பாலிவுட் நட்சத்திரங்களும், அவர்களது கார் நம்பர் பிளேட்டில் அடங்கியிருக்கும் ரகசியமும்...!!

Posted By:

வாகனங்களில் பலருக்கும் பேன்ஸியான பதிவு எண் வாங்கி போட்டுக் கொள்வதில் ஆர்வம் உண்டு. அதனால், சில ஆர்டிஓ அலுவலங்களில் பேன்ஸி எண்கள் கொண்ட பதிவு எண்கள் லட்சகக்கணக்கில் ஏலம் விடப்படுகின்றன.

அதேநேரத்தில், பேன்ஸி நம்பர் என்பதையும் தாண்டி, சிலருக்கு பதிவு எண்களின் கூட்டுத் தொகைக்கும், தங்களது வளமான வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதாக கருதி, அந்த குறிப்பிட்ட பதிவு எண்ணை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ராசி என்ற மூட நம்பிக்கையோ அல்லது தனித்துவம் இருக்க வேண்டும் என்ற கருத்துக்களின் அடிப்படையில், இது பலருக்கும் பொதுவான விஷயமாகவே இருக்கிறது. இதில், பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டும் விதி விலக்கா என்ன? அவ்வாறு, வாகன பதிவு எண்களையும், தங்களது வாழ்க்கையையும் முடிச்சுப் போட்டுக்கொண்டிருக்கும் சில பாலிவுட் பிரபலங்களை ஸ்லைடரில் காணலாம்.

 01. ரன்பீர் கபூரும், எட்டாம் நபரும்..

01. ரன்பீர் கபூரும், எட்டாம் நபரும்..

சீனா உள்பட, உலகின் பல நாடுகளில் 8 என்ற எண் அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. ஆனால், நம்மூரில் 8ம் எண் ராசியில்லாத நம்பராக கருதப்படுகிறது.ஆனால், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தனது அனைத்து கார்களுக்கும் 8ம் நம்பரையே தேர்வு செய்து வாங்குகிறார். அது ராசியானதாக கருதுகிறாரோ அல்லது 8ம் எண் மீதுள்ள மூட நம்பிக்கையை உடைக்கும் விதமாக பயன்படுத்துகிறாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

Photo credit: hdpicswale

02. ஷாரூக்கான்

02. ஷாரூக்கான்

பாலிவுட் பாதுஷா என்று அழைக்கப்படும் நடிகர் ஷாரூக்கான் ராசியாக கருதும் நம்பர் 555. தனது அனைத்து கார்களின் பதிவெண்களையும் 555 என்று வருமாறு பார்த்துக் கொள்கிறார்.

03. சயீப் அலிகான்

03. சயீப் அலிகான்

பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் தனது பிறந்த நாள் எண்ணை குறிப்பிடும் வகையில், 1970 என்ற எண்ணை பயன்படுத்துகிறார். அதுவும் அவரது பிறந்த தினமான 16ம் தேதியின் கூட்டு எண்ணான 7 என்பது வருமாறும் அவர் பார்த்துக் கொள்கிறார்.

Photo credit: Pixcooler

 04. ரீத்தேஷ் தேஷ்முக்

04. ரீத்தேஷ் தேஷ்முக்

அரசியல் குடும்ப பின்னணியிலிருந்து வந்த பாலிவுட் நடிகர் ரீத்தேஷ் தேஷ்முக்கின் அனைத்து வாகனங்களுக்கும் ஒன்றை பதிவு எண்ணாக பெற்று வருகிறார். ஒன்று மட்டுமல்ல, அவரது பெயரின் முதல் ஆங்கில எழுத்தான R என்பதை குறிக்கும் வகையில், R 1 என்ற பதிவெண்ணை பயன்படுத்துகிறார்.

05. ஷாகீத் கபூர்

05. ஷாகீத் கபூர்

அமிதாப் பச்சன் போன்றே தனது பிறந்தநாளான பிப்ரவரி 25-ன் கூட்டுத் தொகையான ஏழாம் எண்ணை அதிர்ஷ்டமாக கருதுகிறார் ஷாகீத் கபூர். அவரது ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி, ஹார்லி டேவிட்சன் பைக் என அனைத்தும் 700 என்ற பதிவெண்ணை கொண்டிருக்கிறது.

Photo credit: hdpicswale

06. சஞ்சய் தத்

06. சஞ்சய் தத்

சொகுசு கார்கள் மீது தீராத மோகம் கொண்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், 4545 என்ற பதிவெண்களையே அனைத்து கார்களுக்கும் வாங்கி பயன்படுத்துகிறார். அவரது மனைவி மான்யாட்டாவுக்கு பரிசளித்த ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காருக்கும் இதே பதிவெண்ணை வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

07. அமிதாப் பச்சன்

07. அமிதாப் பச்சன்

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனின் கார்கள் அனைத்தும் 2 என்ற பதிவு எண் கொண்டிருக்கும். அதாவது, அவரது பிறந்த தேதியான 11-ன் கூட்டுத் தொகையை குறிக்கும் விதத்தில் 2 என்ற பதிவு கொண்டதாக இருக்கும். அத்துடன், சில கார்களில் அவரை பிக் பி என்று அழைப்பதன் அடையாளமாக BB என்ற வரிசை எழுத்துக்களையும் கொண்டிருப்பதையும் காண முடிகிறது.

Photo credit: yahoo

இதர சுவாரஸ்யச் செய்திகள்

01. ரூ.10 லட்சத்தில் பேன்ஸி நம்பர் வாங்கிய சாமியார்...

02. பேன்ஸி நம்பர் பிளேட்டுக்கு 55 கோடி ஆஃபர்...

03. ரூ.9 லட்சத்தில் காருக்கு பேன்ஸி எண் வாங்கிய ரத்தோர்

ஆட்டோமொபைல் செய்திகள் உடனுக்குடன்...

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்

 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Bollywood Stars And Their Superstitious Number Plates.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more