உயிர் காக்கும் கருவி... இப்படி ஒரு காரியத்தை செய்ததா மஹிந்திரா? அதிர வைக்கும் தகவலை சொன்ன டாக்டர்...

கொரோனா வைரஸிடம் இருந்து உயிர் காக்கும் கருவியை தயாரித்ததில், மஹிந்திரா நிறுவனம் மீது அதிர வைக்கும் குற்றச்சாட்டை டாக்டர் ஒருவர் கூறியுள்ளார்.

உயிர் காக்கும் கருவி... இப்படி ஒரு காரியத்தை செய்ததா மஹிந்திரா? அதிர வைக்கும் தகவலை சொன்ன டாக்டர்...

உலகம் முழுவதும் உள்ள மக்களால் தற்போது அதிகம் உச்சரிக்கப்படும் இரண்டு வார்த்தைகள் கொரோனா வைரஸ் மற்றும் கோவிட்-19 ஆகியவைதான். கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19, சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக நம்பப்படுகிறது. கடுமையான பாதிப்புகளில் இருந்து சீனா மீண்டு வர தொடங்கி விட்டாலும், உலகின் மற்ற ஒரு சில நாடுகள் நிலைகுலைந்து போயுள்ளன.

உயிர் காக்கும் கருவி... இப்படி ஒரு காரியத்தை செய்ததா மஹிந்திரா? அதிர வைக்கும் தகவலை சொன்ன டாக்டர்...

குறிப்பாக இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவுவதால், மருத்துவ உபகரணங்களின் தேவை தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக வென்டிலேட்டர்கள்தான் மிக அதிக அளவில் தேவைப்படுகின்றன.

உயிர் காக்கும் கருவி... இப்படி ஒரு காரியத்தை செய்ததா மஹிந்திரா? அதிர வைக்கும் தகவலை சொன்ன டாக்டர்...

நோயாளிகளின் சுவாச மண்டலத்தை தாக்கும் கோவிட்-19 வைரஸ் அவர்களுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தி உயிரை பறிக்கிறது. எனவே வென்டிலேட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. நிலைமை கையை மீறி சென்று கொண்டிருப்பதால், வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்கும்படி, ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

உயிர் காக்கும் கருவி... இப்படி ஒரு காரியத்தை செய்ததா மஹிந்திரா? அதிர வைக்கும் தகவலை சொன்ன டாக்டர்...

இதனை ஏற்று டெஸ்லா, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் பணிகளில் களமிறங்கியுள்ளன. நமது இந்தியாவை பொறுத்தவரை, வென்டிலேட்டர்களை தயாரிக்கவுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்தது. மஹிந்திராவின் இந்த அறிவிப்பிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

உயிர் காக்கும் கருவி... இப்படி ஒரு காரியத்தை செய்ததா மஹிந்திரா? அதிர வைக்கும் தகவலை சொன்ன டாக்டர்...

இதன்பின் உடனடியாக பணிகளை தொடங்கிய மஹிந்திரா நிறுவனம் வெறும் 48 மணி நேரத்திற்கு உள்ளாக வென்டிலேட்டர் புரோட்டோடைப்பை உருவாக்கி அசத்தியது. வெறும் 7,500 ரூபாய் என்ற மிகவும் மலிவான விலையில், இந்த இடைக்கால உயிர் காக்கும் கருவி விற்பனைக்கு வரலாம் என்று வெளியான தகவல்கள், மஹிந்திரா நிறுவனத்திற்கு நற்பெயரை சம்பாதித்து கொடுத்தன.

உயிர் காக்கும் கருவி... இப்படி ஒரு காரியத்தை செய்ததா மஹிந்திரா? அதிர வைக்கும் தகவலை சொன்ன டாக்டர்...

அதிநவீன கருவிகளின் விலை 5 முதல் 10 லட்ச ரூபாய் வரை வரும் நிலையில், வெறும் 7,500 ரூபாய் என்பதால், மஹிந்திரா நிறுவனத்தின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படிப்பட்ட சூழலில், இந்த உயிர் காக்கும் கருவிகள் தொடர்பாக மஹிந்திரா நிறுவனத்தின் மீது திடுக்கிடும் புகார் ஒன்று தற்போது கூறப்பட்டுள்ளது.

உயிர் காக்கும் கருவி... இப்படி ஒரு காரியத்தை செய்ததா மஹிந்திரா? அதிர வைக்கும் தகவலை சொன்ன டாக்டர்...

ஆம், மஹிந்திரா நிறுவனத்தின் மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது. விலை மலிவான தனது வென்டிலேட்டர் டிசைனை திருடி விட்டதாக, மஹிந்திரா நிறுவனம் மீது பிஜிஐஎம்இஆர் (PGIMER - Post Graduate Institute of Medical Education & Research) டாக்டர் ஒருவர் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

உயிர் காக்கும் கருவி... இப்படி ஒரு காரியத்தை செய்ததா மஹிந்திரா? அதிர வைக்கும் தகவலை சொன்ன டாக்டர்...

சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்இஆரின் பேராசிரியர் ஒருவர்தான், தனது விலை மலிவான வென்டிலேட்டரின் ஐடியாவை மஹிந்திரா நிறுவனம் திருடி விட்டதாக புகார் தெரிவித்துள்ளார். அவரது பெயர் டாக்டர் ராஜிவ் சவுகான். இவர் பிஜிஐஎம்இஆரில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அத்துடன் கடந்த ஒரு வருடமாக வென்டிலேட்டரை டிசைன் செய்யும் பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

உயிர் காக்கும் கருவி... இப்படி ஒரு காரியத்தை செய்ததா மஹிந்திரா? அதிர வைக்கும் தகவலை சொன்ன டாக்டர்...

பெங்களூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் நிபுணர்களுடன் இணைந்து டாக்டர் ராஜிவ் சவுகான் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர்தான் தற்போது மஹிந்திரா மீது குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை மஹிந்திரா குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எனினும் இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உயிர் காக்கும் கருவி... இப்படி ஒரு காரியத்தை செய்ததா மஹிந்திரா? அதிர வைக்கும் தகவலை சொன்ன டாக்டர்...

இதுகுறித்து டாக்டர் ராஜிவ் சவுகான் கூறுகையில், ''இந்த சாதனம் தொடர்பான பணிகளை நாங்கள் செய்து வந்தோம். இது தானியங்கி சுவாச சாதனமாக செயல்படக்கூடியது. இது விலை குறைவானது என்பதால், வென்டிலேட்டர்களை வாங்க முடியாத மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்களுக்கு நல்ல தீர்வாக இருக்கும்'' என்றார்.

உயிர் காக்கும் கருவி... இப்படி ஒரு காரியத்தை செய்ததா மஹிந்திரா? அதிர வைக்கும் தகவலை சொன்ன டாக்டர்...

அத்துடன் சட்டப்பூர்வமான நோட்டீஸை மஹிந்திரா நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் டாக்டர் ராஜிவ் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புரோட்டோடைப் குறித்த தகவல்களை கடந்த ஜனவரி மாதம் அப்லோட் செய்ததாகவும், காப்புரிமை அனுமதி கடந்த மார்ச் மாதம் வந்ததாகவும் ராஜிவ் சவுகான் கூறியுள்ளார்.

உயிர் காக்கும் கருவி... இப்படி ஒரு காரியத்தை செய்ததா மஹிந்திரா? அதிர வைக்கும் தகவலை சொன்ன டாக்டர்...

இதற்கிடையே கோவிட்-19 வேகமாக பரவ தொடங்கியதால், மிகப்பெரிய அளவிலான உற்பத்திக்கு, இந்த குழு மஹிந்திரா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. அப்போது மஹிந்திரா நிறுவன பிரதிநிதிகள் தனது கண்டுபிடிப்பு பற்றிய தகவல்களை எடுத்து கொண்டு, அடுத்த 48 மணி நேரத்தில் அம்பு பேக்கை (Ambu Bag) தங்களது சொந்த தயாரிப்பாக அறிமுகம் செய்து விட்டதாக ராஜிவ் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார்.

டாக்டர் ராஜிவ் சவுகானின் இந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் மஹிந்திரா நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Coronavirus Pandemic: PGIMER Assistant Professor Accuses Mahindra And Mahindra Of Stealing His Low-cost Ventilator Design. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X