ஹூண்டாய் ஐ20 காரில் இருந்து ஐ20 என் லைன் எந்தளவிற்கு வித்தியாசமானது? முக்கிய சிறப்பம்சங்கள்

ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து விரைவில் விற்பனைக்கு வரவுள்ள கார்களுள் ஐ20 என் லைனும் ஒன்று. சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள ஐ20 என் காருடன் இதை குழப்பி கொள்ள வேண்டாம். ஏனெனில் அது ஹூண்டாயின் உண்மையான செயல்திறன்மிக்க மாடலாகும்.

ஹூண்டாய் ஐ20 காரில் இருந்து ஐ20 என் லைன் எந்தளவிற்கு வித்தியாசமானது? முக்கிய சிறப்பம்சங்கள்

ஆனால் ஐ20 என் லைன் என்பது தற்சமயம் விற்பனையில் உள்ள ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் ஸ்போர்டியர் வெர்சனாகும். இதனால் கிட்டத்தட்ட ஐ20-யின் என்ஜின், சஸ்பென்ஷன் மற்றும் சத்தத்தையே இதுவும் பெற்று வரவுள்ளது. ஐ20 என் லைனில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம் என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் ஐ20 காரில் இருந்து ஐ20 என் லைன் எந்தளவிற்கு வித்தியாசமானது? முக்கிய சிறப்பம்சங்கள்

வெளிப்பக்க தோற்றத்தில்...

சில காஸ்மெட்டிக் மாற்றங்களை தவிர்த்து வெளிப்பக்கத்தில் பெரிய அளவில் எந்த வித்தியாசத்தையும் எதிர்பார்க்க முடியாது. கிட்டத்தட்ட ஐ20 மாடலை போலவே இதுவும் இருக்கும். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ஐ20 என் லைன் கார் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

அப்போது கிடைக்கப்பெறும் ஸ்பை படங்களின் மூலம், ‘என் லைன்' லோகோவுடன் முன்பக்க க்ரில் சற்று நீளமானதாக வழங்கப்பட உள்ளதை அறிந்திருந்தோம். அத்துடன் முன்பக்கத்தில் ஃபாக் விளக்கின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளன. ஐ20 காரில் வழங்கப்படும் தாழ்வான ஏர் டேம் இந்த என் லைன் காரில் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ20 காரில் இருந்து ஐ20 என் லைன் எந்தளவிற்கு வித்தியாசமானது? முக்கிய சிறப்பம்சங்கள்

இந்த மாற்றங்களை எல்லாம் கருத்தில் கொண்டு முன்பக்க பம்பர் அதற்கு ஏற்றப்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். சக்கரங்களின் டிசைனும் மாற்றப்படலாம். ஆனால் இது ஐரோப்பாவில் விற்பனையில் உள்ள ஐ20 என் காரில் இருந்து கொண்டுவரப்படுமா என்பது தெரியவில்லை. ஸ்பை படங்களில் சக்கரங்கள் மறைக்கப்பட்டு இருந்தன.

ஹூண்டாய் ஐ20 காரில் இருந்து ஐ20 என் லைன் எந்தளவிற்கு வித்தியாசமானது? முக்கிய சிறப்பம்சங்கள்

பின்பக்கம் ஸ்டாண்டர்ட் மாடலை காட்டிலும் சற்று பெரியதாக இருக்கும். குறிப்பாக இருபக்கத்திலும் ஒளி பிரதிபலிப்பான்களை கொண்ட ரீடிசைனிலான பம்பர் அளவில் சற்று பெரியதாக வழங்கப்பட உள்ளது. இதன் மையத்தில் முக்கோண வடிவில் ஃபாக் விளக்கு வழங்கப்படவுள்ளது. இவற்றுடன் ஹூண்டாய் நிறுவனம் இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்களையும் ஸ்போர்டியான தோற்றத்திற்காக பொருத்தும்.

ஹூண்டாய் ஐ20 காரில் இருந்து ஐ20 என் லைன் எந்தளவிற்கு வித்தியாசமானது? முக்கிய சிறப்பம்சங்கள்

உட்புறத்தில்...

வெளிப்புற தோற்றத்துடன் பொருந்தும் வகையில் ஐ20 என் லைன் காரின் உட்புற கேபின் உலோக பாகங்கள் பொறிக்கப்பட்டதாக, சிவப்பு நிற தொடுதல்களை கொண்டதாக இருக்கும். இவ்வளவு ஏன், ஸ்டேரிங் சக்கரத்தின் வடிவம் கூட மாற்றப்படலாம்.

கியர் மாற்றி லிவர் ஆனது, குறைந்தப்பட்சம் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களிலாவது வித்தியாசப்படும். வெளிப்பக்கத்தை போல் புதிய ஐ20 என் லைன் காரின் உட்புற தோற்றத்தையும் ஐரோப்பிய ஐ20 என் லைன் காரை வைத்து தான் கூறிகின்றோம்.

ஹூண்டாய் ஐ20 காரில் இருந்து ஐ20 என் லைன் எந்தளவிற்கு வித்தியாசமானது? முக்கிய சிறப்பம்சங்கள்

என்ஜின் அமைப்பில் எதிர்பார்க்கப்படுபவை

ஐ20 என் லைன் போன்ற ஸ்போர்டியர் கார்களில் மெருக்கேற்றப்பட்ட தோற்றத்தை எதிர்பார்க்கும் அதேசமயம் என்ஜினில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பதையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த மாற்றம் தான் நமது பயண அனுபவத்தையே ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து வித்தியாசப்படுத்த கூடியவை.

ஹூண்டாய் ஐ20 காரில் இருந்து ஐ20 என் லைன் எந்தளவிற்கு வித்தியாசமானது? முக்கிய சிறப்பம்சங்கள்

செயல்திறன்மிக்க ஐ20 என் ஹாட் ஹேட்ச்பேக் காரை இந்தியாவிற்கு ஹூண்டாய் கொண்டுவராததற்கு காரணம், அதில் சுமார் 200 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல்மிக்க என்ஜின் வழங்கப்படுகிறது. இதனால் வழக்கமான ஐ20 காரை காட்டிலும் இதன் விலையை பல லட்சங்கள், ஏன் மில்லியன் கணக்கில் கூட அதிகரிக்க வேண்டிய சூழல் உருவாகும்.

நம் நாட்டில் பலர் பட்ஜெட் போட்டு தான் கார்களை வாங்குகிறார்கள். ஆதலால் ஐ20 என் இந்திய வாடிக்கையாளர்கள் அதிக பேரால் வாங்கப்படாது. இதன் காரணமாகவே ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் அதே 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் தான் ஐ20 என் லைன் காரும் கொண்டுவரப்படுகிறது.

ஹூண்டாய் ஐ20 காரில் இருந்து ஐ20 என் லைன் எந்தளவிற்கு வித்தியாசமானது? முக்கிய சிறப்பம்சங்கள்

இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. ஆனால் ஐ20 என் லைனில் கூடுதலாக 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்தை ஹூண்டாய் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் 200 என்எம் டார்க் திறன் வரையில் அதிகரிக்கலாம்.

ஹேண்ட்லிங்கில்...

என்ஜின் அமைப்பில் பெரியதாக மாற்றம் இல்லாவிட்டாலும், நிச்சயம் ஐ20 என் லைன் காரின் ஹேண்ட்லிங்கில் பெரிய வித்தியாசம் இருக்கும். அதேபோல் சஸ்பென்ஷன் அமைப்பையும் இந்த என் லைன் காரில் ஹூண்டாய் சற்று திருத்தியமைக்கலாம்.

ஹூண்டாய் ஐ20 காரில் இருந்து ஐ20 என் லைன் எந்தளவிற்கு வித்தியாசமானது? முக்கிய சிறப்பம்சங்கள்

சிறந்த கார்னரிங் திறனிற்காக சஸ்பென்ஷன் அமைப்பு சற்று விரைப்பானதாக வழங்கப்படலாம். இதனால் இந்த ஸ்போர்டியர் கார் கூடுதல் நம்பகத்தன்மையை வழங்கக்கூடிய ஹேண்ட்லிங்கை ஓட்டுனருக்கு வழங்கும். இருப்பினும் விரைப்பான சஸ்பென்ஷன் செட்அப்-பினால் நம்மூர் தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற கார் என்று சொல்ல முடியாது.

விலை

ஏற்கனவே ஹூண்டாய் ஐ20 பிரிமீயம் தரத்திலான ஹேட்ச்பேக் காராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் ஐ20 என் லைன் காரின் விலை நிச்சயம் அதனை காட்டிலும் சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்படும். இந்த ஹூண்டாய் என் லைன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12 லட்சத்தில் இருந்து துவங்கலாம்.

Most Read Articles

English summary
Top 5 things to expect from hyundai i20n line
Story first published: Sunday, August 8, 2021, 20:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X