விற்பனைக்கு வந்த 2010 ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் சொகுசு கார்... இந்த கார் யாருடையதுனு தெரிஞ்சா ஸ்டன் ஆயிடுவீங்க!!

உலகின் முக்கிய தலைவர்களில் ஒருவருடைய விலையுயர்ந்த சொகுசு கார் விற்பனைக்கு வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கார் யாருடையது, என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கின்றது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.

விற்பனைக்கு வந்த 2010 ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் சொகுசு கார்... இந்த கார் யாரோடையதுனு ஸ்டன் ஆயிடுவீங்க!!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பேந்தம் கார் ஒன்று விற்பனைக்கு வந்திருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கார் விற்பனைக்கு வருவது சாதாரணமான விஷயம்தானே அதை பற்றி ஏன் இங்கு நாம் பார்க்க வேண்டும் என நம்மில் பலருக்கு கேட்க தோன்றலாம். விற்பனைக்கு வந்திருக்கும் கார் உலகின் முக்கியனா தலைவர்களில் ஒருவருடையது ஆகும்.

விற்பனைக்கு வந்த 2010 ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் சொகுசு கார்... இந்த கார் யாரோடையதுனு ஸ்டன் ஆயிடுவீங்க!!

எனவேதான் இக்கார் விற்பனைக்கு வந்திருக்கும் தகவல் பெரியளவில் பேசு பொருளாக மாறியிருக்கின்றது. இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கும் தகவல் மட்டுமே இப்போது பேசு பொருளாக இல்லைங்க, இந்த காரை பயன்படுத்தி வந்த அந்த முக்கிய தலைவரும் தற்போது ஹெட்லைன் செய்திகளில் இடம் பெற்று வருகிறார்.

விற்பனைக்கு வந்த 2010 ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் சொகுசு கார்... இந்த கார் யாரோடையதுனு ஸ்டன் ஆயிடுவீங்க!!

ஆமாங்க தற்போதைய அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் பற்றிதான் இங்கு பேசிக் கொண்டிருக்கின்றோம். விரைவில் முன்னாள் அதிபர் என்ற நிலைக்கு இடம்பெயர இருக்கும் இவரின் சொகுசு காரே தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது. இது 2010 ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் கார் ஆகும்.

விற்பனைக்கு வந்த 2010 ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் சொகுசு கார்... இந்த கார் யாரோடையதுனு ஸ்டன் ஆயிடுவீங்க!!

இக்காரையே ஏலத்தின் வாயிலாக விற்பனைச் செய்ய அவர் முடிவெடுத்துள்ளார். 300,000 முதல் 400,000 வரையிலான அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 2.9 கோடி ரூபாயாகும். டொனால்ட் ட்ரம்ப் பயன்படுத்தி வந்த இக்கார் இதுவரை 91,249 கிமீ தூரம் வரை பயணித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

விற்பனைக்கு வந்த 2010 ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் சொகுசு கார்... இந்த கார் யாரோடையதுனு ஸ்டன் ஆயிடுவீங்க!!

இருப்பினும், புதுமை பொலிவு குறையாமல் இக்கார் காட்சியளிக்கின்றது. ட்ரம்பிற்கு மிகவும் பிடித்தமான கார்களில் இதுவும் ஒன்று என கூறப்படுகின்றது. இதனை வெளிப்படையாக அவர் கூறியிருக்கின்றார். காரை விற்பனைக்கு அறிவித்த காரணத்தினால் அதில் தனது ஆட்டோகிராஃபை அவர் போட்டிருக்கின்றார்.

விற்பனைக்கு வந்த 2010 ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் சொகுசு கார்... இந்த கார் யாரோடையதுனு ஸ்டன் ஆயிடுவீங்க!!

மேலும், காரை வாங்குபவருக்கு சிறப்பு வாழ்த்து மடல் ஒன்றையும் எழுதியிருக்கின்றார். அதில், "இக்கார் எனக்கு மிகவும் பிடித்தது, மிக சிறந்ததும்கூட. உங்களுக்கு வாழ்த்துக்கள் என கூறியிருக்கின்றார். தியேட்டரில் இருக்கும் அனுபவத்தை வழங்கக் கூடிய திரை மற்றும் ஸ்பீக்கர்கள், வானத்தைப் போன்று தோற்றமளிக்கக் கூடிய உட்பகுதி மேற்கூரை, பட்டன்கள் மூலம் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய ஜன்னல் மறைப்புகள் என பல்வேறு சிறப்பு வசதிகள் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன.

விற்பனைக்கு வந்த 2010 ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் சொகுசு கார்... இந்த கார் யாரோடையதுனு ஸ்டன் ஆயிடுவீங்க!!

இதுமட்டுமின்றி கூடுதல் பிரீமியம் மற்றும் சொகுசு வசதிகளை உள்ளடக்கிய காராக இந்த ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் இருக்கின்றது. எனவே அமெரிக்கர்களின் கவனத்தை இக்கார் ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றது. இதனை ஏன் டொனால்ட் ட்ரம்ப் விற்பனைச் செய்ய முடிவு செய்தார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை.

விற்பனைக்கு வந்த 2010 ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் சொகுசு கார்... இந்த கார் யாரோடையதுனு ஸ்டன் ஆயிடுவீங்க!!

இக்காரில் 6.75 லிட்டர் வி12 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 453 எச்பி திறனை வெளிப்படுத்தக் கூடியது. சிக்ஸ் ஆட்டோமோட்டிக் டிரான்ஸ்மிஷனையே இக்கார் கொண்டிருக்கின்றது. இதுதவிர, பவர் ஸ்டியரிங், பவர் டிஸ்க் பிரேக் அனைத்து இருக்கைக்குமான ஏர் பேக் உள்ளிட்ட சகல வசதிகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rolls-Royce Phantom Car Owned By US President Donald Trump Goes On Sale. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X