பேட்டரியில் இயங்கும் விமானத்தை தயாரிக்கும் திட்டத்தை கையில் எடுத்த எலான் மஸ்க்!

பேட்டரியில் இயங்கும் மின்சார விமானத்தை உருவாக்கும் திட்டத்தை டெஸ்லா நிறுவனத்தின் ஸ்தாபகர் எலான் மஸ்க் கையில் எடுத்துள்ளார். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பேட்டரியில் இயங்கும் விமானத்தை தயாரிக்கும் திட்டத்தை கையில் எடுத்த எலான் மஸ்க்!

பேட்டரியில் இயங்கும் மின்சார கார் தயாரிப்பில் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் சிறந்து விளங்குகிறது. அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் புதிய போக்குவரத்து சாதனங்கள் குறித்த யோசனைகளை முன்வைப்பதிலும், அதனை நனவாக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

பேட்டரியில் இயங்கும் விமானத்தை தயாரிக்கும் திட்டத்தை கையில் எடுத்த எலான் மஸ்க்!

அந்த வகையில், ஹைப்பர்லூப் என்ற அதிவேக போக்குவரத்து திட்டத்தை அறிவித்து, அதனை நடைமுறை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சிகளில் தீவிரமாக உள்ளார். மேலும், ஸ்பேஸ்எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக மறுபயன்பாட்டு விண்வெளி ராக்கெட்டுகளை உருவாக்கும் முயற்சிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

பேட்டரியில் இயங்கும் விமானத்தை தயாரிக்கும் திட்டத்தை கையில் எடுத்த எலான் மஸ்க்!

இந்த நிலையில், அடுத்து ஒரு அசத்தல் திட்டத்தை அவர் கையில் எடுத்துள்ளார். அதாவது, பேட்டரியில் இயங்கும் மின்சார விமானங்களை உருவாக்கும் திட்டம் குறித்து பொறியாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

பேட்டரியில் இயங்கும் விமானத்தை தயாரிக்கும் திட்டத்தை கையில் எடுத்த எலான் மஸ்க்!

இந்த விமானம் ஹெலிகாப்டர் போன்று இருந்த இடத்தில் இருந்தே மேல் எழும்பி பறக்கும் திறன் வாய்ந்ததாக உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த திட்டம் சாத்தியம்தான் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பேட்டரியில் இயங்கும் விமானத்தை தயாரிக்கும் திட்டத்தை கையில் எடுத்த எலான் மஸ்க்!

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

பேட்டரியில் இயங்கும் மின்சார விமானங்கள் சாத்தியமா? அல்லது அதற்கான சக்திவாய்ந்த பேட்டரி இன்னும் உருவாக்கப்படவில்லையா? என்று ட்விட்டர் மூலமாக அவரது ஃபாலோவர் எழுப்பிய கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்.

பேட்டரியில் இயங்கும் விமானத்தை தயாரிக்கும் திட்டத்தை கையில் எடுத்த எலான் மஸ்க்!

உண்மைதான். விமானங்களுக்கான போதிய திறன் வாய்ந்த பேட்டரி இப்போது இல்லை. ஆனால், வரும் ஆண்டுகளில் பேட்டரி திறன் மேம்படும் என்று பதில் அளித்துள்ளார். லித்தியம் அயான் பேட்டரியை ஒப்பிடும்போது ஜெட் எரிபொருள் மிகுந்த திறன் மிக்கது. அதேநேரத்தில், மின் மோட்டார்கள் இலகுவானது என்பதுடன், பெட்ரோல் எஞ்சினைவிட மின்மோட்டார்கள் சிறப்பான இயக்குதல் திறனை வெளிப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

பேட்டரியில் இயங்கும் விமானத்தை தயாரிக்கும் திட்டத்தை கையில் எடுத்த எலான் மஸ்க்!

தற்போது லித்தியம் அயான் பேட்டரிகள் அதிகபட்சமாக 300 Wh/kg என்ற திறன் கொண்டதாக இருக்கின்றன. மின்சார விமானத்தை இயக்குவதற்கு 400 Wh/kg என்ற திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரிகள் தேவைப்படும் என்றும் விளக்கம் தெரிவித்துள்ளார்.

பேட்டரியில் இயங்கும் விமானத்தை தயாரிக்கும் திட்டத்தை கையில் எடுத்த எலான் மஸ்க்!

எனினும், தொடர் ஆராய்ச்சிகள் முயற்சிகள் காரணமாக இது சாத்தியம்தான் என்று கூறி இருக்கிறார். வரும் காலத்தில் ராக்கெட் தவிர்த்து, பிற அனைத்து போக்குவரத்து சாதனங்களும் பேட்டரியில் இயங்கும் வகையிலேயே இருக்கும் என்றும் எலான் மஸ்க் கூறி இருக்கிறார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tesla CEO Elon Musk is working on the electric airplane project, which he thinks could be viable in about 5 years.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X