புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் வேரியண்ட் இன்னும் ஸ்டைலானதாக இருக்கே!! விலையும் குறைவுதான்...

டொயோட்டா ஃபார்ச்சூனரில் புதியதாக ஒரு வேரியண்ட் தாய்லாந்து நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி தொடர்ந்து முழுமையாக பார்ப்போம்.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் வேரியண்ட் இன்னும் ஸ்டைலானதாக இருக்கே!! விலையும் குறைவுதான்...

ஃபார்ச்சூனர் காருக்கு நமது இந்தியாவில் ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, வழக்கமான ஃபார்ச்சூனரை காட்டிலும் முரட்டுத்தனமான தோற்றத்திலான ஃபார்ச்சூனர் லெஜண்டர் மாடலை உயர்-நிலை வேரியண்ட்டாக டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் வேரியண்ட் இன்னும் ஸ்டைலானதாக இருக்கே!! விலையும் குறைவுதான்...

எதிர்பார்த்ததை போல் ஃபார்ச்சூனர் லெஜண்டரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. இந்த நிலையில் ஃபார்ச்சூனரில் லீடர் என்கிற பெயரில் புதியதொரு வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நமது இந்தியாவில் இல்லை, டொயோட்டா ஃபார்ச்சூனர் பிரபலமாக இருக்கும் மற்றொரு சந்தையான தாய்லாந்தில். அத்துடன் வழக்கமான ஃபார்ச்சூனரும் அந்த நாட்டில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் வேரியண்ட் இன்னும் ஸ்டைலானதாக இருக்கே!! விலையும் குறைவுதான்...

தாய்லாந்தில் புதிய ஃபார்ச்சூனர் ஆனது லீடர் ஜி மற்றும் லீடர் வி என 2 புதிய வேரியண்ட்களை பெற்றுள்ளது. இதில் லீடர் வி வேரியண்ட் 2-சக்கர-ட்ரைவ் தேர்வில் மட்டுமின்றி, 4-சக்கர-ட்ரைவ் தேர்விலும் கிடைக்குமாம். தாய்லாந்து நாட்டு சந்தையில் லீடர் ஜி வேரியண்ட்டின் விலை 1,371,000 பாட் (ரூ.29.85 லட்சம்) ஆகவும், லீடர் வி வேரியண்ட்டின் விலை 1,490,000 பாட் (ரூ.32.42 லட்சம்) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் வேரியண்ட் இன்னும் ஸ்டைலானதாக இருக்கே!! விலையும் குறைவுதான்...

அதுவே 4-சக்கர-ட்ரைவ் தேர்வில் லீடர் வி வேரியண்ட்டின் விலை 1,560,000 பாட் ஆகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.33.94 லட்சம். இவை அந்த நாட்டில் முந்தைய ஃபார்ச்சூனரின் விலைகளை காட்டிலும் 20,000- 24,000 பாட், அதாவது ரூ.44 ஆயிரத்தில் இருந்து ரூ.52 ஆயிரம் வரையில் அதிகமாகும்.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் வேரியண்ட் இன்னும் ஸ்டைலானதாக இருக்கே!! விலையும் குறைவுதான்...

ஃபார்ச்சூனர் லெஜண்டர் எந்தவொரு மாற்றமுமின்றி 1,673,000 பாட் (ரூ.36.39 லட்சம்) என்கிற ஆரம்ப விலையில் தாய்லாந்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய வேரியண்ட்கள் அனைத்திலும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஃபார்ச்சூனரின் புதிய லீடர் வேரியண்ட்கள் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என இரு பக்கங்களிலும் குறிப்பிடத்தக்க அப்டேட்களை பெற்றுள்ளன.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் வேரியண்ட் இன்னும் ஸ்டைலானதாக இருக்கே!! விலையும் குறைவுதான்...

இவற்றின் புதிய முன்பக்க க்ரில் அமைப்பானது கிட்டத்தட்ட ஃபார்ச்சூனர் லெஜண்டர் மாடலை ஒத்து காணப்படுகிறது. புதிய லீடர் வேரியண்ட்களில் பக்கவாட்டு படிக்கட்டு உள்பட சில பாகங்கள் முற்றிலுமாக கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதனால் லெஜண்டரை போன்று புதிய ஃபார்ச்சூனர் லீடர் கார்களும் ஸ்போர்டியரான தோற்றத்தில் காட்சியளிக்கின்றன.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் வேரியண்ட் இன்னும் ஸ்டைலானதாக இருக்கே!! விலையும் குறைவுதான்...

இந்த கார்களில் 18-இன்ச் அலாய் சக்கரங்கள், பிஎம் 2.5 காற்று வடிக்கட்டி உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் இந்த கார்களின் உட்புற கேபினில் 4.2 இன்ச் டிஎஃப்டி திரை, 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு, லெதர் இருக்கைகள் & ஸ்டேரிங் சக்கரம், க்ரோம் ஹைலைட்கள், ஆட்டோமேட்டிக் ஏசி, எலக்ட்ரிக் மூலமாக 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள் என ஏகப்பட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் வேரியண்ட் இன்னும் ஸ்டைலானதாக இருக்கே!! விலையும் குறைவுதான்...

பாதுகாப்பு அம்சங்களாக முன்பக்க & பின்பக்க சென்சார்கள், ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி, 6 இடங்களில் பொருத்தப்பட்ட பார்க்கிங் சென்சார் அலாரம் மற்றும் ரிவர்ஸில் வரும்போது பின்பக்கத்தில் குறுக்காக வாகனம் வருவதை எச்சரிக்கும் அமைப்பு முதலியவற்றுடன் புதிய ஃபார்ச்சூனர் லீடர் வேரியண்ட்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் வேரியண்ட் இன்னும் ஸ்டைலானதாக இருக்கே!! விலையும் குறைவுதான்...

இயக்க ஆற்றலை வழங்க புதிய ஃபார்ச்சூனர் லீடர் வேரியண்ட்டில் 2.4 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 3,400 ஆர்பிஎம்-இல் 150 பிஎஸ் மற்றும் 1,600- 2,000 ஆர்பிஎம்-இல் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் வேரியண்ட் இன்னும் ஸ்டைலானதாக இருக்கே!! விலையும் குறைவுதான்...

இந்த டிரான்ஸ்மிஷன் அமைப்பில் சதுர வடிவிலான கியர்மாற்றி மற்றும் பெடில் ஷிஃப்ட் உள்ளிட்டவை ஒருங்கிணைக்கப்படுகின்றன. சிறந்த டிரைவிங் டைனாமிக்ஸிற்கு ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட டிரைவ் மோட்கள் வழ்ங்கப்பட்டுள்ளன. ஃபார்ச்சூனர் லெஜண்டரிலும் இதே டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் வேரியண்ட் இன்னும் ஸ்டைலானதாக இருக்கே!! விலையும் குறைவுதான்...

ஆனால் அதில் கூடுதலாக 2.8 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வும் கொடுக்கப்படுகிறது. இது 204 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் இந்தியா உள்பட ஆசிய சந்தைக்காக புதிய தலைமுறை ஃபார்ச்சூனரின் வடிவமைப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota introduced new leader variant for fortuner suv details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X