விற்பனையில் சாதனை படைத்த ஹூண்டாய் கார்... பாதுகாப்பான டாடா காருடன் மல்லுக்கட்ட அதிரடி திட்டம்!

ஹூண்டாய் வெனியூ கார் விற்பனையில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் சாதனை படைத்த ஹூண்டாய் கார்... பாதுகாப்பான டாடா காருடன் மல்லுக்கட்ட அதிரடி திட்டம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகும். இந்திய சந்தையில் கியா சொனெட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300, டொயோட்டா அர்பன் க்ரூஸர், ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் ஆகிய கார்களுடன் ஹூண்டாய் வெனியூ போட்டியிட்டு வருகிறது.

விற்பனையில் சாதனை படைத்த ஹூண்டாய் கார்... பாதுகாப்பான டாடா காருடன் மல்லுக்கட்ட அதிரடி திட்டம்!

அத்துடன் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் மேட் இன் இந்தியா கார் என்ற பெருமைக்கு உரிய டாடா நெக்ஸான் காரின் மிக முக்கியமான போட்டியாளராகவும் ஹூண்டாய் வெனியூ திகழ்கிறது. ஹூண்டாய் வெனியூ கார் இந்திய சந்தையில் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

விற்பனையில் சாதனை படைத்த ஹூண்டாய் கார்... பாதுகாப்பான டாடா காருடன் மல்லுக்கட்ட அதிரடி திட்டம்!

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 3 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது புதிய மைல்கல் ஒன்றை ஹூண்டாய் வெனியூ கடந்துள்ளது. இந்திய சந்தையில் 3 லட்சம் (3 Lakh) ஹூண்டாய் வெனியூ கார்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல். ஆம், அறிமுகம் செய்யப்பட்ட 3 ஆண்டுகளில் இந்தியாவில் 3 லட்சம் ஹூண்டாய் வெனியூ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விற்பனையில் சாதனை படைத்த ஹூண்டாய் கார்... பாதுகாப்பான டாடா காருடன் மல்லுக்கட்ட அதிரடி திட்டம்!

இந்திய சந்தையில் தற்போது கனெக்டட் கார் தொழில்நுட்பம் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. ஆனால் ஹூண்டாய் வெனியூ கார்தான் இதற்கெல்லாம் மிகப்பெரிய அளவில் அஸ்திவாரம் போட்டது. ஆம், கனெக்டட் கார் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்கு வந்த இந்தியாவின் முதல் மாஸ்-மார்க்கெட் கார் இதுதான். ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யப்பட்ட 3 லட்சம் ஹூண்டாய் வெனியூ கார்களில், 18 சதவீத கார்கள் கனெக்டட் கார் தொழில்நுட்பத்துடன்தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விற்பனையில் சாதனை படைத்த ஹூண்டாய் கார்... பாதுகாப்பான டாடா காருடன் மல்லுக்கட்ட அதிரடி திட்டம்!

ஹூண்டாய் வெனியூ காரின் பெட்ரோல் வேரியண்ட்களை 70 சதவீத வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துள்ளனர். எஞ்சிய 30 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே ஹூண்டாய் வெனியூ காரின் டீசல் வேரியண்ட்களை வாங்கியுள்ளனர். இது ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ள அதிகாரப்பூர்வமான தகவல் ஆகும்.

விற்பனையில் சாதனை படைத்த ஹூண்டாய் கார்... பாதுகாப்பான டாடா காருடன் மல்லுக்கட்ட அதிரடி திட்டம்!

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் மிகவும் சவால் நிறைந்தது. ஏராளமான கார்கள் இந்த செக்மெண்ட்டில் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு வருகின்றன. சமீப காலமாக இந்த செக்மெண்ட்டில் டாடா நெக்ஸான் காரின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. டாடா நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

விற்பனையில் சாதனை படைத்த ஹூண்டாய் கார்... பாதுகாப்பான டாடா காருடன் மல்லுக்கட்ட அதிரடி திட்டம்!

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் அதிகம் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையையும் இது தன்வசம் வைத்திருக்கிறது. டாடா நெக்ஸான் அளித்து வரும் கடுமையான போட்டியை சமாளிக்க ஹூண்டாய் நிறுவனம் அதிரடி நடவடிக்கை ஒன்றை விரைவில் மேற்கொள்ளவுள்ளது. ஆம், வெனியூ காரை ஹூண்டாய் நிறுவனம் தற்போது அப்டேட் செய்து வருகிறது.

விற்பனையில் சாதனை படைத்த ஹூண்டாய் கார்... பாதுகாப்பான டாடா காருடன் மல்லுக்கட்ட அதிரடி திட்டம்!

மேம்படுத்தப்பட்ட 2022 ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அனேகமாக வரும் ஜூன் மாதம் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் இறுதியை நெருங்கியுள்ள நிலையில், இன்னும் சிறிய காலமே இருப்பதால், ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

விற்பனையில் சாதனை படைத்த ஹூண்டாய் கார்... பாதுகாப்பான டாடா காருடன் மல்லுக்கட்ட அதிரடி திட்டம்!

இதுதவிர க்ரெட்டா மற்றும் கோனா ஆகிய கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களையும் ஹூண்டாய் நிறுவனம் வரும் மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஹூண்டாய் க்ரெட்டா காரானது, மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். அதே நேரத்தில் ஹூண்டாய் கோனா காரானது, எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது.

விற்பனையில் சாதனை படைத்த ஹூண்டாய் கார்... பாதுகாப்பான டாடா காருடன் மல்லுக்கட்ட அதிரடி திட்டம்!

க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மூலம் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் புதுவரவுகளான ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார்களால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்கவும், கோனா ஃபேஸ்லிஃப்ட் மூலம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலான டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் மற்றும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களால் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியை சமாளிக்கவும் ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Hyundai venue sub compact suv achieves 3 lakh sales milestone in india details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X