பத்து ஆண்டுக்கு முன் செய்த தவறைக்கூட எளிதில் காட்டிக்கொடுக்கும்: நடைமுறைக்குவரும் புதிய லைசென்ஸ்!

மத்திய போக்குவரத்துத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு முறையில் புதிய வழிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது.

பத்து ஆண்டுக்கு முன்பு செய்த தவறைக் கூட எளிதில் காட்டிக்கொடுத்துவிடும்: வருகிறது புதிய லைசென்ஸ் விதிமுறை!

இந்திய வாகன சட்டத்தின்படி, சாலையில் வாகனங்களை இயக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். இதன்பின்னரே, சாலையில் வாகனத்தை இயக்க உரிமம் வழங்கப்படும். அதேபோன்று, ஓட்டுநர் உரிமம் பெறவேண்டுமானால், போக்குவரத்துத்துறைக் கொடுக்கும் சில வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, சாலையில் வாகனத்தை இயக்குவதர்க்கான தகுதியானவர் என உரிமம் அளிக்கப்படும்.

பத்து ஆண்டுக்கு முன்பு செய்த தவறைக் கூட எளிதில் காட்டிக்கொடுத்துவிடும்: வருகிறது புதிய லைசென்ஸ் விதிமுறை!

ஆனால், சிலரோ ஓட்டுநர் உரிமத்தைப் பெறாமல், தீவிரவாதிகளைப் போல் பதுங்கி பதுங்கி வாகனங்களை இயக்கி வருகின்றனர். மேலும், சிலர் வாகன உரிமம் வாங்குவது மிகப்பெரிய சிக்கல் என நினைத்துக்கொண்டு, ஊரைச் சுற்றி வளம் வருகின்றனர். அதேபோல, வழியில் போலீஸ் பிடித்தால், நூறு அல்லது ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டு தப்பித்துவிடலாம் என தவறான கணக்குப்போட்டு வருகின்றனர்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுவது என்பது நமக்குப் பெரும் ஆபத்தான ஒன்றும் கூட, மேலும் இது நமக்கு பல விதங்களில் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

பத்து ஆண்டுக்கு முன்பு செய்த தவறைக் கூட எளிதில் காட்டிக்கொடுத்துவிடும்: வருகிறது புதிய லைசென்ஸ் விதிமுறை!

நீங்கள் 16 வயதை பூர்த்தி அடைந்தவராக இருந்தால், 50சிசி-க்கு குறைவான கியர் இல்லாத மொபட் ரக வாகனங்களை இயக்கலாம். அதேபோன்று 18 வயதினை பூர்த்தி செய்தவராக இருந்தால் மட்டுமே 50சிசிக்கு மேற்பட்ட அனைத்து ரக வாகனங்களையும் இயக்க தகுதியானவர்களாக கருதப்படுவர். அவ்வாறு, இருசக்கரங்கள் அல்லது அதற்கு மேலான சக்கரங்களைக் கொண்டு இயங்கும் ஆட்டோ, கார், பஸ் ஆகிய கனரக வாகனங்களை இயக்க விண்ணப்பிக்கலாம்.

இதுபோன்று சாலையில் வாகனங்களை இயக்கவதற்கு பல்வேறு சட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், மத்திய போக்குவரத்துத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், இந்தியாவுக்கான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு செய்யும் முறையில் புதிய வழிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. அதற்கான அறிவிப்பையும் சமீபத்தில் வெளியிட்டது.

பத்து ஆண்டுக்கு முன்பு செய்த தவறைக் கூட எளிதில் காட்டிக்கொடுத்துவிடும்: வருகிறது புதிய லைசென்ஸ் விதிமுறை!

இந்த புதிய அறிவிப்பின்படி, இனி ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகிய இரண்டும் ஒன்றாகத் தான் இருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும், இந்த புதிய வாகன விதிமுறைகளின்படி வழங்கப்படும் புதிய சான்றில், க்யூஆர் கோட் (QR Code) கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த க்யூஆர் கோடின் மூலம் வாகன ஓட்டி மற்றும் வாகனம் குறித்த அனைத்து தகவல்களையும் எளிதில் பெற முடியும். மேலும், புதிதாக வழங்கப்பட இருக்கும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு சான்றிதழ் ஏடிஎம் கார்டு வடிவத்தில் பிளாஸ்டிக் கார்டாக வழங்கப்படும்.

பத்து ஆண்டுக்கு முன்பு செய்த தவறைக் கூட எளிதில் காட்டிக்கொடுத்துவிடும்: வருகிறது புதிய லைசென்ஸ் விதிமுறை!

ஓட்டுநர் உரிம அட்டையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய வழிமுறை, அட்டையை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் அமல்படுத்த உள்ளது. மேலும், இந்த புதிய வாகன வதிமுறையின் முதல் நோக்கமே ஆன்லைன் டேட்டாபேஸ் உருவாக்குவதுதான். அவ்வாறு, இந்த சான்றில் வழங்கப்பட்டிருக்கும் க்யூஆர் கோட் மூலம் வாகன ஓட்டிகளின் பத்து ஆண்டுகளுக்கு முந்தைய அபராதம் குறித்த வரலாறுகள்கூட எளிதில் கண்டறிய முடியும்.

வாகனம் மற்றும் வாகன ஓட்டிகளின் அனைத்த தகவல்களும் இந்த ஒரே அட்டையின் மூலமாகவே அறிந்துகொள்ள முடியும். மேலும், அட்டையின் பின்புறத்தில் அவசர உதவி எண் இணைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய போக்குவரத்துத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் இந்த புதிய திட்டமானது நடப்பாண்டின் அக்படோபர் மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Driving License New Norms Coming In October. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X