காரின் முன் பகுதியில் சேட்டிலைட் டிஸ் பொருத்தியிருந்த வினோத ஆசாமி... காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்!

காரின் பானெட்டில் சேட்டிலைட் டிஸ் பொருத்தியிருந்த ஆசாமியால், காவல் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காரின் முன் பகுதியில் சேட்டிலைட் டிஸ் பொருத்தியிருந்த வினோத ஆசாமி... காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்!

நெடுஞ்சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் துறையினர் சில சமயங்களில் மிக வித்தியாசமான மனிதர்களை சந்திக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் சமீபத்தில் கியா கார் ஒன்றை நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அந்த காரின் மேற்கூரையில் சைக்கிள்களை ஏற்றி சென்றதே இதற்கு காரணம்.

காரின் முன் பகுதியில் சேட்டிலைட் டிஸ் பொருத்தியிருந்த வினோத ஆசாமி... காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்!

ஒன்றல்ல... இரண்டல்ல... மொத்தம் 10 சைக்கிள்களை காரின் மேற்கூரையில் வைத்து எடுத்து சென்றுள்ளனர். வழியில் காவல் துறையினரிடம் அந்த கார் சிக்கி கொண்டது. அந்த காரின் ஓட்டுனரிடம் லைசென்ஸ் இருந்தது. எனினும் அபாயகரமான முறையில் காரின் மேற்கூரையில் அளவுக்கு அதிகமான சரக்கை கொண்டு சென்றால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காரின் முன் பகுதியில் சேட்டிலைட் டிஸ் பொருத்தியிருந்த வினோத ஆசாமி... காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்!

இந்த வரிசையில் அமெரிக்காவில் தற்போது வித்தியாசமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் சமீபத்தில் டொயோட்டா ப்ரையஸ் கார் ஒன்றை தடுத்து நிறுத்தினார். அந்த காரின் பானெட்டில் சேட்டிலைட் டிஸ் பொருத்தப்பட்டிருந்ததுதான் இதற்கு காரணம்.

காரின் முன் பகுதியில் சேட்டிலைட் டிஸ் பொருத்தியிருந்த வினோத ஆசாமி... காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்!

அந்த புகைப்படத்தை காவல் துறையினர் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர். அத்துடன் இதுபோல் செய்வது சட்டத்திற்கு புறம்பானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சேட்டிலைட் டிஸ்ஸை பானெட்டில் பொருத்தினால், விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். ஓட்டுனர் சாலையை பார்ப்பதில் பிரச்னைகள் ஏற்படலாம் என்பது காவல் துறையினரின் கருத்து.

காரின் முன் பகுதியில் சேட்டிலைட் டிஸ் பொருத்தியிருந்த வினோத ஆசாமி... காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்!

பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால், வாகன ஓட்டிகள் இவ்வாறு செய்யக்கூடாது என காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சரி, சம்பந்தப்பட்ட காரின் ஓட்டுனர் எதற்காக சேட்டிலைட் டிஸ்ஸை காரில் பொருத்தியிருந்தார்? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இதற்கு காவல் துறையினரிடம் அவர் பதில் சொல்லியுள்ளார்.

காரின் முன் பகுதியில் சேட்டிலைட் டிஸ் பொருத்தியிருந்த வினோத ஆசாமி... காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்!

காரின் பானெட்டில் பொருத்தப்பட்டுள்ள சேட்டிலைட் டிஸ் மூலம் சிறப்பான சிக்னல் மற்றும் இன்டர்நெட் கனெக்டிவிட்டி கிடைப்பதாக அந்த காரின் ஓட்டுனர் கூறியுள்ளார். எனினும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருப்பதால், கார் ஓட்டுனரின் இந்த பதில் காவல் துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

காரின் முன் பகுதியில் சேட்டிலைட் டிஸ் பொருத்தியிருந்த வினோத ஆசாமி... காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்!

இந்த விதிமுறை மீறலுக்காக காவல் துறை அதிகாரிகள் அவருக்கு அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவருக்கு எவ்வளவு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது? என்பது உறுதியாக தெரியவில்லை. மேலும் காவல் துறை அதிகாரிகளிடம் அந்த ஓட்டுனர் தனது செயலை நியாயப்படுத்தி பேசியதாகவும் கூறப்படுகிறது.

காரின் முன் பகுதியில் சேட்டிலைட் டிஸ் பொருத்தியிருந்த வினோத ஆசாமி... காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்!

இந்தியாவிலும் கூட வாகன ஓட்டிகள் ஒரு சிலர் விதிமுறைகளை மீறி மாடிஃபிகேஷன்களை செய்கின்றனர். இது விபத்திற்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் யாரும் உணர்வதில்லை. வாகனங்களில் மாடிஃபிகேஷன் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அத்தகைய வாகன ஓட்டிகள் மீது காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Driver Ticketed By Cops For Attaching Satellite Dish On Car Bonnet. Read in Tamil
Story first published: Thursday, July 8, 2021, 22:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X