உண்மையாவே எமன்தான்... தப்பி தவறி கூட கருப்பு கலர் காரை வாங்க கூடாது... இந்த விஷயம் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

தப்பி தவறி கூட கருப்பு கலர் காரை ஏன் வாங்க கூடாது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உண்மையாவே எமன்தான்... தப்பி தவறி கூட கருப்பு கலர் காரை வாங்க கூடாது... இந்த விஷயம் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

கார்கள் தற்போது நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறி விட்டன. கார்களை வாங்கும் பலரும் அதன் கலருக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர். இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் கருப்பு கலர் கார்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. ஆனால் கருப்பு கலர் கார்களில் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

உண்மையாவே எமன்தான்... தப்பி தவறி கூட கருப்பு கலர் காரை வாங்க கூடாது... இந்த விஷயம் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

விரைவாக சூடாகி விடும்

பொதுவாக எந்த கலர் காரை வெயிலில் சற்று நேரம் நிறுத்தினாலும் கூட தாங்க முடியாத அளவிற்கு சூடாகி விடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மற்ற கலர் கார்களுடன் ஒப்பிடும்போது கருப்பு கலர் கார்கள் இன்னும் வேகமாக சூடாகும். குறிப்பாக வெயில் சுட்டெரிக்கும் நாட்களில் கருப்பு கலர் காரின் சூடாகும் விகிதம் மிகவும் அதிகமாக இருக்கும்.

உண்மையாவே எமன்தான்... தப்பி தவறி கூட கருப்பு கலர் காரை வாங்க கூடாது... இந்த விஷயம் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

வெள்ளை போன்ற மற்ற பிரகாசமான கலர்களுடன் ஒப்பிடும்போது, கருப்பு கலர் வெப்பத்தை மிக வேகமாக உறிஞ்சுவதுதான் இதற்கு காரணம். எனவே இந்தியாவின் தட்ப வெப்ப நிலைக்கு கருப்பு கலர் கார்கள் ஏற்றதாக இருக்காது. குறிப்பாக வெயில் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் கருப்பு கலர் கார்களை தவிர்ப்பது சிறந்தது.

உண்மையாவே எமன்தான்... தப்பி தவறி கூட கருப்பு கலர் காரை வாங்க கூடாது... இந்த விஷயம் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

கலர் எளிதில் மங்கிவிடும்

வெப்பத்தை உறிஞ்சும் திறன் அதிகமாக இருப்பதன் காரணமாக, கருப்பு கலர் கார்கள் எளிதில் மங்கிவிடும். உறிஞ்சப்படும் வெப்பத்தால்தான், காரின் கலர் விரைவாக மங்குகிறது. எனவே கருப்பு கலர் கார்கள் வெகு விரைவாகவே அதன் உண்மையான பளபளப்பு தன்மையை இழந்து விடும் வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக பழைய கார் போன்ற தோற்றம் ஏற்படலாம்.

உண்மையாவே எமன்தான்... தப்பி தவறி கூட கருப்பு கலர் காரை வாங்க கூடாது... இந்த விஷயம் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ரீசேல் வேல்யூ பெரிதாக இல்லை

இந்தியாவை பொறுத்தவரையில் கருப்பு கலர் துரதிருஷ்டவசமான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே கருப்பு கலரை பலரும் ஒதுக்கி விடுகின்றனர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில், கருப்பு கலர் ஆடைகளை அணிவதை கூட இங்கு நிறைய பேர் தவிர்க்கின்றனர். பல லட்ச ரூபாய் செலவழித்து வாங்கப்படும் கார் கலருக்கும் இது பொருந்தும்.

உண்மையாவே எமன்தான்... தப்பி தவறி கூட கருப்பு கலர் காரை வாங்க கூடாது... இந்த விஷயம் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

அபசகுணமாக கருதப்படுவதால், இந்தியாவில் பலர் கருப்பு கலர் கார்களை வாங்குவதில்லை. எனவே கருப்பு கலர் காருக்கு இங்கு சிறப்பான மறுவிற்பனை மதிப்பு (ரீசேல் வேல்யூ) இல்லை. நீங்கள் வாங்கிய கருப்பு கலர் காரை விற்பனை செய்வது என முடிவு செய்தால், காருக்கு கிடைக்க கூடிய விலையில், கருப்பு கலர் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

உண்மையாவே எமன்தான்... தப்பி தவறி கூட கருப்பு கலர் காரை வாங்க கூடாது... இந்த விஷயம் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

விபத்து அபாயம்

இரவு நேரங்களில் கருப்பு கலர் கார்கள், மற்ற வாகன ஓட்டுனர்களின் கண்களுக்கு எளிதில் தெரியாது. எனவே கருப்பு கலர் கார்கள், இரவு நேரங்களில் சாலை விபத்துக்களில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். குறிப்பாக இரவு நேரங்களில் கருப்பு கலர் கார்களில் லைட்களை ஆஃப் செய்து விட்டு பயணம் செய்வது, ஆபத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது.

உண்மையாவே எமன்தான்... தப்பி தவறி கூட கருப்பு கலர் காரை வாங்க கூடாது... இந்த விஷயம் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க கூடியவர்கள், கருப்பு கலர் கார்களை தவிர்ப்பது சிறந்தது. அதே நேரத்தில் கருப்பு கலரின் நேர் எதிர் வண்ணமாக கருதப்படும் வெள்ளை, இரவு நேரங்களிலும் உங்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கும். வெள்ளை கலர் கார்கள் இரவு நேரங்களிலும் மற்றவர்களின் பார்வைக்கு எளிதாக புலப்படும் என்பதால், சாலை விபத்துக்களில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

உண்மையாவே எமன்தான்... தப்பி தவறி கூட கருப்பு கலர் காரை வாங்க கூடாது... இந்த விஷயம் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

அழுக்குகளை எளிதில் ஈர்க்க கூடிய காந்தம்

அழுக்குகளை எளிதில் கவர்ந்து கொள்ளக்கூடியவையாக கருப்பு கலர் கார்கள் இருக்கின்றன. இதனால் கருப்பு கலர் கார்களை சுத்தம் செய்வதும், பராமரிப்பதும் கடினமான விஷயம். கருப்பு கலர் கார்கள் பெரும்பாலான நேரங்களில் அழுக்காகவே காட்சியளிக்கும். எனவே நீங்கள் அவற்றை அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டியதிருக்கும்.

உண்மையாவே எமன்தான்... தப்பி தவறி கூட கருப்பு கலர் காரை வாங்க கூடாது... இந்த விஷயம் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

கீறல்கள் மற்றும் கறைகள் தெளிவாக தெரியும்

கருப்பு கலர் கார்களில் கீறல்கள் விழுந்தாலோ அல்லது கறைகள் ஏற்பட்டாலோ அவை தெளிவாக தெரியும். குறிப்பாக கருப்பு கலர் கார்களின் மீது பறவைகள் எச்சம் இட்டால், அவை மற்றவர்களின் கண்களுக்கு மிக எளிதாக புலப்படும். எனவே இவற்றையும் நீங்கள் அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
6 reasons why you should not buy a black colour car
Story first published: Tuesday, May 24, 2022, 19:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X