முதல் மின்சார காரின் டீசர் படத்தை வெளியிட்ட ரெனால்ட்... பின்னழகு சும்மா அள்ளுது...

ரெனால்ட் நிறுவனம் அதன் முதல் மின்சார கார்குறித்த டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

முதல் மின்சார காரின் டீசர் படத்தை வெளியிட்ட ரெனால்ட்... பின்னழகு சும்மா அள்ளுது...

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ரெனால்ட், அதன் முதல் மின்சார வாகனத்தின் டீசர் படங்களை வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக விரைவில் இக்காரின் அறிமுக நிகழ்ச்சி அரங்கேற உள்ள நிலையில், காரின் பக்கம் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கையில் நிறுவனம் இறங்கியிருக்கின்றது.

முதல் மின்சார காரின் டீசர் படத்தை வெளியிட்ட ரெனால்ட்... பின்னழகு சும்மா அள்ளுது...

ரெனால்ட் நிறுவனம் மேகேன்-இ எனும் பெயரிலேயே அதன் முதல் மின்சார காரை தயாரித்து வருகின்றது. இது ஓர் எஸ்யூவி ரக வாகனமாகும். இக்காரை வரும் ஆண்டில் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையிலேயே மின் வாகன பிரியர்களையும், தனது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில் மேகேன்-இ எலெக்ட்ரிக் காரின் பின்னழகு குறித்த புகைப்படத்தை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முதல் மின்சார காரின் டீசர் படத்தை வெளியிட்ட ரெனால்ட்... பின்னழகு சும்மா அள்ளுது...

தொடர்ந்து, காரின் கேபின் பகுதிகுறித்த படத்தையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த காரை கடந்த ஆண்டு கான்செப்ட் மாடலாக நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. அந்த நேரத்தில், வரும் 2025ம் ஆண்டிற்குள் மொத்தமாக 24 புதிய மின்சார வாகனங்களை தங்களுடைய நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்ற வாக்குறுதியை ரெனால்ட் கொடுத்திருந்தது.

முதல் மின்சார காரின் டீசர் படத்தை வெளியிட்ட ரெனால்ட்... பின்னழகு சும்மா அள்ளுது...

இதன் முன்னோட்டமாக மேகேன்-இ மின்சார கார் மிகவும் அதி-வேகத்தில் அறிமுகத்திற்காக தயாராகி வருகின்றது. சிஎம்எஃப்-இவி எனும் புதிய பிளாட்பாரத்தின் வாயிலாகவே தனது முதல் மின்சார காரை நிறுவனம் உருவாக்கி வருகின்றது. இது மின்சார வாகனங்களுக்காகவே உருவாக்கப்பட்ட பிரத்தேயக பிளாட்பாரம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

முதல் மின்சார காரின் டீசர் படத்தை வெளியிட்ட ரெனால்ட்... பின்னழகு சும்மா அள்ளுது...

இதில், தயாராகும் முதல் மின்சார காராக மேகேன்-இ இருக்கின்றது. ஆகையால், இதன் வரவை எதிர்நோக்கி பலர் காத்திருக்க தொடங்கியிருக்கின்றனர். அதேசமயம், இந்த பிளாட்பாரத்தைப் பயன்படுத்தி ரெனால்ட்-நிஸான்-மிட்சுபிஷி கூட்டணியில் நிஸான் ஆரியா எனும் மின்சார காரை நிறுவனம் உருவாக்கியுள்ளது.

முதல் மின்சார காரின் டீசர் படத்தை வெளியிட்ட ரெனால்ட்... பின்னழகு சும்மா அள்ளுது...

ஆகையால், கூட்டணியில் இல்லாமல் தனது சொந்த நிறுவனத்தின்கீழ் உருவாக்கப்பட்ட முதல் காராக மேகேன்-இ எலெக்ட்ரிக் கார் இருக்கின்றது. ரெனால்ட் கேப்சர் கார் இருக்கும் அதே உருவ அளவிலேயே மேகேன்-இ தயாராகி வருகின்றது.

முதல் மின்சார காரின் டீசர் படத்தை வெளியிட்ட ரெனால்ட்... பின்னழகு சும்மா அள்ளுது...

ஓரிரு மீட்டர் குறைவான அல்லது நீளமான நீளத்தை மின்சார கார் பெறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. தொடர்ந்து, பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் அடங்கிய எலெக்ட்ரிக் காராகவும் இது விற்பனைக்கு வர இருக்கின்றது. அந்தவகையில், மேகேன்-இ மின்சார காரில் 'ட' வடிவிலான திரை மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.

முதல் மின்சார காரின் டீசர் படத்தை வெளியிட்ட ரெனால்ட்... பின்னழகு சும்மா அள்ளுது...

இத்துடன், கூகுள் சேவைகளும் இந்த காரில் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும், மேகேன் மின்சார காரில் 217 எச்பி மற்றும் 300 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டார் இடம்பெற இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த மின்சார மோட்டார் பூஜ்ஜியத்தில் 100கிமீ எனும் வேகத்தை வெறும் 8 செகண்டுகளிலேயே தொட்டுவிடுமளவிற்கு திறன் வாய்ந்தது.

முதல் மின்சார காரின் டீசர் படத்தை வெளியிட்ட ரெனால்ட்... பின்னழகு சும்மா அள்ளுது...

கூடுதல் சிறப்பாக மேகேன் மின்சார காரில் 60 kWh திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 450 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஆனால், இதனை சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதுகுறித்த தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. இதுமட்டுமின்றி, இன்னும் சில முக்கிய தகவல்களையும் நிறுவனம் வெளியிடவில்லை. விரைவில் அத்தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Reveals Its First Electric SUV Megane-e Teaser Ahead Of Global Debut. Read In Tamil.
Story first published: Friday, May 7, 2021, 9:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X