவரி மாதத்திலும் பெற வேண்டும் என்பதில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

இதற்காக, இந்த மாதத்திலும் சிறப்பு சலுகைளை நிறுவனங்கள் வாரி வழங்கி வருகின்றன. இந்த நிலையில், பிரபல கார் உற்பத்தி நிறுவனங்களான நிஸான் மற்றும் டட்சன் ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டாக இணைந்து தங்களின் சிறப்பு சலுகைகள் பற்றிய தகவலை அறிவத்திருக்கின்றன. இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக ரூ. 95 ஆயிரம் வரை சிறப்பு ஆஃபர்களை வழங்க இருப்பதாக நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.

இந்த சிறப்பு சலுகையை நிஸான் நிறுவனம் தனது கிக்ஸ் காருக்கு மட்டுமே பொருந்தும் என அறிவித்திருக்கின்றது. அதேசமயம், டட்சன் நிறுவனம் இச்சலுகை தனது அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும் என கூறியிருக்கின்றது. வாருங்கள் சிறப்பு சலுகைகள் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

நிஸான் கிக்ஸ்:
நிஸான் நிறுவனம் கிக்ஸ் காரை வெவ்வேறு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அந்தவகையில் இது விற்பனைச் செய்யும் ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ. 9.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உயர்நிலை தேர்வின் விலை ரூ. 14.64 ஆகும். இந்த விலைகளில் இருந்தே ரூ. 95 ஆயிரம் வரை சிறப்பு ஆஃபரை வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

இந்த அறிவிப்பின்படி, ரூ. 25 ஆயிரம் வரை கேஷ் டிஸ்கவுண்டும், 50 ஆயிரம் ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ஜ் சலுகையும், ரூ. 20 ஆயிரம் வரை சிறப்பு லாயல்டி சலுகையையும் வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

டட்சன் ரெடி-கோ:
இக்கார் இந்தியாவில் ரூ. 2.86 லட்சம் தொடங்கி ரூ. 4.82 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த மலிவு விலைக் காருக்கே நிறுவனம் ரூ. 34 ஆயிரம் வரை சிறப்பு சலுகைகளை வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

இதன்படி, எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ. 15 ஆயிரமும், கார்பரேட் நபர்களுக்கு ரூ. 4 ஆயிரம் கூடுதல் சலுகையையும் வழங்க திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமின்றி ரூ. 15 ஆயிரம் வரை சிறப்பு கேஷ் டிஸ்கவுண்டை வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

டட்சன் கோ:
டட்சன் கோ கார் இந்தியாவில் ரூ. 4.02 லட்சம் தொடங்கி ரூ. 6.51 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த காருக்கு ரூ. 40 ஆயிரம் வரையில் சிறப்பு சலுகைகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இக்காருக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ. 20 ஆயிரமும், கார்பரேட் மற்றும் இதர தள்ளுபடிகளின் வாயிலாக ரூ. 20 ஆயிரத்திற்கான சிறப்பு சலுகையை வழங்க இருக்கின்றது.

டட்சன் கோ ப்ளஸ்:
டட்சன் கோ ப்ளஸ் ஓர் எம்பிவி ரக காராகும். இந்தியாவில் மிக மலிவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எம்பிவி ரக காரில் இதுவும் ஒன்று. இக்கார் ரூ. 4.25 லட்சம் தொடங்கி ரூ. 6.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இக்காருக்கு டட்சன் கோ காருக்கு வழங்கியதைப் போன்ற சிறப்பு சலுகைகளை வழங்க இருப்பதாக நிறுவனம் கூறியிருக்கின்றது.

மேற்கூறிய சலுகைகள் அனைத்தும் இந்த பிப்ரவரி மாதம் வரை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இச்சலுகை முடியவடைய இன்னும் ஒரு வாரம் இரு நாட்கள் மட்டுமே உள்ளன. சலுகை பற்றிய மேலும் விரிவாகன தகவல்கள் டட்சன் மற்றும் நிஸான் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன.