”ஹீரோ பைக் வாங்கினால் ஆடு இலவசம்...” தமிழ்நாடு ஷோரூமின் விநோத தீபாவளி ஆஃபர்..!!

Written By:

பண்டிகை கால விற்பனைக்காக பல்வேறு வாகன நிறுவனங்கள் அறிவித்துள்ள ஆஃபர் குறித்த விவரங்களை தொடர்ந்து நமது டிரைவ்ஸ்பார்க் வலைதளத்தில் பார்த்து வருகிறோம்.

ஹீரோ பைக்கிற்கு ஆட்டை இலவசமாக வழங்கும் விநோத ஆஃபர்..!!

அந்த வகையில் தமிழகத்தின் ஹீரோ ஷோரூம் ஒன்று, ஹீரோ பைக்கிற்கு எதிர்பார்க்காத ஒரு ஆஃபரை அளித்து வாடிக்கையாளருக்கு அச்சர்யத்தை அளித்துள்ளது.

ஹீரோ பைக்கிற்கு ஆட்டை இலவசமாக வழங்கும் விநோத ஆஃபர்..!!

இந்தாண்டிற்கான பண்டிகை காலத்திற்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து, ஹீரோ நிறுவனம் அதை நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதன் காரணமாக ஒரே நாளில் 100 புக்கிங்கை பெற்ற பெருமை எல்லாம் ஹீரோவிற்கு 2017 பண்டிகை காலம் அளித்துள்ளது.

ஹீரோ பைக்கிற்கு ஆட்டை இலவசமாக வழங்கும் விநோத ஆஃபர்..!!

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஹீரோ ஷோரூம் , அக். 11 முதல் 14ம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு என்று ஒரு அதிரடி ஆஃப்ரை அறிவித்தது.

ஹீரோ பைக்கிற்கு ஆட்டை இலவசமாக வழங்கும் விநோத ஆஃபர்..!!

அதன்படி, ஹீரோ மாடல் பைக்குகள் வாங்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு, ஷோரூம் சார்பாக இலவசமாக வழங்கப்படும் என்பதே அந்த ஆஃபர்.

Recommended Video - Watch Now!
Triumph Street Scrambler Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ஹீரோ பைக்கிற்கு ஆட்டை இலவசமாக வழங்கும் விநோத ஆஃபர்..!!

இதை அறிந்த வாடிக்கையாளர்கள் பலர், அந்த ஷோரூமிற்கு படை எடுக்க தொடங்கினர். தொலைப்பேசி அழைப்புகள், விசாரணை என பைக்கிற்கான புக்கிங்க்ஸ் மலையாக குவிந்தன.

ஹீரோ பைக்கிற்கு ஆட்டை இலவசமாக வழங்கும் விநோத ஆஃபர்..!!

இப்படியே சென்றால், ஆஃப்ரை தொடர முடியாது என்பதை உணர்ந்த அந்த ஷோரூம், ஹீரோ பைக்கிற்கு ஒரு ஆடு என்ற ஆஃபரை இழுத்து மூடி கதவை சாத்தியது.

ஹீரோ பைக்கிற்கு ஆட்டை இலவசமாக வழங்கும் விநோத ஆஃபர்..!!

ஷோரூம் அறிவித்த இந்த ஆஃபரை பற்றிய பேசிய அதன் உரிமையாளர் வெங்கடசுவாமி,

"பண்டிகை கால் விற்பனையில் நாங்கள் தனித்து நிற்க விரும்பினோம். அதனால் ஹீரோ பைக்குகளுக்கு ஆடு இலவசம் என்ற ஆஃப்ரை அறிவித்தோம்".

ஹீரோ பைக்கிற்கு ஆட்டை இலவசமாக வழங்கும் விநோத ஆஃபர்..!!

"ஆனால் அதற்கான ஆர்வம் வாடிக்கையாளர்களிடம் அதிகரிக்கவே, புதிய பைக்கிற்கு ஆடு என்ற ஆஃபரை தொடங்கும் முன்பே நிறுத்தப்பட்டு விட்டது" என்று கூறினார்.

ஹீரோ பைக்கிற்கு ஆட்டை இலவசமாக வழங்கும் விநோத ஆஃபர்..!!

இருந்தாலும் இளையாங்குடி பகுதியில் உள்ள இந்த குறிப்பிட்ட ஹீரோ ஷோரூமில் பைக்குகளை வாங்குவோருக்கு, புதிய சோபா செட் மற்றும் பைக் எஸ்க்சேஞ்ச் போன்ற மற்ற ஆஃபர்கள் இன்னும் தொடர்கின்றன.

ஹீரோ பைக்கிற்கு ஆட்டை இலவசமாக வழங்கும் விநோத ஆஃபர்..!!

வரவேற்பு அதிகமாக இருக்கும் போது, ஷோரூம் ஆஃபரை நிறுத்த காரணமாக இருந்தது, நிதி பற்றாக்குறை தான்.

ஹீரோ பைக்குகளுக்கு ஆடு இலவசம் என்றால், ஒரு ஆட்டை வாங்கி பராமரிக்க குறைந்தது ரூ.3000 வரை தேவை.

ஹீரோ பைக்கிற்கு ஆட்டை இலவசமாக வழங்கும் விநோத ஆஃபர்..!!

இதை ஷோரூமால் கட்டுப்படுத்த முடியாது என்பதால், பைக்கிற்கு ஆடு என்ற ஆஃபரை சிவகங்கை ஹீரோ ஷோரூம் ரத்து செய்துள்ளது.

இதனால் இளையாங்குடி பகுதியில் இருக்கும் வாடிக்கையாளர்கள், ஆடு ஆஃபர் ரத்து செய்யப்பட்டதில் வருத்தம் அடைந்துள்ளனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Sivaganagi District Hero Showroom announce Free Goat offer for Purchasing new hero Bike. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark