வாங்கும்போது இதையும் கவனமா பாருங்க... அதிக ரீசேல் வேல்யூ கொண்ட கார்கள்... என்னென்ன தெரியுமா?

இந்திய சந்தையில் கிடைக்கும் அதிக ரீசேல் வேல்யூ கொண்ட கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

வாங்கும்போது இதையும் கவனமா பாருங்க... அதிக ரீசேல் வேல்யூ கொண்ட கார்கள்... என்னென்ன தெரியுமா?

நீங்கள் புதிதாக ஒரு கார் வாங்கப்போகிறீர்கள் என்றால், இயக்குவதற்கு ஆகும் செலவு, பராமரிப்பு செலவு, டிசைன், சௌகரியம், செயல்திறன், விலை என பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றுடன் மறுவிற்பனை மதிப்பையும் (ரீசேல் வேல்யூ) கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியம். தற்போது புதிய கார்களை வாங்கும் பலர் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அதனை விற்பனை செய்து விடுகின்றனர்.

வாங்கும்போது இதையும் கவனமா பாருங்க... அதிக ரீசேல் வேல்யூ கொண்ட கார்கள்... என்னென்ன தெரியுமா?

நீங்கள் அதிக ரீசேல் வேல்யூ கொண்ட கார்களை வாங்கினால், அவற்றை விற்பனை செய்யும்போது நல்ல தொகை கிடைக்கும். எனவே உங்களுக்கு உதவும் வகையில், இந்தியாவில் கிடைக்கும் அதிக ரீசேல் வேல்யூ கொண்ட கார்களின் பட்டியலை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். புதிய காரை வாங்குவதற்கு முன்பு, இதனையும் நீங்கள் கவனத்தில் கொண்டால், பிற்காலத்தில் உங்களுக்கு நன்மை பயக்கும்.

வாங்கும்போது இதையும் கவனமா பாருங்க... அதிக ரீசேல் வேல்யூ கொண்ட கார்கள்... என்னென்ன தெரியுமா?

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்

இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாகவே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மிகவும் பிரபலமான காராக இருந்து வருகிறது. அதே சமயம் குறைவான பராமரிப்பு செலவு மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் எளிமையாக கிடைப்பது ஆகிய காரணங்களால், யூஸ்டு கார் சந்தையிலும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் மிகவும் பிரபலமாக திகழ்ந்து கொண்டுள்ளது.

வாங்கும்போது இதையும் கவனமா பாருங்க... அதிக ரீசேல் வேல்யூ கொண்ட கார்கள்... என்னென்ன தெரியுமா?

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் தற்போதைய நிலையில் 1.2 லிட்டர் ட்யூயல்ஜெட் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்குகிறது.

வாங்கும்போது இதையும் கவனமா பாருங்க... அதிக ரீசேல் வேல்யூ கொண்ட கார்கள்... என்னென்ன தெரியுமா?

மாருதி சுஸுகி டிசையர்

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை போலவே, டிசையர் காரும் யூஸ்டு கார் மார்க்கெட்டில் மிகவும் பிரபலமாக திகழ்கிறது. குறிப்பாக கேப் உரிமையாளர்கள் மத்தியில் மாருதி சுஸுகி டிசையருக்கு பெரும் தேவை இருக்கிறது. சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் பெரும்பாலான கேப்கள், மாருதி சுஸுகி டிசையராக இருப்பதை நீங்கள் காணலாம்.

வாங்கும்போது இதையும் கவனமா பாருங்க... அதிக ரீசேல் வேல்யூ கொண்ட கார்கள்... என்னென்ன தெரியுமா?

மாருதி சுஸுகி டிசையர் காரில், 1.2 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், இன்லைன்-4 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை, 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

வாங்கும்போது இதையும் கவனமா பாருங்க... அதிக ரீசேல் வேல்யூ கொண்ட கார்கள்... என்னென்ன தெரியுமா?

மாருதி சுஸுகி பலேனோ

மாருதி சுஸுகி பலேனோ இந்திய சந்தையில் கடந்த 2015ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் ஆகும். மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகிய கார்களை போல், பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக்கிற்கும் யூஸ்டு கார் மார்க்கெட்டில் நல்ல டிமாண்ட் இருந்து வருகிறது.

வாங்கும்போது இதையும் கவனமா பாருங்க... அதிக ரீசேல் வேல்யூ கொண்ட கார்கள்... என்னென்ன தெரியுமா?

மாருதி சுஸுகி பலேனோ காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும் (எஸ்ஹெச்விஎஸ் உடன் ட்யூயல்ஜெட் வேரியண்ட்டில் 90 பிஎஸ்), 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

வாங்கும்போது இதையும் கவனமா பாருங்க... அதிக ரீசேல் வேல்யூ கொண்ட கார்கள்... என்னென்ன தெரியுமா?

ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் ஐ20 கார் இந்திய சந்தையில், கடந்த 2008ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஓரளவிற்கு பட்ஜெட் விலையில் அதிக வசதிகளுடன் கிடைக்க கூடிய கார்களில் ஒன்றாக ஹூண்டாய் ஐ20 இருந்து வருகிறது. யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் நிறைய பேர் ஹூண்டாய் ஐ20 காரை ஆர்வத்துடன் தேர்வு செய்கின்றனர்.

வாங்கும்போது இதையும் கவனமா பாருங்க... அதிக ரீசேல் வேல்யூ கொண்ட கார்கள்... என்னென்ன தெரியுமா?

தற்போதைய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார், 1.2 லிட்டர் பெட்ரோல் (83 பிஎஸ் மற்றும் 115 என்எம்), 1.5 லிட்டர் டர்போ-டீசல் (100 பிஎஸ் மற்றும் 240 என்எம்) மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் (120 பிஎஸ் மற்றும் 172 என்எம்) என மொத்தம் மூன்று இன்ஜின் தேர்வுகளுடன் கிடைக்கிறது. இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள பிரீமியம் ஹேட்ச்பேக் கார் ஆகும்.

வாங்கும்போது இதையும் கவனமா பாருங்க... அதிக ரீசேல் வேல்யூ கொண்ட கார்கள்... என்னென்ன தெரியுமா?

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

டொயோட்டா வாகனங்கள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஏராளமான டொயோட்டா இன்னோவா கார்கள் எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல், பல லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடியது தொடர்பான செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் பலமுறை வாசகர்களுக்கு வழங்கியுள்ளது.

வாங்கும்போது இதையும் கவனமா பாருங்க... அதிக ரீசேல் வேல்யூ கொண்ட கார்கள்... என்னென்ன தெரியுமா?

இதுபோன்ற காரணங்களால் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கும் யூஸ்டு கார் மார்க்கெட்டில் நல்ல மதிப்பு உள்ளது. தற்போதைய நிலையில் 2.4 லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின் (150 பிஎஸ் மற்றும் 360 என்எம்), மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (165 பிஎஸ் மற்றும் 245 என்எம்) என மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகளுடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கிடைக்கிறது.

Most Read Articles
English summary
Top Cars With Best Resale Value In India - Swift, Dzire, Baleno, i20, Innova Crysta. Read in Tamil
Story first published: Saturday, March 20, 2021, 19:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X